சிவனடியார்களே! எங்கள் ஆலயத்தில் ஆறு தென்னிந்திய குருமஹா சந்நிதானங்களின் வருகைஇன்று எங்கள் ஆலயத்திற்கு ஆறு தென்னிந்திய குருமஹா சந்நிதானங்கள் வருகை தந்து எம்பெருமாட்டியையும் எம்பெருமானையும் தரிசித்து, அடியார்களை ஆசீர்வசித்தருளியமை ஓர் வரலாற்று சிறப்புமிக்க அரிய நிகழ்வாக பதிவு செய்யபபட்டுள்ளது . ஓம் நமசிவாய
கொடியேற்றத்திருவிழா – நாள் 1, 13-6-2026 சனிக்கிழமை
மகோற்சவ விஞ்ஞாபனம் -2026 வைகாசி மாதம் 29ம் நாள் 12-6-2026 வெள்ளிக்கிழமை: காலை 7.00 மணிக்குவீரபத்திரர் விசேட அபிஷேகமும், பூஜையும், காலை 8.00 மணிக்கு காளி அம்பாள் பொங்கல், அபிஷேக பூஜை. வைகாசி மாதம் 29ம் நாள் மாலை 6.00 மணிக்குஅனுஞ்ஞை, விநாயக்ர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேசபலி, வாதுசாந்தி, மிருத்சங்கிரகணம். வைகாசி மாதம் 30ம் நாள் 13-6-2026 சனிக்கிழமைமுதலாம் திருவிழா காலை 6.00 மணிக்கு கும்பபூஜை, அபிஷேகமும் தொடர்ந்து விஷேட பூஜை, காலை 8.30 மனிக்கு […]
மெய்யடியார்களே! எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டியும் 2026 ம் ஆண்டு 9ம் நாள் மகோற்சவ நன் நாளிலே, 9ம் திருவிழா உபயகாரர்களினால் மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டுவிக்கப்பட்ட சித்திரத்தேரிலே ஆரோகணிப்பார்கள் என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகிறோம். அனைவரும் வருக!, சித்திரத்தேரில் திருவுலா வரும் அலங்காரக் காட்சியைக் காண்க. 21.06.2026 அன்று நடைபெறும் நடராஜபெருமானின் இரதோற்சவத்தை தரிசிற்பதற்கு அனைவரையும் வருக வருக வென அழைக்கின்றோம்.இறையன்புடன் 9ம் திருவிழா உபயகாரர்கள்