நித்திய பூசைகள்
நாள்தோறும் காலை 6:00 மணிக்கு ஆலயயம் திறந்தவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் பால் நைவேத்தியம் வைத்து பூசை செய்தபின் காலைப் பூசை ஆரம்பமாகும்.
எல்லா மாதங்களிலும் நடைபெறும் விஷேச அபிஷேக பூசையுடன்கூடிய திருவிழாக்கள்.
மாதங்களின் பிறப்பன்று காலை 6:30 மணிக்கு மாதப்பிறப்பு பூசையுட சங்கிராந்திபூசை, மாதம்தொறும் வரும் பிரதோச நாளில் பிரதோச நாள்வழிபாடு பிற்பகல் 4:00 மணிக்கு பூசையுடன் ஆரம்பித்து பிரதோச நாயகா நாயகியர் உள்வீதி வலம் வரல்.
மாதம்தொறும் வரும் மகநட்சத்திரத்தன்று அதிகாலை 5:00 மணியில் இருந்து திவாசக முற்றோதல் ஆரம்பம்.
ஒவ்வொரு பெளர்ணமியன்றும் மாலை பூசையின் போது சிவகாமி அம்பாளின் வாசலில் ஶ்ரீ சக்கர யந்திர பூசை நடைபெறும்
ஆறுகாலப் பூசை 1.திருவனந்தல்: சூரியன் உதிக்க மூன்றேமுக்கால் நாழிகைக்கு முன்னர் ஆரப்பித்து நடத்தப்படும் பூசை 2.காலைச் சந்தி: சூரிய உதயம் தொடக்கம் ஏழரை நாழிகை காலம் வரை காலைச்சந்திக்குரிய காலம். 3.உச்சிக்காலம்: சூரிய உதயத்திலிருந்து பதினொன்றேகால் நாழைகைக்குப் பின் நடத்தப்படும் பூசை. 4.மாலைப் பூசை: சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு மூன்றேமுக்கால் நாழிகை தொடங்கி நடத்தப்படும் பூசை. 5.சாயரட்சை: (மகாசந்தி): சூரிய அஸ்தமனம் தொடங்கி ஏழரை நாழிகையில் செய்யப்படும் பூசை 6.அர்த்தசாமம்: சூரிய அஸ்தமனமாகி ஏழரை நாழிகைக்குமேல் பதினொன்றேகால நாழிகைக்குள் செய்யப்படும் பூசை குறிப்பு: தமிழ்க் கணிய அளவை 24 நிமிடம் = ஒரு நாழிகை 60 நாழிகை = ஒரு நாள்