மஹோற்சவ விஞ்ஞாபனம் பராப வருஷம்-2026

மகோற்சவ விஞ்ஞாபனம் -2026

வைகாசி மாதம் 29ம் நாள் 12-6-2026 வெள்ளிக்கிழமை: காலை 7.00 மணிக்கு
வீரபத்திரர் விசேட அபிஷேகமும், பூஜையும், காலை 8.00 மணிக்கு காளி அம்பாள் பொங்கல், அபிஷேக பூஜை.

வைகாசி மாதம் 29ம் நாள் மாலை 6.00 மணிக்கு
அனுஞ்ஞை, விநாயக்ர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேசபலி, வாதுசாந்தி, மிருத்சங்கிரகணம்.

வைகாசி மாதம் 30ம் நாள் 13-6-2026 சனிக்கிழமை
முதலாம் திருவிழா காலை 6.00 மணிக்கு
கும்பபூஜை, அபிஷேகமும் தொடர்ந்து விஷேட பூஜை, காலை 8.30 மனிக்கு வசந்தமண்டபப் பூஜை
முற்பகல் 10.30 மணிக்கு
கொடியேற்றம் தொடர்ந்து நவசந்தி ஆவாகன் உற்சவம், அருட்பிரசாதம் வழங்கல். மாலை 5.00 மணி
சாயரட்சைப் பூஜை, யகாரம்பம், ஸ்தம்ப பூஜை, இரவு 8.00 மணி வசந்தமண்டபப் பூஜை, உள்வீதி வலம் வருவார்.