பஞ்சபுராணம் தொகுதி1

நமச்சிவாயத்தை நாம் மறவோமே

பஞ்சபுராணம்:1

தேவாரம்: பண் நட்டபாடை இராகம்: நாட்டை
திருச்சிற்றம்பலம்
தோடுடையசெவி யன்விடை ஏறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் னுள்ளம்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.			1

திருவாசகம்: அச்சோப்பதிகம்
முத்திநெறி அறியாத மூர்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன்எனக் கருளியவா றார்ப்பெறுவார் அச்சோவே.		2		

திருவிசைப்பா:
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வுசூழ் கடந்ததோ ருணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவள ருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங் காக
வெளிவரளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனே விளம்புமா விளம்பே.				3	

திருப்பல்லாண்டு:
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லீந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே யிடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே						4
 
திருப்புராணம்:
ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப்
போதியா நிற்கும்தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி		5
	
திருப்புகழ்:
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையும் மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையும் முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற னிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
 
பஞ்சபுராணம்:2
தேவாரம்: பண் : தக்கேசி இராகம்: காம்போதி
திருச்சிற்றம்பலம்
வேதமோதி வெண்ணுல்பூண்டு வெள்ளைஎருதேறிப்
பூதஞ்சூழ்ப் பொலியவருவார் புலியின் உரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.			1

திருவசகம்: திருச்சாழல்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதுந் திருவாயால் மறைபோலுங் காணேடி
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.			2

திருவிசைப்பா:
கற்ரவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவ ரறியா மாணிக்க மலையைச்
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளங்
குளிரவென் கண்குளீர்ந் தனவே.				3

திருப்பல்லாண்டு:
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
   தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யுஞ்சில தேவர்
   சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத் திரள்மேரு
   விடங்கன் விடைப் பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந்தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.					4

திருப்புராணம்:
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி		5

திருப்புகழ்:
இறவாமல் பிறவாமல் எனையாள்சற் குருவாகி
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே
 
 
பஞ்சபுராணம்:3

தேவாரம்: பண்:சீகாமரம், இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே-		1

திருவாசகம்
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள் ஒளி பெருகி
உலப்பிலா ஆனந்தமாய
தேனிநை சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவ பெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கென பிடித்தேன்
எங்கு எழுந்து அருளுவதினியே				2

திருவிசைப்பா
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே-	3

திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள்
விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட்
செய்மின் குழாம்புகுந்(து)
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளபொருள்
பண்டும் மின்றுமென்று முள்ளபொரு ளென்றே
பல்லாண்டு கூறுதுமே -					4
 
திருப்புராணம்
ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி-		5

திருப்புகழ்: பழமுதிர் சோலை
காரணம தாக வந்து புவிமீதே
காலன் அணுகா திசைந்து கதிகாண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநட மேபு ரிந்து வருவாயே
ஆரமுத மான தந்தி மணவாளா
ஆறுமுகம் ஆறி ரண்டு விழியோனே
சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே.

பஞ்சபுராணம்:4

தேவாரம்: பண் கொல்லி 3ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே-		1

திருவாசகம்
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்துதடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே-		2

திருவிசைப்பா
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்(டு) எமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும்ஆட் கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும் அணிதில்லைச்
செம்பொன்செய் அம்பலத்தே சேர்ந்திருக்கை ஆயிற்றே-		3

திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத் திரள்மேரு
விடங்கன் விடைப் பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே-					4

திருப்புராணம்
தூயவெண் ணீறு துதைந்தபொன்
மேனியுந் தாழ்வடமும்
நாயகன் சேவடி தைவருஞ்
சிந்தையும் நைந்துருகிப்
பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயும் உடையார்
புகுந்தனர் வீதியுள்ளே-					5

திருப்புகழ்:
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே

பஞ்சபுராணம்:5

தேவாரம்: திருநாவுக்கரசர் நான்காம் திருமுறை திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே-	1

திருவாசகம்:
காலமுண் டாகவே காதல்செய் துய்மின் கருதரிய
ஞாலல்முண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே-		2

திருவிசைப்பா:
களையா உடலோடு சேரமான் ஆருரன்
விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிசூடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே-		3

திருப்பல்லாண்டு:
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உளறி உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே-	4

திருப்புராணம்
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபேர் இன்பவெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலந்தார்-			5

திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா
அற நாலைப் புகல்வோனே அவிநாசிப் பெருமாளே
 
 பஞ்சபுராணம்:6

தேவாரம்: திருநாவுக்கரசர், திருத்தாண்டகம். 
திருச்சிற்றம்பலம்
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறிதிட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ என்னிற்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே-			1

திருவாசகம்:
வேண்டத் தக்க தறிவோய்நீ 
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ 
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் 
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே-				2

திருவிசைப்பா:
ஏகநாயகனை இமையவர்க்(கு) அரசை
என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில்
போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்
பொன்னெடுஞ் சிவகையா வூர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே-				3

திருப்பல்லாண்டு:
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே-					4

திருப்புராணம்:
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்னிலையில் -		5

திருப்புகழ்
அற்றைக் கிரைதேடி அத்தத் திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா
கற்றுற் றுணர்போதாகச்சிப் பெருமாளே
 
பஞ்சபுராணம்:7

தேவாரம்: சுந்தர அருளியது பண் கொல்லி, 7ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தம்மையே புகழ்ந்(து) இச்சைபேசினும்
சார்வினுந்தொண்டர் தருகிலாப்
பொய்மையாளைரைப் பாடாதேஎந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோருங்கூறையும்
ஏத்தலாமிடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகமாள்வதற்கு
யாதும் ஐயுறவில்லையே.-					1

திருவாசகம்:
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே -					2

திருவிசைப்பா:
தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)
அதிலங்(கு) ஒருகூ(று) உன் கண்வைத்தவருக்(கு)
அமருல(கு) அளிக்கும்நின் பெருமை
பித்தனென்(று) ஒருகால் பேசுவரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!-				3

திருப்பல்லாண்டு:
தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)இவ் 
அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.-					4

திருப்புராணம்:
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத்
தேனக்கமலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்-		5
 
திருப்புகழ்
துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடு நீலக்கடலாலே
மெள்ளவரு சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளு தமிழ் பாடத் தெளிவோனே
செய்ய குமரேசத் திறாலோனே
வள்ளல் தொழு ஞானக் கழலோனே
வள்ளி மணவாளப் பெருமாளே.
 
 
பஞ்சபுராணம்: 8
தேவாரம்: சுந்தரர் பண் தக்கேசி 7ம் திருமுறை

திருச்சிற்றம்பலம்
பொன்னும்மெய் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானை
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்னதன் மையனென் றறியயொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம்வை கும்வயற் பழனத்தணி
ஆரூரா னைமறக் கலுமாமே-				1

திருவாசகம்: திருச்சதகம்
மெய்தான் அரும்பி விதிர் விதித்து
உன் விரையார் கழற்(கு)என்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்(து)உன்னைப் போற்றி
சயசய போற்றி யென்னும்
கைதான் நெகிழவி டேன்உடை
யாய்என்னைக் கண்டுகொள்ளே-				2

திருவிசைப்பா:
அன்ன நடையார் அமுத
மொழியார் அவர்கள் பயில்தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
தலத்துப் புலித்தோல் பியற்றிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
காண் விகிர்தன் ஆடுமே-					3
 
திருப்பல்லாண்டு :
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்
மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே-	4

திருப்புராணம்:
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார் தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார்-	5

திருப்புகழ்
இரவுபகல் பலகாலும் இயிலிசை முத்தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத்துவ ஞான
அரனருள் சற்புதல் வோனே அருணகிரிப் பெருமாளே

பஞ்சபுராணம்: 9

தேவாரம்: திருநாவுக்கரசர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கருவுற்ற நாள்முத லாகவுன்
பாதமே காண்பதற்கு
உருகிற்றென் உள்ளமும் நானுங்
கிடந்திலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால
வாயா திருவாரூரா
ஒருபற்றி லாமையுங் கண்டிரங்
காய் கச்சி யேகம்பனே-					1

திருவாசகம்:
இன்றென்க் கருளி இருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும்நீ யல்ல அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே-				2
 
திருவிசைப்பா:
முத்தியாளர் நான்மறையர்
மூவாயிர வர்நின்னோ(டு)
ஓத்தேவாழும் தன்மையாளர்
ஓதிய நான்மறையைத்
தெத்தேயென்று வண்டுபாடும்
தெந்தில்லை அம்பலத்துள்
அத்தா! உன்றன் ஆடல்காண
அணைவதும் என்றுகொலோ?-				3

திருப்பல்லாண்டு
நிட்டையி லாவுடல் நீத்தென்னை ஆண்ட
   நிகரிலா வண்ணங்கள்
சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டும்
   திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும்
   அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத் தானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே -					4

திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போதுன்
அடியின் கீழ் இருக்க என்றார்-				5

திருப்புகழ்
அகரமும் மாகி யதிபனு மாகி அதிகமு மாகி அகமாகி
அயனென் வாகி அரியென வாகி அரனென வாகி
அவர்மேலாய்
இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி
வரவேணும்
மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் னருளிய பூஜை மகிழ்கதிர் காம
முடையோனே
செகுகண சேகு தகுதிமி தோமி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு
பெருமாளே.