அபிராமி அந்தாதி

அபிராமிப் பட்டர் அருளியது

அபிராமி அந்தாதி 
காப்பு 
தாரமர்‌ கொன்றையுஞ்‌ சண்பக மாலையுஞ்‌ சாத்துந்தில்லை 
ஊரர்தம்‌ பாகத்‌ துமைமைந்த னேயுல கேழும்பெற்ற 
சீரபி ராமியந்‌ தாதியெப்‌ போதுமென்‌ சிந்தையுள்ளே 
காரமர்‌ மேனிக்‌ கணபதி யேநிற்கக்‌ கட்டுரையே. 

நூல்
திருமேனிவண்ணம்‌ சிந்தையைப்‌ பிணித்தமை கூறல்‌. 
உதிக்கின்ற செங்கதி ருச்சித்  திலக முணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்க மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொாடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கன்ற மேனி யபிராமி யென்றன் விழித்தணையே.1

எல்லாம் அவளென அறிந்தின்புற்றது.
துணையுந் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயுஞ் சுருதிகளின்
பணையுங் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையுங் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமுங்கையில்
அணையுந் திரிபுர சுந்தரி யாவ தறிந்தனமே. 2

அறிந்ததும் செறிந்ததும் பிறிந்ததும் பேசியது.
அறிந்தே னெவரு மறியா மறையை யறிந்துகொண்டு
செறிந்தே னுனது திருவடிக் கேதுரு வேவெருவிப்
பிறிந்தே னின்னன்பர் பெருமையெண் ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே, 3

இறைவனுநீயும் எழுந்தருள் என்றது.
மணிதருந் தேவரு மாயா முனிவரும் வந்துசென்னி
குனிதருஞ் சேவடிக் கோமள மேகொன்றை வார்சடைமேல்
பனிதருந் தங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த
புனிதரு நீயுமென் புந்தியெந் நாளும் பொருந்துகவே. 4

திருவடிப்பேறு.
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குன் மனோன்மணி வார்சடையோன் 
அருந்திய நஞ்சமு தாக்கிய வம்பிகை யம்புயமேல்
திருந்திய சுத்தரி யந்தரி பாதமென் சென்னியதே. 5

நினைவும் செயலும் நீயே என்றது.
சென்னிய துன்பொற் நிருவடித் தாமரை சிந்தையுள்ளே.
மன்னிய துன்றிரு மந்திரஞ் சிந்துர வண்ணப்பெண்ணே
முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே
பன்னிய தென்றுமுன் றன்பர மாகம பத்ததியே. 6

ஆவிக்கடைக்கலம் வேண்டல்
திதியுறு மத்திற் சுழலுமென் னாவி தளர்விலதோர்
கதியுறு வண்ணங் கருதுகண் டாய்கம லாலயனும்
மதியுறு வேணி மகழ்நனு மாலும் வணங்க யென்றும்
துதியுறு சேவடி யாய்சிந்து ரானன சுந்தரியே. 7

சிந்தையிற் சேவடிகண்டு செம்மாத்தல்.
சுந்தரி யெந்தை துணைவியென் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்து னாண்மக டன் றலைமேல்
அந்தரி நீலி யழியாத கன்னிகை யாரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாண்மலர்த் தாளென் கருத்தனவே. 8

காட்சி வேண்டல்.
கருத்தன் வெந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற் 
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
இருத்தன பாரமு மார்முஞ் செங்கைச் சிலையுமம்பும்
முருத்தன மூரலு நீயுமம் மேவந்தென் முன்னிற்கவே, 9

என்றும் வணங்கும் நிலயறிவித்தது.
நின்று மிருந்துங் இடந்து நடந்து நினைப்பதுன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த் தாளெழு தாமரையின்
ஒன்று மரும்பொரு ளேயரு ளேயுமை யேயிமயத்
தன்றும் பிறந்தவ ளேயழி யாமுத்தி யானந்தமே. 10

இருவடிப் பெருமைகூறல்.
ஆனந்த மாயென் னறிவாய் நிறைந்த வமுதமுமாய்
வானந்த மான வடிவுடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த பான சரணார விந்தந் தவளநிறக்
கானந்த மாடரங் காமெம்பி ரான்முடிக் கண்ணியதே. 11

புண்ணியம் வியத்தல்.
கண்ணிய துன்புகழ் கற்பதூன் னாமங் கசிந்துபத்தி.
பண்ணிய துன்னிரு பதாம் புயத்திற் பகலீரவா
நண்ணிய துன்னை நயந்தோரை வையத்து தான்முன்செய்த
புண்ணிய மேதென்னம் மேபுவி யேழையும் பூத்தவளே. 12

புறந்தொழாப் பெருமை பேசுதல்.
பூத்தவ ளேபுவ னான்கையும் பூத்தவண்ணம்
காத்தவ ளேபின் கரந்தவ ளேகறைக் கண்டனுக்கு
மூத்தவ ளேயென்று மூவா முகுந்தற் இளையவளே
மாத்தவ ளேயுன்னை யன்றிமற் ரோர்தெய்வம் வந்திப்பதே. 13

அருமையைக் கூறி எளிமைக்கு வியத்தல்.
வந்திப் பவருன்னை வானவர் தானவ ரானவர்கள்
சித்திப் பவர்நற்  றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப் பவரழி யாப்பர மானந்தர்  பாரிலுன்னைச்
சந்திப் பவர்க்கெளி தாமெம்பி ராட்டிநின் றண்ணளியே. 14

கருணையை விழைவார் காணும் பேறுகள்
கண்ணளிக் கென்றுமுன் னேபல கோடி தவங்கள்செய்வார்
மண்ணளிக் குஞ்செல்வ மோபெறு வார்மதி வானவர்தம் 
விண்ணளிக் குஞ்செல் வமுமழி யாமுத்தி வீடுமன்றோ
பண்ணலிக் குஞ்சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே.  15

கருணையின் வியப்பு.
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே யொளிரு மோளிக்கிட மேயெண்ணி லொன்றுமில்லா
வெளியே வெளிமுதற் பூதங்க ளாகி விரிந்தவம்மே 
அளியே னறிவள விற்கள வான ததிசயமே. 16

பதியையும்வென்ற பண்பு.
அதிசய மான வடிவுடை யாளர விந்தமெல்லாம்
துதிசய வானன சுந்தர வல்லி துணையிரதி
பதிசய மான தபசய மாகுமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன் றோவாம  பாகத்தை வவ்வியதே. 17

காலன் வரும்போது காக்கவேண்டுதல்.
வவ்விய பாகத் திறைவரு நீயு மகிழ்ந்திருக்கும்
செவ்வியு முங்க டிருமணக் கோலமுஞ் சிந்தையுள்ளே
அவ்வியத் தீர்த்தென்னை யாண்டபொற் பாதமு மாகிவந்து
வெவ்வீய காலனென் மேல்வரும் போது வெளிநிற்கவே, 18

ஆனந்தாதிசயம்.
வெளிநின்ற நின்றிகு மேனியைப் பார்த்தென் விழியுநெஞ்சும்
களிநின்ற வெள்ளங் கரைகண்ட  தில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானந் திகழ்கின்ற தென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்க ளொன்பது மேவி யுறைபவளே. 19

உறைவிடம் யாதென உசாவல்.
உறைகின்ற நின்றிருக் கோயினின் கேள்வ ரொருபக்கமோ
அறைகின்ற நான்மறை யின்னடி யோமுடி யோவமுத
நிறைகின் றவெண்டிங்க ளோகஞ்சமோ வென்றனெஞ்சகமோ
மறைகின்ற வாரிதி யோபூர ணாசல மங்கலையே. 20

காட்சியிற் கணிதல்.
மங்கலை செங்கல சம்முலை யாண்மலை யாள்வருணச்
சங்கலை செங்கைச் சகல கலாமயி றாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடை யோன்புடை யாளுடையாள்
பிங்கலை நீலிசெய் யாள்வெளி யாள்பசும் பெண்கொடியே. 21

பிறவி வெறுத்தல்.
கொடியே யிளவஞ்சிக்‌ கொம்பே யெனக்குவம்‌ பேபழுத்து 
படியே மறையின்‌ பரிமள மேபனி மாலிமயப்‌ 
பிடியே பிரமன்‌ முதலாய தேவரைப்‌ பெற்றவம்மே 
அடியே னிறந்திங்‌ கினிப்பிற வாமல்வந்‌ தாண்டுகொள்ளே. 22
  
குறிக்கோள்‌ கூறல்‌. 
கொள்ளேன் மனத்தினின்‌கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை 
விள்ளேன்‌ பரசம யம்விரும்‌ பேன்வியன்‌ மூவுலகுக்‌ 
குள்ளே யனைத்தினுக்‌ கும்புறம்‌ பேயுள்ளத்‌ தேவிளைந்த 
கள்ளே களிக்குங்‌ கனியே யளியவென்‌ கண்மணியே. 23 

அருள்‌ பெற்றதாலாய வீறு. 
மணியே மணியி னொனியே வொளிரு மணிபுனைந்த 
அணியே யணியு மணிக்கழ கேயணு காதவர்க்குப்‌ 
பிணியே பிணிக்கு மருந்தே யமரர்‌ பெருவிருந்தே 
பணியே னொருவரை நின்பத்ம பாதம்‌ பணிந்தபின்னே, 24

தன்தவங்‌ கிளத்தல்‌. 
பின்னே திரிந்துன்‌ னடியாரைப்‌ பேணிப்‌ பிறப்பறுக்க 
முன்னே தவங்கண்‌ முயன்‌ றுகொண்டேன்முதன்‌ மூவருக்கும்‌ 
அன்னே யுலகுக்‌ கபிராமி யென்னு மருமருந்தே
என்னே யினியுன்னை யான்மற வாமனின்‌ றேத்துவனே 25

அருளின்‌ உயர்வு அறிவித்தல்‌. 
ஏத்து மடியவ ரீரே ழுலகினை யும்படைத்தும்‌ 
காத்து மழித்துந்‌ திரிபவ ராங்கமழ்‌ பூங்கடம்பு 
சாத்துங்‌ குழலணங்‌ கேமண நாறுநின்‌ றாணிணைக்கென்‌ 
நாத்தங்கு புன்மொழி யேறிய வாறு நகையுடைத்தே. 26

அருணலம்‌ வியத்தல்‌. 
உடைத்தனை வஞ்சப்‌ பிறவியை யுள்ள முருகுமன்பு 
படைத்தனை பத்ம பதயுகஞ்‌ சூடும்‌ பணியெனக்கே 
அடைத்தனை நெஞ்சத்‌ தழுக்கையெல்‌ லாநின்‌ னருட்புனலால்‌ 
துடைத்தனை சுந்தரி நின்னரு ளேதென்று சொல்லுவதே, 27 
 
அடிதொழுவார்‌ அடையும்பேறு 
சொல்லும்‌ பொருளு மெனநட மாடுந்‌ துணைவருடன்‌ 
புல்லும்‌ பரிமளப்‌ பூங்கொடி யேநின்‌ புதூமலர்த்தாள்‌ 
அல்லும்‌ பகலுந்‌ தொழுமவர்க்‌ கேயழி யாவரசும்‌ 
செல்லுந்‌ தவநெறி யுஞ்சிவ லோகமுஞ்‌ சித்திக்குமே. 28 

திருமேனிச்‌ சிற்ப்பு தெரித்தது. 
சித்தியுஞ்‌ சித்தி தருந்தெய்வ மாத்‌ திகழும்பரா 
சத்தியுஞ்‌ சத்தி தழைக்குஞ்‌ சிவமுந்‌ தவமுயல்வார்‌ 
முத்தியு முத்திக்கு வித்தும்வித்‌ தாக முளைத்தெழுந்த 
புத்தியும்‌ புத்தியி னுள்ளே புரக்கும்‌ புரத்தையன்றே. 29

தன்வசமறுதல்‌.
அன்றே தடுத்தென்னை யாண்டுகொண்‌ டாய்கொண்ட தல்ல 
நன்றே யுனக்‌கனி நானென்‌ செயினு நடுக்கடலுள்‌ வென்கை 
சென்றே விழினுங்‌ கரையேற்‌ றுகைநின்‌ றிருவுளமே 
ஒன்றே பலவுரு வேயரு வேயென்‌ னுமையவளே. 30 

ஆட்கொண்டதிறம்‌ அறிவித்தல்‌ 
உமையு முமையோரு பாகனு மேக வுருவில்வந்திங்‌ 
கெமையுந்‌ தமக்கன்பு செய்யவைத்‌ தாரினி யெண்ணுதற்குச்‌ 
சமையங்‌ களுமில்லை யீன்றெடுப்‌ பாளெரு தாயுமீல்லை 
அமையு மமையுறு தோளியர்‌ மேல்வைத்த வாசையுமே. 31

இதுவுமது. 
ஆசைக்‌ கடலி லகப்பட்‌ டருளற்ற் வந்தகன்கைப்‌ 
பாசத்தி லல்லற்‌ படவிருந்‌ தேனைநின்‌ பாதமென்னும்‌ 
வாசக்‌ கமலந்‌ தலைமேல்‌ வலியவைத்‌ தாண்டுகொண்ட 
நேசத்தை யென்சொல்லு வேனீசர்‌ பாகத்து நேரிழையே. 32

இறப்பிற்கு அஞ்சி ஏத்துதல்‌. 
இழைக்கும்‌ வினைவழி யேயடுங்‌ கால னெனைநடுங்க 
அழைக்கும்‌ பொழுதுவந்‌ தஞ்சலென்‌ பாயத்தர்சத்த மெல்லாம்‌ 
குழைக்குங்‌ களபக்‌ குவிமுலை யாமளை க்‌ கோமளமே 
உழைக்கும் பொழுதுன்னை யேயன்னையே யென்பனோடி வந்தே. 33

அம்மை எழுந்தருளும்‌ இடங்கூறல்‌. 
வந்தே சரணம்‌ புகுமடி யாருக்கு வானுலகம்‌ 
தந்தே பரிவொடு தான்போ யிருக்குஞ்‌ சதுமுகமும்‌ 
பைந்தே னலங்கற்‌ பருமணி யாகமும்‌ பாகமும்பொன்‌ 
செந்தேன்‌ மலரு மலர்ககிர்‌ ஞாயிறுந்‌ திங்களுமே. 34

பெறாப்பேறு பெற்றமை வியத்தல்‌. 
திங்கட்‌ பகவின்‌ மணநாறுஞ்‌ சீறடி *சென்னிவைக்க 
எங்கட்‌ கொருதவ மெய்திய வாவெண் ணிறந்தவிண்ணோர்‌ 
தங்கட்கு மிந்தத்‌ தவமெய்து மோதரங்‌ கக்கடலுள்‌ 
வெங்கட்‌ பணியணை மேற்றுயில்‌ கூரும்‌ விழுப்பொருளே. 35  

அருளின்‌ இயல்பை அறுிவிக்கவேண்டுதல்‌. 
பொருளே பொருண்முடிக்‌ கும்போக மேயரும்‌ போகஞ்செய்‌ 
மருளே மருளில்‌ வருந்தெரு ளேயென்‌ மனத்துவஞ்சத்‌ யும்‌ 
திருளேது மின்றி யொளிவெளி யாட யிருக்குமுன்றன்‌ 
அருளே தறிகின்றி லேனம்பு யாதனத்‌ தம்பிகையே. 36

அம்மையின்‌ அணிமுதலியன அறிவித்தது.
கைக்கே யணிவது கன்னலும்‌ பூவுங்‌ கமலமன்ன 
மெய்க்கே யணிவது வெண்முத்து மாலை விடவரவின்‌ 
பைக்கே யணிவது பன்மணிக்‌ கோவையும்‌ பட்டுமெட்டுத்‌ 
திக்கே யணியுந்‌ திருவுடை யானிடஞ்‌ சேர்பவளே. 37

உலகவர்க்கு உணர்த்துதல்‌. 
பவளக்‌ கொடியிற்‌ பழுத்தசெவ்‌ வாயும்‌ பனிமுறுவல்‌ 
தவளத்‌ திருநகை யுந்துணை யாவெங்கள்‌ சங்கரனைத்‌ 
துவளப்‌ பொருது துடியிடை சாய்க்குந்‌  துணைமுலையாள்‌ 
அவளைப்‌ பணிமின்கண்‌ டீரம ராவதி யாளுகைக்கே. 38

தன்‌ குறை அறிந்து தயங்கல்‌. 
ஆளுகைக்‌ குன்ற னடித்தா மரைகளுண்‌ டந்தகன்பால்‌ 
மீளுகைக்‌ குன்றன்‌ விழியின்‌ கடையுண்டு மேலிவற்றிண்‌ 
மூளுகைக்‌ கென்குறை நின்குறை யேயன்று முப்புரங்கள்‌ 
மாளுகைக்‌ கம்பு தொடுத்தவில்‌ லான்பங்கல்‌ வாணுதலே. 39

புண்ணியத்தை வியந்தது. 
வாணுதற்‌ கண்ணியை விண்ணவர்‌ யாவரும்‌ வந்திறைஞ்சிப்‌ 
பேணுதற் கெண்ணிய வெம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சிற்‌ 
காணுதற்‌ கண்ணிய ளல்லாத கன்னியைக்‌ காணுமன்பு  
பூணுதற் கெண்ணிய வெண்ணமன்றோ முன்‌ செய்புண்ணியமே.  40

தெஞ்சறிவித்தல்‌. 
புண்ணியஞ்‌ செய்தன மேமன மேபுதுப்‌ பூங்குவளைக்‌ 
கண்ணியுஞ்‌ செய்ய கணவருங்‌ கூடிநங்‌ காரணத்தால்‌ 
நண்ணியிங்‌ கேவந்து தம்மடி யார்க ணடுவிருக்கப்‌
பண்ணிநஞ்‌ சென்னியின்‌ மேற்பத்ம பாதம்‌ பதித்திடவே. 41  

அம்மையின்‌ ஆற்றல்‌ வியத்தல்‌ 
இடங்கொண்டு விம்மி யிணேகொண்‌ டிறுகி யிளகிமுத்து[சை 
வடங்கொண்ட கொங்கை மலைகொண் டிறைவர்‌ வலியநெஞ்‌ 
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்‌ 
படங்கொண்ட வல்குற்‌ பனிமொழி வேதப்‌ பரிபுரையே. 42  

செம்பாகத்திற்கேற்ற சிறப்பறிவித்தது 
பரிபுரச்‌ சீறடிப்‌ பாசாங்‌ குசைபஞ்ச பாணியின்‌சொல்‌ 
திரிபுர சுந்தரி சந்து மேனிய டீமைநெஞ்சில்‌ 
புரிபுற வஞ்சரை யஞ்சக்‌ குனிபொருப்‌ புச்சிலைக்கை 
எரிபுரை மேனி யிறைவர்செம்‌ பாகத்‌ திருந்தவளே. 43

 உறுதிகிளத்தல்‌ 
தவனே யிவனளெங்கள்‌ சங்கர னார்மனை மங்கலமாம்‌ 
அவளே யவர்தமக்‌ கன்னையு மாயின ளாகையினால்‌ 
இனளே கடவுளர்‌ யாவர்க்கு மேலை யிறைவியுமாம்‌ 
துவளே னினியொரு தெய்வமுண்‌ டாகமெய்த்‌ தொண்டு செய்தே.  44

பொறுத்தருளவேண்டுதல்‌ 
தொண்டுசெய்‌ யாதுநின்‌ பாதந்‌ தொழாது துணிந்திச்சையே  
பண்டுசெய்‌ தாருள ரோவில ரோவப்‌ பரிசடியேன்‌ 
கண்டுசெய்‌ தாலது கைதவ மோவன்நிச்‌ செய்தவமோ
மிண்டுசெய்‌ தாலும்‌ பொறுக்கைநன்‌ றேபின்‌ வெறுக்கையனறே.

இதுவும்‌ அது 
வெறுக்குந்‌ தகைமைகள்‌ செய்யினுந்‌ தம்மடி யாரைமிக்கோர்‌ 
பொறுக்குந்‌ தகைமை புதியதன்‌ றேபுது நஞ்சையுண்டு 
கறுக்குந்‌ இருமிடற்‌ றானிடப்‌ பாகங்‌ கலந்தபொன்னே 
மறுக்குந் தகைமைகள்‌ செய்யினும் யானுன்‌னை வாழ்த்துவனே.

அநுபூதியிற்‌ களித்தல்‌ 
வாழும்‌ படியொன்று கண்டுகொண்‌ டேன்மனத்‌ தேயொருவர்‌ 
வீழும்‌ படியன்று விள்ளும்‌ படியன்று வேலைநிலம்‌ 
ஏழும்‌ பருவரை யெட்டுமெட்‌ டாம லிரவுபகல்‌ 
சூழுஞ்‌ சுடர்க்கு நடுவே இடந்து சுடர்கன்றதே. 47 

அச்சத்தால்‌ அரற்றல்‌ 
குரம்பை யடுத்துக்‌ குடிபுக்க வாவிவெங்‌ கூற்றுக்கிட்ட 
வரம்பை யடுத்து மறுருமப்‌ போது வளைக்கையமைத்‌ 
தரம்பை யடுத்த வரிவையர்‌ சூழவந்‌ தஞ்சலென்பாய்‌, 
நரம்பை யடுத்த விசைவடி வாய்நின்ற நாயகியே. 49

நாமங்கூறி இன்புறல்‌ 
நாயகி நான்முகி நாரா யணிகை நளினபஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமனை சாதிநச்சு 
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்‌ 
றாயகி யாதி யூடையாள்‌ சரண மரணமக்கே. 50  

அடியார்‌ எய்தும்‌ பயன்‌ அறிவித்தது 
அரணம்‌ பொருளென்‌ நருளொன்‌ நிலாத வசுரர்தங்கள்‌ 
முரணன்‌ நழிய முனிந்தபெம்‌ மானு முகுந்தனுமே 
சரணஞ்‌ சரண மெனறின்ற நாயக தன்னடியார்‌ 
மரணம்‌ பிறவி யிரண்டுமெய்‌ தாரிந்த வையகத்தே 51

அன்பர்க்குளன்ன சின்னங்கள்‌ 
வையந்‌ தூரக மதகரி மாமகு டஞ்சிவிகை 
பெய்யுங்‌ கனகம்‌ பெருவிலை யாரம்‌ பிறைமுடித்த: 
ஓயன்‌ நிருமனை யானடித்‌ தாமரைக்‌ கன்புமுன்பு 
செய்யுந்‌ தவமுடை யார்க்குள வாகிய சின்னங்களே. 52  

சக்தியோக சாதனை கூறுல்‌ 
சின்னஞ்‌ சிறிய மருங்கினிற்‌ சாத்திய செய்யமட்டும்‌ 
பென்னம்‌ பெரிய முலையுமுத்‌ தாரமும்‌ பிச்சிமொய்த்த 
கன்னங்‌ குரிய குழுலுங்கண்‌ மூன்றுங்‌ கருத்தில்வைத்துத்‌  
தன்னந்‌ தணியிருப்‌ பார்க்குது போலுந்‌ தவமில்லையே. 52

சக்தியோக சாதனை கூறுல்‌ 
சின்னஞ்‌ சிறிய மருங்கினிற்‌ சாத்திய செய்யமட்டும்‌ 
பென்னம்‌ பெரிய முலையுமுத்‌ தாரமும்‌ பிச்சிமொய்த்த 
 கன்னங்‌ கரிய குழுலுங்கண்‌ மூன்றுங்‌ கருத்தில்வைத்துத்‌  
தன்னந்‌ தனியிருப்‌ பார்க்குது போலுந்‌ தவமில்லையே. 53

அம்மையின்‌ அடிகட்கு ஆற்றுப்படுத்தது 
இல்லாமை சொல்லி யொருவர்தம்‌ பாற்சென்‌ றிழிவுபட்டு 
நில்லாமை நெஞ்ச னினைகுவி சேனித்த நீடுதவம்‌ 
கல்லாமை கற்ற கயவர்தம்‌ பாலொரு காலத்திலும்‌ 
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள்‌ சேர்மின்களே. 54 

கைம்மாறுவேண்டாக்‌ கருணை கூறியது . 
மின்னா யிரமொரு மெய்வடி வாக விளங்குகின்ற(து) 
அன்னா ளகமகி ழானந்த வல்லி யருமறைக்கு 
முன்னாய்‌ நடுவெங்கு மாய்முடி வாய முதல்விதன்ணை 
உன்னா தொழியினு முன்னினும்‌ வேண்டுவ தொன்றில்லையே.

அருளின்‌ அருமையை வியந்தது. 
ஒன்று யரும்பிப்‌ பலவாய்‌ விரிந்திவ்‌ வுலகெங்குமாய்‌ 
நின்றா ளனைத்தையு நீங்‌கிநீற்‌ பாளென்றன்‌ நெஞ்சினுள்ளே 
பொன்றாது நின்று புரிகின்ற வாவிப்‌ பொருளறிவார்‌ 
அன்று லீலையிற்‌ நுயின்றபெம்‌ மானுமென்‌ னையனுமே. 56   

ஆளுமாறும்‌ இவ்வாறு என்றது. 
ஐய னளந்த படியிரு நாழிகொண்‌ டண்டமெல்லாம்‌ 
உய்ய வறஞ்செயு முன்னையும்‌ போற்றி யொருவர்தம்பால்‌ 
செய்ய பகந்தமிழ்ப்‌ பாமாலை யுங்கொண்டு சென்றுபொய்யும்‌ 
மெய்யு மியம்பவைத்‌ தாயிது வோவுன்றன்‌ மெய்யருளே. 57

புகல்‌ இல்லை எனப்‌ புகறல்‌. 
அருணும்‌ புயத்துமென்‌ சத்தாம்‌ புயத்து மமர்ந்திருக்கும்‌ 
தருணாம்‌ புயமுலைத்‌ தையனல்‌ லாய்தகை சேர்நயனக்‌ 
கருணாம்‌ புயமும்‌ வதனாம்‌ புயமுற்‌ கராம்புயமும்
சரணாம்‌ புயமுமல்‌ லாற்கண்டி லேனொரு தஞ்சமுமே. 58  

குற்றம்பெொரறுக்க வேண்டுதல்‌ 
கஞ்சம்‌ பிறிதில்லை யீதல்ல தென்றுன்‌ றவநெறிக்கே 
நெஞ்சம்‌ பயில நினைக்கின்றி லேனொற்றை நீன்சிலையும்‌ 
அஞ்சம்பு மிக்கல ராகறின்‌ றாயறி யாரெனினும்‌ 
பஞ்சஞ்சு மெல்லடி யாரடி யார்பெற்ற பாலரையே. 59

அருளை வியத்தல்‌ 
பாலினுஞ்‌ சொல்லினி யாய்பனி மாமலர்ப்‌ பாதம்வைக்க 
மாலினுந்தேவர்‌ வணங்கநின்‌ றோன்கொன்றை வார்சடையின்‌ 
மேலினுங்‌ கீழ்நின்று வேதங்கள்‌ பாடுமெய்ப்‌ பீடமொரு 
நாலினுஞ்‌ சாலநன்‌ றோவடி மேன்முடை நாய்த்தலையே. 60

இதுவும்‌ அது 
நாயே னையுமிங்‌ கொருபொரு ளாக நயந்துவந்து 
நீயே நினைவின்‌ நி யயண்டுகொண்‌ டாய்நின்னையுள்ள வண்ணம்‌ 
பேயே னறியு மறிவுதந்‌ தாயென்ன பேறுபெற்றேன்‌ 
தாயே மலைமக ளேசெங்கண்‌ மாறிருத்‌ தங்கைச்சியே. 61  

சிந்தையிற்சிறந்த பொருள்‌ தெரிவித்தல்‌ 
தங்கச்‌ சிலைகொண்டு தானவர்‌ முப்புரஞ்‌ சாய்த்துமத‌ 
வெங்கட்‌ கரியுரி போர்த்தசெஞ்‌ சேவகன்‌ பெய்யடையக்‌ 
கொங்கைக்‌ குரும்பைக்‌ குறியிட்ட நாயயி கோகனகச்‌ 
செங்கைக்‌ கரும்பு மலருமெப்‌ போதுமென்‌ இத்தையதே. 62 
 
அறிவிலார்க்கு அழித்தது 
தேறும்‌ படில வேதுவுங்‌ காட்டிமுன்‌ செல்கதிக்கு
கூறும்‌ பொருள்குன்றிற்‌ கொட்டுந்‌ தறிகுறிக்‌ குஞ்சமயம்‌ 
ஆறுந்‌ தலைவி யிவளா யிருப்‌ தறிந்திருந்தும்‌ 
வேறுஞ்‌ சமயமுண்‌ டென்றுகொண் டாடிய வீணருக்கே. 68

உள்ளத்து உறுதிகூறல்‌ 
வீணே பலிகவர்‌ தெய்வங்கள்‌ பாற்சென் று மிக்கவன்பு 
பூணே னுனக்கன்பு பூண்டுகொண்‌ டேனின்‌ புகழ்ச்சியன்றிப்‌ 
பேணே னொருபொழு துந்திரு மேனிப்ர காசமன்றிக்‌ 
காணே னிருநில முந்திசை நான்குங்‌ ககனமுமே. 64.

வல்லபம்‌ வியந்தது 
ககனமும்‌ வானும்‌ புவனமுங்‌ காணவிற்‌ காமனங்கம்‌ 
தகனமுன்‌ செய்த தவப்பெரு மாற்றுத்‌ தடக்கையுஞ்செம்‌ 
முகனுமுந்‌ நான்‌கிரு மூன்றெனத்‌ தோன்றிய மூதறிவின்‌ 
மகனுமுண்‌ டாயதன்‌ றோவல்லி நீசெய்த வல்லபமே.  65

பொருளின்‌ உயர்வுபற்றிப்‌ போற்றவேண்டியது 
வல்லப மொன்றறி யேன்சிறி யேனின்‌ மலரடிகச்செம்‌ 
பல்லவ மல்லது பற்றொன்றி லேன்பசும்‌ பொற்பொருப்பு 
வில்லவர்‌ தம்முடன்‌ வீற்றிருப்‌ பாய்வினை யேன்றொடுத்த 
சொல்லவ மாயினு நின்றிரு நாமங்க டோத்திரமே. 66

அடி நினையாதவர்‌ அடையாளம்‌ கூறுின்றது 
தோத்திரஞ்‌ செய்து தொழுதுமின்‌ போலுநின்‌ றோற்றமொரு 
மாத்திரைப்‌ போது மனத்தில்வை யாதவர்‌ வண்மைகுலம்‌ 
கோத்திரங்‌ கல்வி குணங்குன்றி நாளுங்‌ குடில்கடொறும்‌ 
பாத்திரங்‌ கொண்டு பலிக்குழ லாநிற்பர்‌ பாரெங்குமே. 67

அணைந்தோர்‌ தன்மை அறிவித்தது 
பாரும்‌ புனலுங்‌ கனலும்வெங்‌ காலும்‌ படர்விசும்பும்‌ 
ஊரு முருகு சுவையொளி யூறொலி யொன்றுபடச்‌ 
சேருந்‌ தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே 
சாருந்‌ தவமுடை யார்படை யாத தனமில்லையே. 68

இம்மைப்‌ பயன்கள்‌ இவையென்றது 
தனந்தருங்‌ கல்வி தருமொரு நாளுந்‌ தளர்வறியா‌ 
மனந்தருந்‌ தெய்வ வடிவுந்‌ தருநெஞ்சில்‌ வஞ்சமில்லா 
இனந்தரும்‌ நல்லன வெல்லாந்‌ தருமன்ப ரென்பவர்க்கே 
கனந்தரும்‌ பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே. 69

காரட்சியிற்கனிதல்‌ 
கண்களிக்‌ கும்படி கண்டுகொண்‌ டேன்கடம்‌ பாடவியில்‌ 
பண்கலளிக்‌ குங்குரல்‌ வீணையுங்‌ கையும்‌ பயோதரமும்‌ 
மண்களிக்‌ கும்பச்சை வண்ணமு மாக மதங்கர்குலப்‌ 
பெண்களிற்‌ றோன்றிய வெம்பெரு மாட்டிதன்‌ பேரழகே. 70

துணை இருக்கத்‌ துன்பம்‌ ஏன்‌? என்றது 
அழகுக்‌ கொருவரு மொவ்வாத வல்லி யருமறைகள்‌ 
பழகிச்‌ சிவந்த பதாம்புயத்‌ தாள்பனி மாமதியின்‌ 
குழுவித்‌ திருமுடிக்‌ கோமள யாமனைக்‌ கொம்பிருக்க 
இழவுற்று நின்றநெஞ்‌ சேயிரங்‌ கேலுனக்‌ கென்குறையே 71

குறைகாணும்‌ குறிப்பொடு கூறல்‌. 
என்குறை தீரநின்‌ றேத்துகின்‌ றேனினி யான்பிறக்‌கின்‌ 
நின்குறை யேயன்றி யார்குறை காணிரு நீள்விசம்பின்‌ 
மின்குறை காட்டி மெலிகன்‌ற நேரிடை மெல்லியலாய்‌ 
தன்குறை தீரவெங்‌ கோன்சடை மேல்வைத்த தாமரையே.72

தியானமுறையைத்‌ தெரிவித்தது 
தாமங்‌ கடம்பு படைபஞ்ச பாணந்‌ தனுக்கரும்பு 
யாமம்‌ வயிரவ ரேத்தும்‌ பொழுதெமக்‌ கென்றுவைத்த 
சேமந்‌ திருவடி செங்கைக ணான்கொளி செம்மையம்மை 
நாமந்‌ திரிபுரை யொன்றோ டிரண்டு நயனங்களே. 73 

மறுமைப்பயன்‌ அறிவித்தது 
நயனங்கண்‌ மூன்றுடை நாதனும்‌ வேதமும்‌ நாரணனும்‌ 
அயனும்‌ பரவு மபிராம வல்லி யடியிணையைப்‌ 
பயனென்று கொண்டவர்‌ பாவைய ராடவும்‌ பாடவும்பொன்‌  
சயனம்‌ பொருந்து தமனியக்‌ காவினிற்‌ றங்குவரே. 74 

சிந்திப்பவர்கள்‌ சேர்கதி கூறியது 
தங்குவர்‌ கற்பக தாருவி னீழலிற்‌ றாயரின்றி 
மங்குவர்‌ மண்ணில்‌ வழுவாப்‌ பிறவியை மால்வரையும்‌ 
பொங்குவ ராழியு மீரேழ்‌ புவனமும்‌ பூத்தவுந்திக்‌ 
கொங்கிவர்‌ பூங்குழ லாடிரு மேனி குறித்தவரே. 75 

தரன்‌ அடைந்தபேறு கிளத்தல்‌ 
குறித்தேன்‌ மனத்தினின்‌ கோலமெல்‌ லாம்நின்‌ குறிப்பறிந்து 
மறித்தேன்‌ மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டி 
வெறித்தே னவிழ்கொன்றை வேணிப்‌ பிரானொரு கூற்றைமெய்யில்‌ 
பறித்தே குடிபுகு தும்பஞ்ச பாண பயிரவியே. 76

திருப்‌ பெயர்சொல்லி விருப்பமிகுத்தது 
பயீரவி பஞ்சமி பாசாங்‌ குசைபஞ்ச பாணிவஞ்சர்‌ 
உயிரவி யுண்ணு முயர்சண்டி காளி யொளிருங்கலா 
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்‌றே 
செயிரவி நான்மறை சேர்துரு நாமங்கள்‌ செப்புவரே. 77

அனுவபங்காட்டி அறிவுறுத்தியது 
செப்புங்‌ கனக கலசமும்‌ போலுந்‌ திருமுலைமேல்‌ 
அப்புங்‌ களப வபிராம வல்லி யணிதரளக்
‌ கொப்பும்‌ வயிரக்‌ குழையும்‌ விழியின்‌ கொழுங்கடையும்‌ 
துப்பு நிலவு மெழுதிவைத்‌ தேனென்‌ றுணைவிழிக்கே. 78

கருணைகண்டு கயவரை வெறுத்தல்‌ 
வீழிக்கே யருளுண்‌ டபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்‌ டெமக்கவ்‌ வழிகிடக்கப்‌ 
பழிக்கே சுழன்றுவெம்‌ பாவங்க ளேசெய்து பாழ்நாகக்‌ 
குழிக்கே யழுந்துங்‌ கயவர்தம்‌ மோடென்ன கூட்டினியே. 79 
 
ஆனத்தக்களிப்பு 
கூட்டிய வாவேன்னைத்‌ தன்னடியாரிற்‌ கொடியவினை 
ஓட்டிய வாவென்க ணோடிய வாதன்னை யுள்ளவண்ணம்‌ 
காட்டிய வாகண்ட கண்ணு மனமுங்‌ களிக்கின்றவா 
ஆட்டிய வாநட மாடகத்‌ தாமரை யாரணங்கே. 80

தன்வசமற்றமை சாற்றியது 
அணங்கே யணங்குகள்‌ நின்பரி வாரங்க ளாகையினால்‌ 
வணங்கே னொருவரை வாழ்த்துகி லேன்நெஞ்சில்‌ வஞ்சகரோ 
டிணங்கே னெனதுன தென்‌றிருப்‌ பார்சிலர்‌ யாவரோடும்‌ 
பிணங்கே னறிவொன்றி லேனென்க ணீவைத்த பேரளியே.81

ஆனத்தத்தழுந்தியது 
அளியார்‌ கமலத்தி லாரணங்‌ கேயகி லாண்டமுநின்‌ 
ஒளியாக நின்ற வொளிர்திரு மேனியை யுள்ளுதொறும்‌ 
களியாகி யந்தக்‌ கரணங்கள்‌ விம்மிக்‌ கரைபுரண்டு 
வெளியாய்‌ விடினெங்ங னேமறப்‌ பேனின்‌ விரகினையே. 82

இறைவியைவணங்குவர்‌ இந்திரராவார்‌ என்றது 
விரவும்‌ புதூமல ரிட்டுநின்‌ பாத விரைக்கமலம்‌ 
இரவும்‌ பகனு மிறைஞ்சலல்‌ லாரிமை யோரெவரும்‌ 
பரவும்‌ பதமு மயிரா வதமும்‌ பகீரதியும்‌ 
உரவுங்‌ குலிசமுங்‌ கற்பகக்‌ காவு முடையவரே. 83

பெற்ற பெருவளம்‌ பெறார்க்கு அறிவுறுத்தியது 
உடையாளை யோல்குசெம்‌ பட்டுடை யாளை யொளிர்மதிச்செஞ்‌ 
சடையாளை வஞ்சகர்நெஞ்‌ சடையாளைத்‌ தயங்குநுண்ணூல்‌ 
இடையாளை யெங்கள் பெம்மானிடையாளை யிங்கென்னையினிப்‌ 
படையாளை யுங்களை யும்படை யாவண்ணம்‌ பார்த்திருமே. 84

உருவெளித்தோற்றம்‌ உரைத்தது 
பார்க்குந்‌ திசைதொறும்‌ பாசாங்‌ குசமும்‌ பனிச்சிறைவண்‌ 
டார்க்கும்‌ புதுமல ரைந்துங்‌ கரும்புமென்‌ னல்லலெல்லாம்‌ 
தீர்க்குந்‌ திரிபுரை யாடிரு மேனியுஞ்‌ சிற்றிடையும்‌ 
வார்க்குங்‌ குமமுலை யும்முலை மேன்முத்து மாலையுமே. 85

உற்றகாலத்து உதவ வேண்டுதல்‌ 
மாலயன்‌ நேட மறைதேட வானவர்‌ தேடநின்ற 
காலையுஞ்‌ சூடகக்‌ கையையுங்‌ கொண்டு ககித்தகப்பு 
வேலை வெங்காலனென்‌ மேல்வீடும்பே துவெளி நில்கண்டாய்‌ 
பாலையுந்‌ தேனையும்‌ பாகையும்‌ போலும்‌ பணிமொழியே. 86

எளிவந்த கருணைக்கு இரங்கல்‌ 
மொழிக்கு நினைவுக்கு மேட்டாத நின்றிரு மூர்த்தயென்றன்‌ 
விழிக்கும்‌ வினைக்கும்‌ வெளிநின்ற தால்விழி யான்மதனை 
அழிக்குந்‌ தலைவ ரழியா விரதத்தை யண்டமெல்லாம்‌ 
பழிக்கும்‌ படியொரு பாகங்கொண்‌ டாளும்‌ பராபரையே. 88

விடுதல்‌ கூடாது என வேண்டுதல்‌ 
பரமென்‌ நுனையடைந்‌ தேன்றமி யேனுமுன்‌ பத்தருக்குள்‌ 
தரமன்‌ றிவனென்று தள்ளத்‌ தகாது தரியலர்தம்‌ 
புரமன்‌ றெரியப்‌ பொருப்புவில்‌ வாங்கிய போதிலயன்‌ 
சரமொன்று செற்றகை யானிடப்‌ பாகஞ்‌ சிறந்தவளே. 88

இறக்கும்பொழுது எளிது எய்தவேண்டல்‌ 
சிறக்கும்‌ கமலத்‌ திருவேநின்‌ சேவடி சென்னிவைக்கத்‌ 
துறக்கந்‌ தருநின்‌ றுணைவரு நீயுந்‌ துரியமற்ற 
உறக்கந்‌ தரவந்‌ துடம்போ டுயிருற வற்றறிவு 
மறக்கும்‌ பொழுதென்முன்‌ னேவரல்‌ வேண்டும்‌ வருந்தியுமே.89

எய்தாத பொருள்‌ இல்லை என்கின்றது 
வருந்தா வகையென்‌ மனத்தா மரையினில்‌ வந்துபுகுந்‌ 
இருந்தாள்‌ பழைய விருப்பிட மாக வினியேனக்குப்‌ 
பொருந்தா தொருபொரு ளில்லைவிண்‌ மேவும்‌ புலவருக்கு 
விருந்தாக வேலை மருந்தர்‌ னதைநல்கு மெல்லியலே. 90

தொழுவாரைத்‌ தொழுவார்‌ எய்தும்‌ பயன்‌ சொல்லுகின்றது 
மேல்லிய நுண்ணிடை மீன்னனை யாளை விரிசடையோன்‌ 
புல்லிய மென்முலைப்‌ பொன்னனை யாளைப்‌ புகழ்ந்துமறை 
சொல்லிய வண்ணந்‌ தொழுமடி யாரைத்‌ தொழுமவர்க்குப்‌ 
பல்லிய மார்த்தெழு வெண்பக டூரும்‌ பதந்தருமே. 91

புறந்தொழாப்‌ பெற்றி பேசியது 
பதத்தே யுருகிநின்‌ பாதத்தி லேமனம்‌ பற்றியுன்றன்‌ 
இதத்தே யொழுக வடிமைகொண் டாயினி யாலனொருவர்‌ 
மதத்தே மதிமயங்‌ கேனவர்‌ போன வழியுஞ்செல்லேன்‌ 
முதத்தேவர்‌ மூவரும்‌ யாவரும்‌ போற்று முகழ்நகையே. 92

கற்பனை கடந்த கருணையுருவைக்‌ காணவேண்டியது 
நகையே யிஃதிந்த ஞாலமெல்‌ லாம்பெற்ற நாயகிக்கு 
முகையே முகிழ்முலை மானே முதுகண்‌ முடிவிலந்த 
வகையே பிறவியும்‌ வம்பே மலைமக ளென்பது நாம்‌ 
மிகையே யிவடன்‌ றகைமையை நாடி விரும்புவதே. 93

 அடியார்தன்மை யறிவித்தது 
விரும்பித்‌ தொழுமடி யார்விழி நீர்மல்கி மெய்புளகம்‌ 
அரும்பித்‌ ததும்பிய வானந்த மாடு யறிவிழுந்து 
சுரும்பிற்‌ களித்து மொழிதடு மாறிமுன்‌ சொன்னவெல்லாம்‌ 
தரும்பித்த ராவரென்‌ றாலபி ராமி சமயநன்றே. 94 

குழைந்து முனைப்பறல்‌ 
நன்றே வருகினுந்‌ தீதே விளைனா நானறிவ 
தொன்றேயு மில்லை யுனக்கே பரமெனக்‌ குள்ளவேல்லாம்‌ 
அன்றே யுனதென்‌ றளித்துவிட்‌ டேனழி யாதகுணக்‌ 
குன்றே யருட்கட லேயிம வான்பெற்ற கோமளமே. 95

தொழுவார்‌ எய்தும்‌ பயன்‌ சொல்லியது 
கோமள வல்லியை யல்லியந்‌ தாமரைக்‌ கோயில்வைகும்‌
யாமன வல்லியை யேதமி லாளை யெழுதரிய 
சாமள மேனிச்‌ சகலக லாமயி றன்னைத்‌ தம்மால்‌ 
ஆமள வுந்தொழு வாரெழு பாருக்கு மாதிபரே. 96

போற்றுவார்‌ யார்‌? எனப்‌ புகன்றது
ஆதித்த னம்புலி யங்க குபேர னமரர்தங்கோன்‌ 
போதிற்‌ பிரமன்‌ புராரி முராரி பொதியமுனி 
காதப்‌ பொருபடைக்‌ கந்தன்‌ கணபதி காமன்முதல்‌ 
சாதித்த புண்ணிய ரெண்ணிலர்‌ போற்றுவர்‌ தையலையே. 97

பொய்யர்‌ நெஞ்சிற்‌ பொருந்தாமை விளக்கியது. 
தைவந்து நின்னடித்‌ தாமரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயுந்‌ தலைவந்த வாறுங்‌ கரந்ததெங்கே 
மெய்வந்த நெஞ்செனல்‌ லாலொரு காலும்‌ விரகர்தங்கள்‌ 
பொய்வந்த நெஞ்சிற்‌ புகவறி யாமடப்‌ பூங்குயிலே. 98

ஐந்துநிறம்‌ படைத்த அம்மையின்‌ தன்மை அறிவித்தல்‌ 
குயிலா யிருக்குங்‌ கடம்பா டவியிடைக்‌ கோலவியன்‌ 
மயிலா யிருக்கு மிமயா சலத்திடை வந்துதித்த 
வெயிலா யிருக்கும்‌ விசும்பிற்‌ கமலத்தின்‌ மீதன்னமாம்‌ 
குயிலா யருக்கன்‌ றிமவா னளித்த கனங்குழையே. 99

நெஞ்சிலெப்போதும்‌ திலவுதல் கூறியது 
குழையத்‌ தழுவிய கொன்றையந்‌ தார்கமழ்‌ கொங்கைவல்லி
கழையைப்‌ பொருத திருநெடுந்‌ தோளுங்‌ கருப்புவில்லும்‌ 
விழையப்‌ பொருதிறல்‌ வேரியம்‌ பாணமும்‌ வெண்ணகையும்‌
உழையைப் பொருதகண்ணு நெஞ்சிலெப்போ துமுதிக்கின்றவே. 100

  நூற்பயன்‌ 
ஆத்தாளை யெங்க எரிபிராம வல்லியை யண்டமெல்லாம்‌  
பூத்தாளை மாதுளம்‌ பூநிறத்‌ தாளைப்‌ புவியடங்கக்‌ 
காத்தாளை யங்கையிற்‌ பாசாங்‌ குசமுங்‌ கருப்புவில்லும்‌ 
சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்கொரு தீங்கில்லையே

அபிராமி அந்தாதி முற்றிற்று.