இறை பணிநிற்க

கூடும் அன்பினில்....

கூடும் அன்பினில்….

01-06-2026
திருச்சிற்றம்பலம்
இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே. 1

மெய்யடியார்களே!

அருள்மிகு சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவம் பராபவ வருஷம்-2026
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாண நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில் பண்டத்தரிப்பான்புலப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமானின், வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான பராபவ வருஷம் வைகாசி மாதம் 30ம் நாள் (13-6-2026) சனிக்கிழமை கார்த்திகை நட்சத்திரமும், தியோசி திதியும், சித்தமிர்த்த யோகமும் கூடிய முற்பகல் 10.30 மணிக்கு எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டிக்கும் துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி,

ஆனி உத்தரம் தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து தினங்கள் மஹோற்சவம் நிகழ்த் திருவருள் கைகூடியுள்ளது.

அத்தருணம் அடியார்கள் அனைவரும் இத் தெய்வீக வழிபாட்டில் ஆசாரசீடர்களாக வருகைதந்து எம்பெருமான் எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கிரியாகால நிகழ்ச்சிகள்
வைகாசி மாதம் 29ம் நாள் 12-6-2026 வெள்ளிக்கிழமை: காலை 7.00 மணிக்கு
வீரபத்திரர் விசேட அபிஷேகமும், பூஜையும், காலை 8.00 மணிக்கு காளி அம்பாள் பொங்கல், அபிஷேக பூஜை.

வைகாசி மாதம் 29ம் நாள் மாலை 6.00 மணிக்கு
அனுஞ்ஞை, விநாயக்ர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேசபலி, வாதுசாந்தி, மிருத்சங்கிரகணம்.

வைகாசி மாதம் 30ம் நாள் 13-6-2026 சனிக்கிழமை
முதலாம் திருவிழா காலை 6.00
மணிக்கு கும்பபூஜை, அபிஷேகமும் தொடர்ந்து விஷேட பூஜை,
காலை 8.30 மனிக்கு வசந்தமண்டபப் பூஜை
முற்பகல் 10.30 மணிக்கு கொடியேற்றம் தொடர்ந்து நவசந்தி ஆவாகன் உற்சவம், அருட்பிரசாதம் வழங்கல்.
மாலை 5.00 மணி சாயரட்சைப் பூஜை, யகாரம்பம், ஸ்தம்ப பூஜை,
இரவு 8.00 மணி வசந்தமண்டபப் பூஜை, உள்வீதி வலம் வருவார்.

அனைவரும் வருக! சிவன் சக்தி அருள் பெறுக!
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

இறையன்புடன்
ஆதின கர்த்தா
சிவஞானம் சிவபாலன்
01-06-2026


01-11-2025

ஐப்பசி மாத சிவகாமி அம்பிகா மஹோற்சவ விஞ்ஞாபனம்

அம்பிகை அடியார்களே!
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டின் நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில், பண்டத்தரிப்பான்புலப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்பாள் உடனுறையும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அம்பாளின் வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம் ஐப்பசி மாதம் 19ம் நாள் (05-11.2025) புதன்கிழமை அச்சுவனி நட்சத்திரமும் பூரணை திதியும், சித்தமிர்த யோகமும் கூடிய முற்பகல் 10.00 மணிக்கு எம்பெருமாட்டிக்கு துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி ஐப்பசி பூரம் தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து தினங்கள் மஹோற்சவம் நிகழத் திருவருள் கைகூடியுள்ளது. அத்தருணம் அடியார்கள் அனைவரும் இத் தெய்வீக வழிபாட்டில் ஆசாரசீலர்களாக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மங்களம்
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம்
அத்துவித வஸ்துவுக்கும் மங்களம்
ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம்
உத்தம பத்தருக்கு மங்களம்
முப்பொழுதும் தொழுவார்க்கு மங்களம்
மூவாசை வென்றவர்க்கு மங்களம்
முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம்
முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம்
ஐயமிட்டு டுண்பவர்க்கு மங்களம்
ஐயமில்லாச் சாதுகட்கு மங்களம்
ஆதியந்த மில்லா ஆன்மாவுக்கு மங்களம்
சீர்காழித் தேவருக்கு மங்களம்
திருநாவுக்கரசருக்கு மங்களம்
சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம்
திவ்விய மாணிக்கர்க்கு மங்களம்
எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம்!
மங்களம் ஜெய மங்களம்!

03-07-2024

ஆனித்திங்கள் 19ம் நாள் ஆனித்திருமஞ்சன மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்மானது.

03-7-2024

அடியார்களே!
சிவகாமி அம்மை திருவடிபோற்றி, தில்லைக்கூத்தனின் திருவடி போற்றி போற்றி.

அடியவர்கள் அயராத பங்களிப்போடும், நம் கடின உழைப்போடும் மகா கும்ப்பாபிஷேகத்தை சிறப்புடன் நிறைவு செய்துள்ளோம். இதில் பங்குகொண்ட சிவாச்சாரியார்கள், சிற்பாச்சாரியார்கள், கட்டிட நிர்மாண பணியாளர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் பணிவான நன்றிகள்.

இவ்வாண்டு மகோற்சவம் எதிர்வரும் ஆனித்திங்கள் 19ம் நாள் புதன்கிழமை (03-07-2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆனித்திங்கள் 27ம் நாள் வியாழக்கிழமை (11-07-24) பஞ்சரத பவனி. ஆனித்திங்கள் 28ம் நாள் வெள்ளிக்கிழமை (12-07-24) அதிகாலை ஆனித் திருமஞ்சன மகோற்சவ ஆனந் நடனக் காட்சி. திருவிழா உபயகாரர்கள், அடியார்கள் அனைவரும் இவ் விழாக்காலங்களில் எம்பெருமானையும் எம்பிராட்டியையும் தரிசித்து தங்களாலான பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்
பணிவன்புடன்
ஆதீன கர்த்தா
சிவஞானம் சிவபாலன்

03-05-2024


திருச்சிற்றம்பலம்
தச தானம்
1.பசு, 2.பூமி, 3.எள், 4.பொன், 5.நெய், 6.வஸ்திரம், 7.தானியம், 8.சர்க்கரை, 9.வெள்ளி, 10.உப்பு