திருச்சிற்றம்பலம்
ஆனி திருமஞ்சன மகோற்சவம் 2026
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டுன் யாழ்ப்பாண நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர் என்னும் புண்ணி பூமியில் பண்டத்தரிப்பான்புலப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்பாள் உடனுறையும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமானின் வருடாந்த மஹோற்சம் நிகழும் மங்களகரமான பராபர வருஷம் வைகாகி மாதம் 30ஆம் நாள் (13.06.2026) சனிக்கிழமை கார்த்திகை நட்சத்திரமும் ,திரோசி திதியும் , சித்ததமிர்த போகமும் கூடிய முற்பகல் 10.30 மணிக்கு எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டிக்கும் துவஜாரோகணத்துடன் ஆரம்பமாகி ஆனி உத்தர தினத்தை தீர்த்தோற்கவமாகக் கொண்டு பத்துத் தினங்கள் மஹோற்சவம் நிகழத் திருவருள் கைகூடியுள்ளது. அத்தருணம் அடியார்கள் அனைவரும் இத் தெய்வீக வழிபாட்டில் ஆசாரசீடர்களாக வருகைதந்து எம்பெருமான் எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
கிரியா கால நிகழ்ச்சிகள்
வைகாசி மாதம் 29 ஆம் நாள் 12.06.2026 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு வீரபத்திரர் விசேட அபிஷேகமும் , பூஜையும் , காலை 8.00 மணிக்கு காளி அம்பாள் பொங்கல் ,அபிஷேக பூஜை. வைகாசி மாதம் 29 ஆம் நாள் 12.06.2026 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அனுஞ்ஞை, விநாயகர் வழியாடு, கிராம சாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம் . வைகாசி மாதம் 30 ஆம் நாள் 13.06.2026 சனிக்கிழமை முதலாம் திருவிழா காலை 6.00 மணிக்கு கும்ப பூஜை, அபிஷேகம் தொடர்ந்து விசேட பூஜை ,காலை 8.80 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை முற்பகல் 10.30 மணிக்கு கொடியேற்றம் தொடர்ந்து நவசந்தி ஆவாகன உற்சவம் , அருட்பிரசாதம் வழங்கல் . மாலை 5.00 மணி சாயரட்சைர் பூஜை, யாகாரம்பம் , ஸ்தம்பூஜை, இரவு 8.00 மணி வசந்தமண்பப் பூஜை, உள்வீதி, வெளிவீதி வலம் வருவார் .
| திகதி | திருவிழா நாள் | விபரம் |
|---|---|---|
| 13.06.2026 | வைகாசி 30 சனி | 1ம் நாள் | காலை 6.00 – கும்ப பூசை 8:30 வசந்த மண்டப பூசை 10.30 கொடியேற்றம் சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருவார். |
| 14.06.2026 | வைகாசி 31 ஞாயிறு | 2ம் நாள் | மூஷிகம், சந்திரப்பிறை , மயில் |
| 15.6.2026 | ஆனி 1 திங்கள் | 3ம் நாள் | மூஷிகம், சூரியப்பிறை, மயில் |
| 16.6.2026 | ஆனி 2 செவ்வாய் | 4ம் நாள் | மூஷிகம், பூதவாகனம், மயில் |
| 17.6.2026 | ஆனி 3 புதன் | 5ம் நாள் | மூஷிகம், இடபவாகனம், மயில், இரவு 8.00 மணி சந்திரசேகரப் பட்டம் |
| 18.6.2026 | ஆனி 4 வியாழன் | 6ம் நாள் | மூஷிகம், இடபவாகனம், மயில், ஞானசம்பந்தர் உற்சவம் |
| 19.6.2026 | ஆனி 5 வெள்ளி | 7ம் நாள் | மூஷிகம் , கைலாச வாகனம், மயில், வேட்டைத் திருவிழா |
| 20.6.2026 | ஆனி 6 சனி | 8ம் நாள் | இடபம், இடபம், இடபம், இரவு 8.00 சப்பைரத உற்சவம் |
| 21.6.2026 | ஆனி 7 ஞாயிறு | 9ம் நாள் | இரதோற்சவம் அதிகாலை 6.80 மணி அபிஷேகம் , காலை 7.80 மணி விஷேட பூசை, காலை 7.80 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து பஞ்சமுகர்ச்சனை, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பஞ்சரத ஆரோகணம் , காலை 9.80 மணிக்கு நடைபெறும் . புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் சிவகாமி அம்மை சமேத நடராஜப் பெருமான் எழுந்தருளுவார். தேர் வலம் வந்த பின் பச்சை சாத்தி இரத அவரோகணம் நடைபெற்று பின் பிராயச்சித்த அபிஷேகம் , திருவருட் பிரசாதம் வழங்கப்படும் . பின்னிரவு 1.00 மணி ஆனி உத்தர திருமஞ்சனம் , சிவகாமி அம்பிகா சமேத சிதம்பர நடராசப் பெருமானுக்குத் திரவிய மஹா அபிஷேகம் தொடர்ந்து விஷேட பூசை: காலை சூரிய உதயத்தில் நடராசப் பெருமான் மஞ்சத்தில் உள்வீதி, வெளிவீதி எழுந்தருளல். |
| 22.6.2026 | ஆனி 8 திங்கள் | 10ம் நாள் | தீர்த்தோற்சவமும் விஷேட பூசை காலை 7.80 மணி வசந்த மண்டபப் பூலை தொடர்ந்து சுவாமி சிவகங்கை, தீர்த்தத் திருக்குளத்துக்கு எழுந்தருளல் தீர்த்த உற்சவம் நடைபெற்று ஆலயத்தை வந்தடைந்து மஹாயாக கும்பாபிஷேகம் , விஷேட பூசை, திருவருட் பிரசாதம் வழங்கல் , மாலை 5.00 மணி சாயரட்சைப் பூசை, மாலை 5.00 மணி வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து துவஜா அவரோஹணம் (கொடியிறக்கம் ) பின் நவசந்தி விஜர்சனம் , மெளன உற்சவம் , சண்டேஸ்வரர் உற்சவம் , ஆச்சார்ய உற்சவம், குரு ஆசியுரை, திருவருட் பிரசாதம் வழங்கல் . |
| 16.6.2026 | ஆனி 9 செவ்வாய் | அபிஷேகம் , மாலை 5.00 மணி விஷேட பூசை, சிவகாமி அம்பாள் தபசு இருத்தல் . அதனைத் தொடர்ந்து சுவாமி ஆடட்கொள்ளல் , திருவூஞ்சல் பின் திருக்கல்யாணம் , விஷேட பூசையைத் தொடர்ந்து சுவாமி பூந்தண்டிகையில் திருவீதியுலா. |
Day 1 2026 – கொடியேற்றம்
திருச்சிற்றம்பலம்
ஆனி திருமஞ்சன மகோற்சவம் 2025
அடியார்களே!
சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆனி உத்தர மகோற்சவம் 23-6-2025 திங்கட்கிழமை திருவருளும் குருவருளும் துணை நிற்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
| திகதி | தமிழ் | கிழமை | திருவிழாக்கள் | உற்சவ விபரம் |
|---|---|---|---|---|
| 23-6-25 | 09 | திங்கள் | கொடியேற்றம் | |
| 24-6-25 | 10 | செவ்வாய் | 2ம் திருவிழா | |
| 25-6-25 | 11 | புதன் | 3ம் திருவிழா | |
| 26-6-25 | 12 | வியாழன் | 4ம் திருவிழா | |
| 27-6-25 | 13 | வெள்ளி | 5ம் திருவிழா | |
| 28-6-25 | 14 | சனி | 6ம் திருவிழா | |
| 29-6-25 | 15 | ஞாயிறு | 7ம் திருவிழா | |
| 30-6-25 | 16 | திங்கள் | 8ம் திருவிழா | |
| 01-7-25 | 17 | செவ்வாய் | பஞ்ச இரதோற்சவம் | |
| 02-7-25 | 18 | புதன் | தீர்த்தோற்சவம் திருமஞ்சன திருவிழா |
பஞ்சரத மகோற்சவம் – ஆனித்திங்கள் 17ம் நாள் (01–7-2025)
விரிவான தகவல்கள் விரைவில்……