10 நாள் – தீர்த்தோற்சவம்
10 நாள் – ஆனந்த நடன தரிசனம்-6
10 நாள் – ஆனந்த நடன தரிசனம்-5
10 நாள் – ஆனந்த நடன தரிசனம்-4
10 நாள் – ஆனந்த நடன தரிசனம்-3
10 நாள் – ஆனந்த நடன தரிசனம்-2
10 நாள் – ஆனந்த நடன தரிசனம்-1
9ம் நாள் -7
9ம் நாள் -6
9ம் நாள் -5
9ம் நாள் -4
9ம் நாள் -3
9ம் நாள் -2
9ம் நாள் -1
8ம் நாள் திருவிழா
7ம் நாள் திருவிழா
5ம் நாள் திருவிழா
4ம் நாள் திருவிழா
3ம் நாள் திருவிழா
1ம் நாள்,கொடியேற்றம்
மகோற்சவ விஞ்ஞாபனம் 2024
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாண நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில் பண்டத்தரிப்பான்புலப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்பாள் உடனுறையும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்கலகரமான குரோதி வருஷம் ஆனி ௴ 19ம் நாள் (03-07-24) புதன்கிழமை ரோகினி நட்சத்திரமும், துவாதசி , சித்தாமிர்த யோகமும் கூடிய முற்பகல் 10: 30 மணிக்கு எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டிக்கும் துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி ஆனி உத்தர தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்துத் தினங்கள் மகோற்சவம் நிகழத் திருவருள் கைகூடியுள்ளது. அத்தருணம் அடியார்கள் அனைவரும் இத் தெய்வீக வழிபாட்டில் ஆசாரசீலர்களாக வருகைதந்து எம்பெருமான் எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
கிரியா கால நிகழ்வுகள்
ஆனி மாதம் 18ஆம் நாள் 02-07-24 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு வீரபத்திரர் விசேட அபிஷேகமும் பூஜையும், காலை 10.00 மணி காளி அம்பாள் பொங்கல், ஆபிஷேக பூஜை. ஆனி மாதம் 18ஆம் நாள் 02-07-24 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி அனுஞ்ஜை, விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம். ஆனி மாதம் 19ம் நாள் 03-07-2024 புதன்கிழமை முதலாம் திருவிழா காலை 6.00 மணி கும்பபூஜை, அபிஷேகமும் தொடர்ந்து விசேட பூஜை, காலை 9.00 மணி வசந்தமண்டப பூசை, முற்பகல் 10.30 மணி கொடியேற்றம், தொடர்ந்து நவசந்தி ஆவாகன உற்சவம், அருட்பிரசாதம் வழங்கல். மாலை 5.00 மணி சாயரட்டைப் பூஜை, யாகாரம்பம், ஸ்தம்ப பூஜை, இரவு 8.00 மணி வசந்தமண்டபப் பூஜை, உள்வீதி வெளிவீதி வலம் வருவார்.
இரவு உற்சவ விபரம்
ஆனி ௴ | திகதி | கிழமை | திரு விழா | உற்சவம் |
19 | 03-07-24 | புதன் | 1 | சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருவார் |
20 | 04-07-24 | வியாழன் | 2 | மூஷிகம், சந்திரப்பிறை, மயில் |
21 | 05-07-24 | வெள்ளி | 3 | மூஷிகம், சூரியப்பிறை, மயில் |
22 | 06-07-24 | சனி | 4 | மூஷிகம், பூதவாகனம், மயில் |
23 | 07-07-24 | ஞாயிறு | 5 | மூஷிகம், இடபவாகனம், மயில் இரவு: 7.00 மணி சந்திரசேகரப் பட்டர் விழா |
24 | 08-07-24 | திங்கள் | 6 | மூஷிகம், இடபம், மயில், ஞானசம்பந்தர் உற்சவம் |
25 | 09-07-24 | செவ்வாய் | 7 | மூஷிகம், கைலாசவாகானம், மயில், இரவு 8:00 மணி வசந்த மண்டல பூசை, வேட்டைத் திருவிழா |
26 | 10-07-24 | புதன் | 8 | இடபம், இடபம், இடபம், இரவு 8.00 மணி சப்பைரத உற்சவம் |
27 | 11-07-24 | வியாழன் | 9 | பஞ்சரத பவனி: அதிகாலை 5.00 மணி அபிஷேகம், காலை 6.00 மணி விஷேச பூஜை, காலை 8.00 வசந்த மண்டப பூஜை, பஞ்சமுக அர்ச்சனை, காலை 10.00: பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, பஞ்சரத ஆரோகணம் ; சுவாமிகள் பிள்ளையார், முருகன், நடராஜர், சிவகாமி, சண்டேஸ்வரர் சகிதம் பஞ்சரத பவனி வலம் வந்து, பச்சை சாத்தி, இரத அவரோகணம், பிராயச்சித்த அபிஷேகம், திருவருட்பிரசாதம் வழங்கல். பின்னிரவு 1.00 மணி சிவகாமி அம்பிகா சமேத சிதம்பர நடராசப் பெருமானுக்குத் திரவிய மஹா அபிஷேகம், விஷேட பூசை பெருமானுக்கு, திருவாபரண அலங்காரக் காட்சியும், காலை 6.00 மணிக்கு ஆனித்திருமஞ்சன மகோற்சவ ஆனந்த நடன தரிசனம் நடைபெறும். |
28 | 12-07-24 | வெள்ளி | 10 | காலை 7:00 மணி தீர்த்தோற்சவம்: விஷேட பூஜை, வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து சுவாமி சிவகங்கை திருக்குளத்துக்கு எழுந்தருளல், தீர்தோற்சவம் நடைபெற்று, ஆலயத்தை வந்தடைந்து, மஹாயாக கும்பாபிஷேகம், விஷேட பூஜை, திருவருட் பிரசாதம் வழங்கல். மாலை 5:00 மணி சாயரட்டைப் பூஜை மாலை 6:00 வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்நு துவஜா அவரோகணம் (கொடியிறக்கம்) நவ சநி விஜர்சனம், மெளன உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சார்ய உற்சவம், குரு ஆசியுரை, திருவருட் பிரசாதம் வழங்கல் |
29 | 13-07-24 | சனி | 11 | காலை : 8.00 மணி: பிராயச்சித்த அபிஷேகம், மாலை 5.00 மணி விஷேட பூஜை, சிவகாமி அம்பாள் தபசு இருத்தல் சுவாமி ஆட்கொள்ளல் திருவூஞ்சல் திருக்கல்யாணம் விஷேட பூசை சுவாமி பூந்தண்டிகையில் திருவீதியுலா |
30 | 14-07-24 | ஞாயிறு | 12 | மாலை: வைரவர் சாந்தி அபிஷேகம் |
இரதோற்சவம், தீர்த்தோற்சவம் தவிர்ந்த ஏனைய உற்சவ நாட்களில் தினமும் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்தைத் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா வரும் அருட்பெருங்காட்சி நடைபெறும். இரவு திருவிழா வசந்த மண்டபப் பூஜை மாலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.
ஆலயக் குருக்கள்: சிவபூஜாதுறந்தரர் வாமதேவசிவம் சிவபத்ம வைதீஸ்வரக் குருக்கள் (தாவடியூர்)
மகோற்சவ குரு சபரிமலை குருசுவாமி ஸ்வர்க்கிய ஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் ஆசியுடன் கிரியாத்திலகம் வாசு. ஜெயவஸ்தாங்க குருக்கள் ( ஐயப்ப கோயில் ஆதினம் – உரும்பிராய்)
மங்கல இசை – கணேசன் புதல்வர் சந்திரப்பிரியன் குழுவினர் காரைநகர்
ஒலியமைப்பு: மகேஸ் சவுண்ஸ் சேவிஸ், வெடியரசன் வீதி, காரைநகர்
ஒளியமைப்பு: தீபன் லைற் ( திருநெல்வேலி)
சுவாமி அலங்காரம் : அலங்காரபூஷணம் ஞானசம்பந்த குருக்கள் கபிலேஸ்வர சர்மா
நாகமாள் கோவிலடி தங்கோடை
பூமாலை: தெ.பாலசிங்கம் ( பண்டத்தரிப்பு)
குறிப்பு: அடியார்கள் இவ்விழாக் காலங்களில் தங்களால் இயன்றளவு பால், தயிர், இளநீர், எண்ணெய், பூமாலைகள், பூக்கல் போன்றவற்றைக் கொடுத்துதவி இறையருள் பெறுக.
அனைவரும் வருக! சிவன் சக்தி அருள் பெறுக
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
ஆதின கர்த்தா
சிவஞானம் சிவபாலன்