2ம் திருவிழா

ஆனிமாதம் 20ம் நாள் (04-07-24) வியாழகிழமை, காலை 7.00 மணிக்கு அபிஷேகத்தைத் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா வரும் அருட்பெருங்காட்சி நடைபெறும். இரவு திருவிழா வசந்த மண்டபப் பூஜை மாலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். சுவாமிகள் பிள்ளையார், சிவன், சிவாகாமி ,முருகன், முறையே மூஷிகம், சந்திரப் பிறை, மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும். அடியார்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து சிவன் சக்தி அருள் பெறுக.