திருச்சிற்றம்பலம்
இறையருளும் குருவருளும் துணை நிற்க எம்பெருமானுக்கும் எம்பிராட்டிக்கும் எழில் மிகு இராஜகோபுரத்துடனும், மூலவர்கள் சிவகாமி அம்பாள், சிதம்பரேஸ்வரர்க்கும் எழில் மிகு விமானக் காட்சிகளுடனும் புனருத்தான வேலைகள் முடிவுற்று மகா கும்பாபிஷேகம் இனிதே நிறைவுற்றது.
இதில் பங்குகொண்ட அனைத்து சிவனடியார்களுக்கும் , திருப்பணி உபய காரர்களுக்கும், சிற்பாச்சாரியார்களுக்கும், சிவாச்சாரியார்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்.
மேன்மை கொள் சைவ நீதி, விளங்குக உலகமெலாம்
இறையன்புடன்
ஆதின கர்த்தா
சிவபாலன் சிவஞானம்
காரைநகர் பண்டத்தரிப்பான் புலம்
சிவகாமி அம்பிகா சமேத ஶ்ரீ சிதம்பரேஸ்வர பெருமான் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஷ மஹாகும்பாபிஷேகம்.
ஈழத்தின் உபசிதம்பரத்தின் பெரும் சாந்தி பெருவிழா
சிவநேய செல்வர்காள் ! எம்பெருமான் எம்பெருமாடியினதும் அவர்தம் பரிவார மூத்திகளினதும் மஹாகும்பாபிஷேகமானது ஆவணி திங்கள் 8 ஆம் நாள் Aug 24/08/2022 புதன்கிழமை கிரியா கால நிகழ்வுகள் காலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து எதிர்வரும்
ஆவணி திங்கள் 13 ஆம் நாள் திங்கள் கிழமை,காலை 10 மணிக்கு Aug 29 /08/ 2022 கிரியா கால நிகழ்வுகள் ஆரம்பித்து மகா கும்பாபிஷேகம் பூர்வ திருதியை திதியில் உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் . எம்பெருமான் ,எம்பெருமாட்டி அடியார்கள் இவ் அரிய ஆலய கும்பாபிஷேக கிரியா கால நிகழ்வுகள் மற்றும் பெரும் சாந்தி பெருவிழாவிலும் மகா கும்பாபிஷேகத்தில் பங்குகொண்டு எம்பெருமான் எம்பெருமாட்டி இஷ்ட சித்திகளை பெறுவீர் இவ்வண்ணம் , ஆதினகர்த்தா: சிவபாலன் சிவஞானம்
Please fill up the form for Booking your special day /event