இரதோற்சவம் 2023

வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2023

அடியார்களே!
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டின் யாழ்பாண நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில் பண்டத்தரிப்பான்புலப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்பாள் உடனுறையும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான சோபகிருது வருஷம் ஆனி 02 ஆம் நாள்சனிக்கிழமை (17.06.2023) ரோகினி நட்சத்தரமும், சதுர்த்தி, சித்தாமிர்த யோகமும் கூடிய முற்பகல் 10:30 மணிக்கு எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டிக்கும் துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி ஆனி உத்தர தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்துத் தினங்கள் மகோற்சவம் நிகழத் திருவருள் கைகூடியுள்ளது

துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி ஆனி உத்தர தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்துத் தினங்கள் மகோற்சவம் நிகழத் திருவருள் கைகூடியுள்ளது.

25-6-23: ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் திருவிழா இரதோற்சவம்
அதிகாலை 5:30 மணி அபிஷேகம், காலை 6:30 மணி விசேட பூசை,
காலை 8 மணி வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து பஞ்சமுக அர்ச்சனை,
பகல் 10மணிக்கு, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பஞ்சரத ஆரோகணம், நடைபெறும்
தேர் வலம் வந்த பின் பச்சை சாத்தி இரத அவரோகணம் நடைபெறும்
பின் பிராயச்சித்த அபிஷேகம், திருவருட் பிரசாதம் வழங்கல்
.

பின்னிரவு 1.00 மணி ஆனி உத்தர திருமஞ்சனம், சிவகாமி அம்பிகா சமேத சிதம்பர நடராஜப் பெருமானுக்குத் திரவிய மஹா அபிசேகம், தொடர்ந்து விசேட பூசை.

26-6-23: திங்கட்கிழமை பத்தாம் திருவிழா
தீர்த்தோற்சவமும் விசேட பூசை காலை 7.00 மணி வசந்தமண்டப பூசை, தொடர்து சுவாமி சிவகங்கை திர்த்த திருக்குளத்திற்கு எழுந்தருளல், தீர்த்த உற்சவம் நடைபெறும்.
சுவாமி ஆலயதை வந்தடைந்து மஹாயாக கும்பாபிசேகம், விசேட பூசை, திருவருட் பிரசாதம் வழங்கல்
மாலை 4:00 சாயரட்சைப் பூசை
மாலை 500 வசத மண்டபப் பூசையைத் தொடர்ந்து துவஜாஅவரோஹணம் (கொடியிறக்கம்) பின் நவசந்தி விஜர்சனம், மெளன உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சார்ய உற்சவம், குரு ஆசியுரை, திருவருட் பிரசாதம் வழங்கல்

27-6-23:செவ்வாய்க்கிழமை 12ம் திருவிழா
காலை 8,00 மணி பிராயச்சித்த அபிஷேகம், மாலை5.00 மணி விசேட பூசை, பூங்காவனம்
சிவகாமி அம்பாள் தவசு இருத்தல்
அதனைத் தொடர்ந்து சுவாமி ஆட்கொள்ளல்
திருவூஞ்சல்
திருக்கல்யாணம்
விசேட பூசையைத் தொடர்து சுவாமி பூந்தண்டிகையில் திருவீதியுலா.

28-6-23:புதன்கிழமை 13 ம் நாள் மாலை வைரவர் சாந்தி அபிஷேகம்.

இரதோற்சம் தீர்த்தம் தவிர்ந்த ஏனைய உற்சவ நாட்களில் தினமும் காலை 7.00 மணிக்கு அபிசேகத்தைத் தொடர்ந்து பூசைகள் நடைபெற்று, தொடர்ந்து ஸ்தம்ப பூசை, வசந்த மண்டபப் பூசை நடைபெற்று சுவாமி உள், வெளி வீதியுலா வரும் அருட்பெருங்காட்சி நடைபெறும்.

இரவு திருவிழா வசந்த மண்டபப பூசை 8.00 மணிக்கு ஆரம்பமாகும்.

ஆலயக் குருக்கள்: சாதகச் செம்மல் சி.விவஸ்வத மூர்திக் குர்க்கள்

மகோற்சவ குரு: சபரிமலை குருசுவாமி ஸ்வர்கியஸ்ரீ பிரம்பஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் ஆசியுடன்
கிரியாத்திககம் வாசு. ஜெயவஸ்தாங்க குருக்கள் (ஐயப்பன் கோயில் ஆதினம்-உரும்பிராய)
ஆலய அர்ச்சகர்: அலங்கார பூஷணம் வி. சாருஜன்சர்மா

சுவாமி அலங்காரம்: அலங்கார பூஷணம் ஞானசம்பந்த குருக்கள் க்பிலேஸ்வர சர்மா –நாகம்மாள் கோவிலடி, தங்கோடை
பூமாலை: தெ. பாலசிங்கம் , பண்டத்தரிப்பு
மங்கள் இசை: கணேசன் புதல்வர் சந்திரப்பிரியன் குழுவினர், காரைநகர்
ஒலியமைப்பு: மகேஸ் ஒலி சேவை, வெடியரசன் வீதி, காரைநகர்
ஒளியமைப்பு” கோபால் ஒளி அமைப்பு , மணற்பிட்டி, காரைநகர்
குறிப்பு: அடியார்கள் இவ்விழாக் காலங்களில் தங்களா இயன்றளவு பால், தயிர், இளநீர், எண்ணெய், பூமாலைகள், பூக்கள் கொடுத்துதவி இறையருள் பெறுக.

அனைவரும் வருக, சிவன் சக்தி அருள் பெறுக
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்

ஆதின கர்த்தா
சி.சிவபாலன்

இவ்வண்ணம் ஆதீனகர்த்தா
திரு. சிவஞானம் சிவபாலன்
011 44 7402 479043 ,011 44 2920 747708
மின்னஞ்சல்: karaisivakamitemple@gmail.com, siva@sivapalan.co.uk