கூடும் அன்பினில்….
03-07-2024
ஆனித்திங்கள் 19ம் நாள் ஆனித்திருமஞ்சன மகோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்மானது.
03-7-2024
அடியார்களே!
சிவகாமி அம்மை திருவடிபோற்றி, தில்லைக்கூத்தனின் திருவடி போற்றி போற்றி.
அடியவர்கள் அயராத பங்களிப்போடும், நம் கடின உழைப்போடும் மகா கும்ப்பாபிஷேகத்தை சிறப்புடன் நிறைவு செய்துள்ளோம். இதில் பங்குகொண்ட சிவாச்சாரியார்கள், சிற்பாச்சாரியார்கள், கட்டிட நிர்மாண பணியாளர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் பணிவான நன்றிகள்.
இவ்வாண்டு மகோற்சவம் எதிர்வரும் ஆனித்திங்கள் 19ம் நாள் புதன்கிழமை (03-07-2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆனித்திங்கள் 27ம் நாள் வியாழக்கிழமை (11-07-24) பஞ்சரத பவனி. ஆனித்திங்கள் 28ம் நாள் வெள்ளிக்கிழமை (12-07-24) அதிகாலை ஆனித் திருமஞ்சன மகோற்சவ ஆனந் நடனக் காட்சி. திருவிழா உபயகாரர்கள், அடியார்கள் அனைவரும் இவ் விழாக்காலங்களில் எம்பெருமானையும் எம்பிராட்டியையும் தரிசித்து தங்களாலான பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்
பணிவன்புடன்
ஆதீன கர்த்தா
சிவஞானம் சிவபாலன்
03-05-2024
திருச்சிற்றம்பலம் தச தானம் 1.பசு, 2.பூமி, 3.எள், 4.பொன், 5.நெய், 6.வஸ்திரம், 7.தானியம், 8.சர்க்கரை, 9.வெள்ளி, 10.உப்பு