திருவாசகம் 1. சிவபுராணம் பதிகச் சிறப்பு: சிவனது அநாதி முறைமையான பழைமை யாப்பு: கலிவெண்பா தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க 10 ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன்அவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன்அரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்இறந்து எல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயாஎன ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள்ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட முடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு முடி மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லல் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து 95 திருச்சிற்றம்பலம் 2. கீர்த்தித் திருவகவல் பதிகச் சிறப்பு: சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமை யாப்பு: நிலைமண்டில ஆசிரியப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமைஉடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் தில்லை முதூர் ஆடிய திருவடி பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5 என்னுடை யிருளை ஏறத் துரந்தும் அடியார் உள்ளத்து அன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் 10 கல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும் பஞ்சப் பள்ளியில் பான்மொழி தன்னொடும் எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15 விராவு கொங்கை நற்றடம் படிந்தும் கேவேட ராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும் 20 நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும் வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறுநூ றாயிரம் இயல்பின தாகி ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக் 25 கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் வேலம் புத்தூர் விட்டே றருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30 தற்பண மதனிற் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும் அரியொடு பிரமற்கு அளவறி ஒண்ணான் 35 நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் 40 தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநல் மாநக ரிருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45 ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் உத்தர கோச மங்கையுள் இருந்து வித்தக வேடங் காட்டிய இயல்பும் பூவணம் அதனில் பொலிந்திருந் தருளித் 50 தூவண மேனி காட்டிய தொன்மையும் வாத வூரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக் கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் 55 பூவலம் அதனில் பொலிந்தினி தருளிப் பாவ நாச மாக்கிய பரிசும் தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் விருந்தினன் ஆகி வெண்கா டதனில் 60 குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் பட்ட மங்கையிற் பாங்காய் இருந்தங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு காடது தன்னில் கரந்த கள்ளமும் 65 மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் ஓரி யூரின் உகந்தினி தருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும் 70 தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோவார் கோலம் கொண்ட கொள்கையும் தேனமர் சோலைத் திருவா ருரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் இடைமரு ததனில் ஈண்ட இருந்து 75 படிமப் பாதம் வைத்தவப் பரிசும் ஏகம் பத்தின் இயல்பா யிருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80 சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயா றதனில் சைவன் ஆகியும் 85 துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும் திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும் கழுமல மதனில் காட்சி கொடுத்தும் கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும் புறம்பய மதனில் அறம்பல அருளியும் 90 குற்றா லத்துக் குறியா யிருந்தும் அந்தமில் பெருமை அழல்உருக் கரந்து சுந்தர வேடத் தொருமுதல் உருவுகொண்டு இந்திர ஞாலம் போலவந் தருளி எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95 தானே ஆகிய தயாபரன் எம்மிறை சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி அந்தரத் திழிந்துவந்து அழகமர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும் மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100 அந்தமில் பெருமை அருளுடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசது பகரின் ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனந் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105 ஆனந் தம்மே ஆறா அருளியும் மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன் கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் 110 முலம் ஆகிய மும்மலம் அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதல னாகிக் கழுநீர் மாலை ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும் அரியொடு பிரமற்கு அளவறி யாதவன் 115 பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி யாகவும் பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன் உத்தர கோச மங்கையூர் ஆகவும் 120 ஆதி முர்த்திகட் கருள்புரிந் தருளிய தேவ தேவன் திருப்பெயர் ஆகவும் இருள்கடிந் தருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருண்மலை யாகவும் எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 125 அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி நாயி னேனை நலமலி தில்லையுள் கோல மார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130 ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும் எய்தவந் திலாதார் எரியிற் பாயவும் மாலது வாகி மயக்க மெய்தியும் பூதல மதனில் புரண்டுவீழ்ந் தலறியும் கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 135 நாத நாத என்றழு தரற்றிப் பாத மெய்தினர் பாத மெய்தவும் பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்று இதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும் எழில்பெறும் இமயத்து இயல்புடை யம்பொன் 140 பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145 ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே 146 திருச்சிற்றம்பலம் 3. திருவண்டப்பகுதி பதிகச் சிறப்பு: சிவனது தூல சூக்குமத்தை வியந்தது யாப்பு: இணைக்குறள் ஆசிரியப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்அணுப் புரையச் 5 சிறிய வாகப் பெரியோன் தெரியின் வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு தூலத்துச் 10 சூறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்குங் கடவுள் காப்பவை கரப்போன் கரப்பவை கருதாக் 15 கருத்துடைக் கடவுள் திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும் வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோன் நாடொறும் அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20 மதியில் தண்மை வைத்தோன் திண்திறல் தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25 மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று எனைப்பல கோடி எனைப்பல பிறவும் அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று முன்னோன் காண்க முழுதோன் காண்க தன்னே ரில்லோன் தானே காண்க 30 ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க கானப் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35 அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க பரமன் காண்க பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அனேகன் காண்க சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40 சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் படுவோன் காண்க ஒருவன் என்னும் ஒருவன் காண்க விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க 45 இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க அரியதில் அரிய அரியோன் காண்க மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க 50 அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55 தேவரும் அறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க கண்ணால் யானும் கண்டேன் காண்க அருணனி சுரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க 60 புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானும் தேறினன் காண்க அவனெனை ஆட்கொண்டு அருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந் தானும் உடனே காண்க 65 பரமா னந்தப் பழங்கட லதுவே கருமா முகிலில் தோன்றித் திருவார் பெருந்துறை வரையி லேறித் திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70 வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழில் தோன்றி வாளொளி மிளிர எந்தம் பிறவியில் கோபம் மிகுத்து முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75 எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக் கேதக் குட்டங் கையற வோங்கி இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80 தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்து 85 ஊழுழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90 மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட உழவ ராரத் தந்த அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க 95 கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க சூழிருந் துன்பம் துடைப்போன் வாழ்க 100 எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேரமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105 நச்சர வாட்டிய நம்பன் போற்றி பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் நிற்பன நிறீஇச் 110 சொற்பதங் கடந்த தொல்லோன் உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன் விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115 ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்றெனக் கெளிவந் தருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120 ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 125 திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும் மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130 இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும் முனிவற நோக்கி நனிவரக் கௌவி ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135 ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140 ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் தாள்தளை இடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145 தன்னே ரில்லோன் தானேயான தன்மை என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி அறைகூவி யாட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி யருளலும் உளையா அன்பென் புருக வோலமிட்டு 150 அலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித் தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155 ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் ஏற்றார் முதூர் எழில்நகை எரியின் வீழ்வித் தாங்கன்று அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160 ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165 அருளிய தறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித் துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் 170 தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாயுட லகத்தே குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 உள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்கு அள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் கருணை வான்தேன் கலக்க 180 அருளொடு பராவமு தாக்கினன் பிரமன்மா லறியாப் பெற்றி யோனே 182 திருச்சிற்றம்பலம் 4. போற்றித் திருவகவல் பதிகச் சிறப்பு: சகத்தின் உற்பத்தி யாப்பு: நிலைமண்டில ஆசிரியப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே முவுல களந்து நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று அடிமுடி யறியும் ஆதர வதனில் 5 கடுமுரண் ஏன மாகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியுங் காணா மலரடி இணைகள் வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10 யானை முதலா எறும்பு ஈறாய ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15 இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும் 20 ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25 ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் கருங்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30 ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35 பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் செல்வ மென்னும் அல்லலில் பிழைத்தும் நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும் 40 புல்வரம் பாய பலதுறைப் பிழைத்தும் தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சக்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45 ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் விரத மேபர மாகவே தியரும் 50 சரத மாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவ தாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து 55 உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும் தப்பா மேதாம் பிடித்தது சலியாத் தழலது கண்ட மெழுகது போலத் 60 தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா அன்பிற் பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65 கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணது வாகக் கோணுத லின்றிச் 70 சதுரிழந் தறிமால் கொண்டு சாருங் கதியது பரமா அதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா தருபரத் தொருவன் அவனியில் வந்து 75 குருபர னாகி அருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி இணையைப் பிறிவினை யறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80 அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதயம் மலரக் கண்களி கூர நுண்துளி அரும்பச் 85 சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதிய னாகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி 90 கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி முவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95 மின்னா ருருவ விகிர்தா போற்றி கன்னார் உரித்த கனியே போற்றி காவாய்க் கனகக் குன்றே போற்றி ஆவா என்றெனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100 இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போற்றி 105 வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி 110 கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி 115 வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய இறைவா போற்றி முவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழா மேயருள் அரசே போற்றி தோழா போற்றி துணைவா போற்றி 120 வாழ்வே போற்றிஎன் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரையுணர் விறந்த ஒருவ போற்றி விரிகடல் உலகின் விளைவே போற்றி 125 அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி 130 தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மானேர் நோக்கி மணாளா போற்றி 135 வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை முன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145 சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆருர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலையெம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி 150 ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155 குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழிரு முவர்க் கத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165 ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி 175 பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185 இலங்கு சுடரெம் ஈசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி கலையா ரரிகே சரியாய் போற்றி 190 திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி 195 தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட்கு அன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200 தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி யாகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி மந்திர மாமலை மேயாய் போற்றி 205 எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன்று அருளினை போற்றி இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210 படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுவீ றானாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல் பரகதி பாண்டியற் கருளினை போற்றி ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 215 செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220 புரம்பல எரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண போற்றி போற்றி சயசய போற்றி 225 திருச்சிற்றம்பலம் 5. திருச் சதகம் பதிகச் சிறப்பு: பத்தி வைராக்கிய விசித்திரம் யாப்பு: பலவகை தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே 1 கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரொடுஅல் லால்நர கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின்இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே 2 உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்துருகி மத்த மனத்தொடு மால்இவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊருர் திரிந்தெவருந் தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே 3 சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம்அஞ்சி ஆவஎந் தாய்என் றவிதா விடும்நம் மவரவரே முவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல் தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே 4 தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக் கன்பருள்ளாஞ் சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின் திருவடிக்காம் பவமே யருளுகண் டாய்அடி யேற்கெம் பரம்பரனே 5 பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி யேஇறைஞ்சி இரந்தஎல் லாம்எமக் கேபெற லாம்என்னும் அன்பருள்ளம் கரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த முழுவதுமே 6 முழுவதுங் கண்டவ னைப்படைத் தான்முடி சாய்த்துமுன்னாள் செழுமலர் கொண்டெங்குந் தேடஅப் பாலன்இப் பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடக மாடிக் கதியிலியாய் உழுவையின் தோலுடுத் துன்மத்தம் மேற்கொண் டுழிதருமே 7 உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும் இழிதரு காலம்எக் காலம்வருவது வந்ததற்பின் உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக் கழிதரு காலமு மாய்அவை காத்தெம்மைக் காப்பவனே 8 பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என் சிறுமைகண்டும் அவனெம் பிரான்என்ன நானடி யேன்என்ன இப்பரிசே புவனெம் பிரான்தெரி யும்பரி சாவ தியம்புகவே 9 புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே தகவே எனைஉனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாஅமுதே நகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த நாடகமே 10 நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே 11 யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என்கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம் பெருமான்எம் மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே 12 வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான் நாயடியேன் இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத் தழும்பேறப் பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம் புரியாயேல் வருந்துவனற் றமியேன்மற் றென்னேநான் ஆமாறே 13 ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே 14 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே 15 வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந் தொழவேண்டிச் சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும்உன்னைப் பரவுவனே 16 பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல்மடவாள் கூறுடையாள் ஒருபாகம் விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேல்உன் அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே 17 அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம் பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ் விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன் தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே 18 வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய் வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே 19 வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே 20 வெள்ளத்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்கு உள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் கண்ணிணையும் மரமாம் தீவினையி னேற்கே 21 வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ஆட்கொண்டெம் பிரான்ஆனாய்க் கிரும்பின் பாவை அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான்ஆன வாறு முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே 22 ஆயநான் மறையவனும் நீயே யாதல் அறிந்தியான் யாவரினுங் கடைய னாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர் பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே 23 பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்றென்றே பேசிப் பேசிப் பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப் போற்றியெம் பெருமானே என்று பின்றா நேசத்தால் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே 24 வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்ற னேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கு எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமா றறியாத எந்தாய் உன்தன் வண்ணந்தான் அதுகாட்டி வடிவு காட்டி மலர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே 25 சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர வந்தெனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே 26 தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு இனியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதல்அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் முர்க்க னேற்கே 27 கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டாதன வெல்லாங் காட்டிப் பின்னும் கேளாதன வெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே 28 விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர அச்சன்ஆண் பெண்அலிஆ காச மாகி ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே 29 தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை முவர்கோ னாய்நின்ற முதல்வன் முர்த்தி முதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவனடியார் அடியா ரோடும் மேன்மேலுங் குடைந்தாடி ஆடு வோமே 30 ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே 31 அறிவி லாதஎ னைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல் நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப் பந்தனை யறுப்பானைப் பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா றாடுதி பிணநெஞ்சே கிறியெ லாம்மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாய்என்னைக் கெடுமாறே 32 மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையைஎம் மதியிலி மடநெஞ்சே தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச் சிவனவன் திரள்தோள்மேல் நீறு நின்றது கண்டனை யாயினும் நெக்கிலை இக்காயம் கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே 33 கிற்ற வாமன மேகெடு வாய்உடை யான்அடி நாயேனை விற்றெ லாம்மிக ஆள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாத முற்றி லாஇளந் தளிர்பிரிந் திருந்துநீ உண்டன எல்லாம்முன் அற்ற வாறும்நின் னறிவும்நின் பெருமையும் அளவறுக் கில்லேனே 34 அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான்நம் களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருந்தேயும் உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன் செய்தது மிலைநெஞ்சே பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே 35 புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தையெம் பிரான்என்னை ஆண்டவன் கழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே 36 வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதனாலே முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான் முட்டிலேன் தலைகீறேன் இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி இன்னதென் றறியேனே 37 ஏனை யாவரும் எய்திட லுற்றுமற் றின்னதென் றறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின்இன் தேறலைச் சிவனையென் சிவலோகக் கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயிர் ஓயாதே 38 ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே 39 வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன் சிவனகர்புகப் போகேன் ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே 40 இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே 41 உண்டொர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே 42 மேலை வானவ ரும்அறி யாததோர் கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் கால மேயுனை யென்றுகொல் காண்பதே 43 காண லாம்பர மேகட் கிறந்ததோர் வாணி லாப்பொரு ளேயிங்கொர் பார்ப்பெனப் பாண னேன்படிற் றாக்கையை விட்டுனைப் பூணு மாறறி யேன்புலன் போற்றியே 44 போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின் றாற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் கூற்றம் அன்னதொர் கொள்கையென் கொள்கையே 45 கொள்ளுங் கில்லெனை அன்பரிற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே 46 எந்தை யாய்எம் பிரான்மற்றும் யாவர்க்கும் தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் முந்தி என்னுள் புகுந்தனன் யாவருஞ் சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே 47 செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வ ரம்பின்றி யார்க்கும் அரும்பொருள் எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே 48 கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீறு இட்ட அன்பரொ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண் டும்அறி யேனையே 49 அறிவ னேஅமு தேஅடி நாயினேன் அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் அறிவ னோவல்ல னோஅரு ளீசனே 50 ஈச னேஎன் எம்மானே எந்தை பெருமான் என்பிறவி நாச னேநான் யாதுமொன் றல்லாப் பொல்லா நாயான நீச னேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே தேச னேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே 51 செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே 52 போரே றேநின் பொன்னகர்வாய் நீபோந் தருளி இருள்நீக்கி வாரே றிளமென் முலையாளோ டுடன்வந் தருள அருள்பெற்ற சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட ஊரே றாய்இங் குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே 53 உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பை இதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே 54 மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே 55 உடையா னேநின் றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் உடையார் உடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன் முடையார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக முடித்தாயே 56 முடித்த வாறும் என்றனக்கே தக்க தேமுன் னடியாரைப் பிடித்த வாறும் சோராமற் சோர னேன்இங் கொருத்திவாய் துடித்த வாறும் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே 57 தேனைப் பாலைக் கன்னலின் தெளிவை ஒளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் நானின் னடியேன் நீஎன்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே 58 தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாயான புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ என்னை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் பொன்னே திகழுந் திருமேனி எந்தாய் எங்குப் புகுவேனே 59 புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன் நெகும்அன் பில்லை நினைக்காண நீஆண் டருள அடியேனுந் தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே 60 தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி 61 போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன் போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய் போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி 62 போற்றிஎன் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல் போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி போற்றிநின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவு ளானே 63 கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண் டருளு போற்றி விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி 64 சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணகைக் கரிய வாட்கண் மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே 65 இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி ஒழித்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட் டெம்பி ரானே 66 எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி 67 ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே 68 தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி பேர்ந்துமென் பொய்ம்மை யாட்கொண் டருளிடும் பெருமை போற்றி வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதம்ஈ வள்ளல் போற்றி ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி 69 போற்றியிப் புவனம் நீர்தீக் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே 70 புணர்ப்ப தொக்க எந்தை என்னை யாண்டு பூண நோக்கினாய் புணர்ப்ப தன்றிது என்றபோது நின்னொ டென்னொ டென்னிதாம் புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணே புணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே 71 போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி இன்பமும் ஏக நின்க ழல்லி ணைய லாதி லேன்என் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்ச லிக்கணே ஆக என்கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே 72 ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன் பொய்க லந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான் மைக லந்த கண்ணி பங்க வந்து நின்க ழற்கணே மெய்க லந்த அன்பர் அன்பெ னக்கு மாக வேண்டுமே 73 வேண்டும் நின்க ழற்க ணன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு நாயி னேனை ஆவ என்ற ருளுநீ பூண்டு கொண்ட டியனே னும்போற் றிபோற்றி யென்றுமென்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின்வ ணங்கவே 74 வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேத நான்கும் ஓலமிட்டு உணங்கு நின்னை எய்த லுற்று மற்றோ ருண்மை இன்மையின் வணங்கி யாம்வி டேங்க ளென்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோநி னைப்பதே 75 நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை யேய வாக்கினால் தினைத்த னையு மாவ தில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத்து உலகு மாய நின்னை ஐம்பு லன்கள் காண்கிலா எனைத்தெ னைத்த தெப்பு றத்த தெந்தை பாத மெய்தவே 76 எய்த லாவ தென்று நின்னை எம்பி ரான்இவ் வஞ்சனேற்கு உய்த லாவ துன்க ணன்றி மற்றோ ருண்மை யின்மையின் பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற்கு ஈது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே 77 ஈச னேநீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசி னேனொர் பேதம் இன்மை பேதை யேனென் எம்பிரான் நீச னேனை ஆண்டு கொண்ட நின்ம லாஒர் நின்னலால் தேச னேஓர் தேவ ருண்மை சிந்தி யாது சிந்தையே 78 சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீரில் ஐம்பு லன்களால் முந்தை யான காலம் நின்னை எய்தி டாத முர்க்கனேன் வெந்தை யாவி ழுந்தி லேனென் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை யாய நின்னை இன்னம் எய்த லுற்று இருப்பனே 79 இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை ஆண்டு கொண்ட நின்னதாட் கருப்பு மட்டு வாய்ம டுத்து எனைக்க லந்து போகவும் நெருப்பு முண்டி யானு முண்டி ருந்த துண்ட தாயினும் விருப்பு முண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே 80 விச்சுக் கேடு பொய்க்காகாது என்றுஇங்கு எனைவைத்தாய் இச்சைக் கானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் ஆருரெம் பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே 81 பேசப் பட்டேன் நின்னடி யாரில் திருநீறே பூசப் பட்டேன் பூதல ரால்உன் அடியானென்று ஏசப் பட்டேன் இனிப்படு கின்றது அமையாதால் ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே 82 அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டிலை கொல்லோ அடியார் ஆனார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார் செடிசேர் உடலம் இதுநீக்க மாட்டேன் எங்கள் சிவலோகா கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே 83 காணு மாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும் பாணே பேசி என்தன்னைப் படுத்த தென்ன பரஞ்சோதி ஆணே பெண்ணே ஆரமுதே அத்தா செத்தே போயினேன் ஏணா ணில்லா நாயினேன் என்கொண் டெழுகேன் எம்மானே 84 மானேர் நோக்கி உமையாள் பங்கா மறையீ றறியா மறையோனே தேனே அமுதே சிந்தைக் கரியாய் சிறியேன் பிழை பொறுக்குங் கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர்குறுகப் போனா ரடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே 85 புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன்யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே 86 தாராய் உடையாய் அடியேற்கு உன்தாள் இணையன்பு பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன்யான் ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்துஆங்கு உன்தாள் இணையன்புக்கு ஆராய் அடியேன் அயலே மயல்கொண் டழுகேனே 87 அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே 88 பணிவார் பிணிதீர்த்து அருளிப் பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி அதுவும் அரிதென்றால் திணியார் முங்கி லனையேன் வினையைப் பொடியாக்கித் தணியார் பாதம் வந்தொல்லை தாராய் பொய்தீர் மெய்யானே 89 யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே 90 மாறி லாதமாக் கருணை வெள்ளமே வந்து முந்திநின் மலர்கொள் தாளிணை வேறி லாப்பதப் பரிசு பெற்றநின் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார் ஈறி லாதநீ எளியை யாகிவந்து ஒளிசெய் மானுட மாக நோக்கியுங் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே 91 மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்துஎனைப் பணிகொண்ட பின்மழக் கையி லங்குபொற் கிண்ணம் என்றலால் அரியை யென்றுனைக் கருது கின்றிலேன் மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர்உன் மெய்ம்மை மேவினார் பொய்யி லங்குஎனைப் புகுத விட்டுநீ போவ தோசொலாய் பொருத்த மாவதே 92 பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை யண்மையேன் போத என்றெனைப் புரிந்து நோக்கவும் வருத்தம் இன்மையேன் வஞ்ச முண்மையேன் மாண்டி லேன்மலர்க் கமல பாதனே அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை இருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான் வம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே 93 இல்லை நின்கழற் கன்பது என்கணே ஏலம் ஏலுநற் குழலி பங்கனே கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்டு என்னை நின்கழற் கன்ப னாக்கினாய் எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான் ஏது கொண்டுநான் ஏது செய்யினும் வல்லை யேயெனக் கின்னும் உன்கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே 94 வான நாடரும் அறியொ ணாதநீ மறையில் ஈறுமுன் தொடரொ ணாதநீ ஏனை நாடருந் தெரியொ ணாதநீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா உருகி நான்உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா நைய வையகத் துடைய விச்சையே 95 விச்ச தின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப்பெரும் புலைய னேனைஉன் கோயில் வாயிலிற் பிச்ச னாக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம்வ ளர்த்ததோர் நச்சு மாமரம் ஆயி னுங்கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே 96 உடைய நாதனே போற்றி நின்னலால் பற்று மற்றெனக் காவது ஒன்றினி உடைய னோபணி போற்றி உம்பரார் தம்ப ராபரா போற்றி யாரினும் கடைய னாயினேன் போற்றி என்பெருங் கருணை யாளனே போற்றி என்னைநின் அடிய னாக்கினாய் போற்றி ஆதியும் அந்த மாயினாய் போற்றி அப்பனே 97 அப்ப னேயெனக் கமுத னே ஆனந்த னேஅகம் நெகஅள் ளுறுதேன் ஒப்ப னேஉனக் குரிய அன்பரில் உரிய னாய்உனைப் பருக நின்றதோர் துப்ப னேசுடர் முடிய னேதுணை யாள னேதொழும் பாள ரெய்ப்பினில் வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய் நைய வையகத் தெங்கள் மன்னனே 98 மன்ன எம்பிரான் வருக என்னெனை மாலும் நான்முகத் தொருவன் யாரினும் முன்ன எம்பிரான் வருக என்னெனை முழுதும் யாவையும் இறுதி யுற்றநாள் பின்ன எம்பிரான் வருக என்னெனைப் பெய்க ழற்கண்அன் பாய்என் நாவினாற் பன்ன எம்பிரான் வருக என்னெனைப் பாவ நாசநின் சீர்கள் பாடவே 99 பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்து ஆடு நின்கழற் போது நாயினேன் கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்து அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே 100 திருச்சிற்றம்பலம் 6. நீத்தல் விண்ணப்பம் பதிகச் சிறப்பு: பிரபஞ்ச வைராக்கியம் யாப்பு: கட்டளைக் கலித்துறை தலம்: திரு உத்தரகோசமங்கை இறைவர்: காட்சிகொடுத்த நாயகர். இறைவி: சுந்தர நாயகி இருப்பிடம்: இராமநாதபுரம் அருகே உள்ளது. தலக்குறிப்பு: உமையம்மைக்கு இறைவன் உபதேசம் கெய்த தலம். மாணிக்கவாசகருக்கு இறைவன் உருவக் காட்சி தந்த தலம். திருச்சிற்றம்பலம் கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே 1 கொள்ளேர் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண் டாய்நின் விழுத்தொழும்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே 2 காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை விடுதிகண் டாய்விளங் குந்திருவா ருருறை வாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே 3 வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண் மதிக்கொழுந்தொன்று ஒளிர்கின்ற நீண்முடி உத்தர கோசமங் கைக்கரசே தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச் செழுஞ்சுடரே 4 செழிகின்ற தீப்புகு விட்டிலின் சின்மொழி யாரிற்பன்னாள் விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால் உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே வழிநின்று நின்னருள் ஆரமு தூட்ட மறுத்தனனே 5 மறுத்தனன் யானுன் அருளறி யாமையில் என்மணியே வெறுத்தெனை நீவிட் டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி ஒறுத்தெனை யாண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே 6 பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விடம் உண்மிடற்று மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே 7 தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரருள் என்கொலென்று வேர்க்கின்ற என்னை விடுதிகண் டாய்விர வார்வெருவ ஆர்க்கின்ற தார்விடை உத்தர கோசமங் கைக்கரசே ஈர்க்கின்ற அஞ்சொடச் சம்வினை யேனை இருதலையே 8 இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலை யேனை விடுதிகண் டாய்வியன் முவுலகுக்கு ஒருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே பொருதலை முவிலை வேல்வல னேந்திப் பொலிபவனே 9 பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற் றாக்கையைப் போக்கப்பெற்று மெலிகின்ற என்னை விடுதிகண் டாய்அளி தேர்விளரி ஒலிநின்ற பூம்பொழில் உத்தர கோசமங் கைக்கரசே வலிநின்ற திண்சிலை யாலெரித் தாய்புரம் மாறுபட்டே 10 மாறுபட் டஞ்சென்னை வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள் வேறுபட் டேனை விடுதிகண் டாய்வினை யேன்மனத்தே ஊறுமட் டேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே நீறுபட் டேயொளி காட்டும்பொன் மேனி நெடுந்தகையே 11 நெடுந்தகை நீயென்னை யாட்கொள்ள யான்ஐம் புலன்கள்கொண்டு விடுந்தகை யேனை விடுதிகண் டாய்விர வார்வெருவ அடுந்தகை வேல்வல்ல உத்தர கோசமங் கைக்கரசே கடுந்தகை யேன்உண்ணுந் தெண்ணீ ரமுதப் பெருங்கடலே 12 கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலினுள்ளம் விடலரி யேனை விடுதிகண் டாய்விட லில்லடியார் உடலில மேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மடலின்மட் டேமணி யேயமு தேயென் மதுவெள்ளமே 13 வெள்ளத்துள் நாவற்றி யாங்குன் னருள்பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும் பும்அடியார் உள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத களியெனக்கே 14 களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே எளிவந்த எந்தைபி ரான்என்னை யாளுடை என்னப்பனே 15 என்னைஅப் பாஅஞ்ச லென்பவர் இன்றிநின் றெய்த்தலைந்தேன் மின்னையொப் பாய்விட் டிடுதிகண் டாய்உவ மிக்கின்மெய்யே உன்னையொப் பாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அன்னையொப் பாயெனக்கு அத்தனொப் பாயென்னரும் பொருளே 16 பொருளே தமியேன் புகலிட மேநின் புகழிகழ்வார் வெருளே எனைவிட் டிடுதிகண் டாய்மெய்ம்மை யார்விழுங்கும் அருளே அணிபொழில் உத்தர கோசமங் கைக்கரசே இருளே வெளியே இகபர மாகி இருந்தவனே 17 இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னினல்லால் விருந்தின னேனை விடுதிகண் டாய்மிக்க நஞ்சமுதா அருந்தின னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே 18 மடங்கவென் வல்வினைக் காட்டைநின் மன்னருள் தீக்கொளுவும் விடங்கஎன் தன்னை விடுதிகண் டாய்என் பிறவியைவே ரொடுங்களைந்து ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே கொடுங்கரிக் குன்றுரித்து அஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே 19 கொம்பரில் லாக்கொடி போல்அல மந்தனன் கோமளமே வெம்புகின் றேனை விடுதிகண் டாய்விண்ணர் நண்ணுகில்லா உம்பருள்ளாய் மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அம்பர மேநில னேயனல் காலொடு அப்புஆனவனே 20 ஆனைவெம் போரிற் குறுந்தூ றெனப்புல னால்அலைப்புண்டு ஏனையெந் தாய்விட் டிடுதிகண் டாய்வினை யேன்மனத்துத் தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத் தையுமொத்து ஊனையும் என்பினையும் உருக்கா நின்ற ஒண்மையனே 21 ஒண்மைய னேதிரு நீற்றையுத் தூளித்து ஒளிமிளிரும் வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட்கு அண்மைய னேயென்றுஞ் சேயாய் பிறர்க்கறி தற்கரிதாம் பெண்மைய னேதொன்மை ஆண்மைய னேயலிப் பெற்றியனே 22 பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்குமன்பின் வெற்றடி யேனை விடுதிகண் டாய்விடி லோகெடுவேன் மற்றடி யேன்தன்னைத் தாங்குநர் இல்லையென் வாழ்முதலே உற்றடி யேன்மிகத் தேறிநின் றேன்எனக் குள்ளவனே 23 உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுழனி வெள்ளன லேனை விடுதிகண் டாய்வியன் மாத்தடக்கைப் பொள்ளல்நல் வேழத்து உரியாய் புலனின்கட் போதலொட்டா மெள்ளன வேமொய்க்கு நெய்க்குடந் தன்னை எறும்பெனவே 24 எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலந்த வெறுந்தமி யேனை விடுதிகண் டாய்வெய்ய கூற்றொடுங்க உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவர் உம்பரும்பர் பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே 25 பெருநீ ரறச்சிறு மீன்துவண் டாங்கு நினைப்பிரிந்த வெருநீர்மை யேனை விடுதிகண் டாய்வியன் கங்கைபொங்கி வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின்வெள்ளைக் குருநீர் மதிபொதி யுஞ்சடை வானக் கொழுமணியே 26 கொழுமணி யேர்நகை யார்கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி விழுமடி யேனை விடுதிகண் டாய்மெய்ம் முழுதுங்கம்பித்து அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளியென்னைக் கழுமணி யேயின்னுங் காட்டுகண் டாய்நின் புலன்கழலே 27 புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே விலங்குகின் றேனை விடுதிகண் டாய்விண்ணும் மண்ணுமெல்லாம் கலங்கமுந் நீர்நஞ் சமுதுசெய் தாய்கரு ணாகரனே துலங்குகின் றேனடி யேனுடை யாய்என் தொழுகுலமே 28 குலங்களைந் தாய்களைந் தாய்என்னைக் குற்றங்கொற் றச்சிலையாம் விலங்கலெந் தாய்விட் டிடுதிகண் டாய்பொன்னின் மின்னுகொன்றை அலங்கலந் தாமரை மேனியப் பாவொப்பி லாதவனே மலங்களைந் தாற்சுழல் வன்தயி ரிற்பொரு மத்துறவே 29 மத்துறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக் கொத்துறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றித் தத்துறு நீறுட னாரச்செஞ் சாந்தணி சச்சையனே 30 சச்சைய னேமிக்க தண்புனல் விண்கால் நிலநெருப்பாம் விச்சைய னேவிட் டிடுதிகண் டாய்வெளி யாய்கரியாய் பச்சைய னேசெய்ய மேனியனே யொண்பட அரவக் கச்சைய னேகடந் தாய்தடந் தாள அடற்கரியே 31 அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தஎன்னை விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால் தொடற்கரி யாய்சுடர் மாமணியே சுடுதீச்சுழலக் கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே 32 கண்டது செய்து கருணைமட் டுப்பரு கிக்களித்து மிண்டுகின் றேனை விடுதிகண் டாய்நின் விரைமலர்த்தாள் பண்டுதந் தாற்போல் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக் கொண்டெனெந் தாய்களை யாய்களை யாய குதுகுதுப்பே 33 குதுகுதுப் பின்றிநின்று என்குறிப் பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனங்கனிவித்து எதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே 34 பரம்பர னேநின் பழவடி யாரொடு மென்படிறு விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின் அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாய்அரவம் பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே 35 பொதும்புறு தீப்போற் புகைந்தெரி யப்புலன் தீக்கதுவ வெதும்புறு வேனை விடுதிகண் டாய்விரை யார்நறவம் ததும்புமந் தாரத்தில் தாரம் பயின்றுமந் தம்முரல்வண்டு அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத்து அடலரைசே 36 அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால் விரைசேர் முடியாய் விடுதிகண் டாய்வெண் ணகைக்கருங்கண் திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா வரைசேர்ந் தடர்ந்தென்ன வல்வினை தான்வந்து அடர்வனவே 37 அடர்புல னால்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொனல் லாரவர்தம் விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேயெரியுஞ் சுடரனை யாய்சுடு காட்டர சேதொழும் பர்க்கமுதே தொடர்வரி யாய்தமி யேன்றனி நீக்குந் தனித்துணையே 38 தனித்துணை நீநிற்க யான்தருக் கித்தலை யால்நடந்த வினைத்துணை யேனை விடுதிகண் டாய்வினை யேனுடைய மனத்துணை யேயென்தன் வாழ்முத லேயெனக் கெய்ப்பில்வைப்பே தினைத்துணை யேனும் பொறேன்துயர் ஆக்கையின் திண்வலையே 39 வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதிகண் டாய்வெண் மதியினொற்றைக் கலைத்தலை யாய்கரு ணாகர னேகயி லாயமென்னும் மலைத்தலை வாமலை யாள்மண வாளஎன் வாழ்முதலே 40 முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமுழ்கி விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன் சிவகதியே 41 கதியடி யேற்குன் கழல்தந் தருளவும் ஊன்கழியா விதியடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற் பதியுடை வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்கஅஞ்சி மதிநெடு நீரிற் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே 42 மன்னவ னேயொன்று மாறறி யாச்சிறி யேன்மகிழ்ச்சி மின்னவ னேவிட் டிடுதிகண் டாய்மிக்க வேதமெய்ந்நூல் சொன்னவ னேசொற் கழிந்தவ னேகழி யாத்தொழும்பர் முன்னவ னேபின்னும் ஆனவ னேயிம் முழுதையுமே 43 முழுதயில் வேற்கண் ணியரென்னு முரித் தழல்முழுகும் விழுதனை யேனை விடுதிகண் டாய்நின் வெறிமலர்த்தாள் தொழுதுசெல் வான்நல் தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான் பழுதுசெய் வேனை விடேல்உடையாய் உன்னைப் பாடுவனே 44 பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித் தாய்க்குப்பச்சூன் வீடிற்றி லேனை விடுதிகண் டாய்வியந் தாங்கலறித் தேடிற்றி லேன்சிவன் எவ்விடத் தான்எவர் கண்டனரென்று ஓடிற்றி லேன்கிடந் துள்ளுரு கேன்நின்று உழைத்தனனே 45 உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் விழைதரு வேனை விடுதிகண் டாய்விடின் வேலைநஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபர னென்றென்று அறைவன் பழிப்பினையே 46 பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண் டாய்வெண் மணிப்பணிலம் கொழித்துமந் தாரமந் தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே 47 தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண் வீரஎன் தன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார் ஆரடி யானென்னின் உத்தர கோசமங் கைக்கரசின் சீரடி யாரடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே 48 சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கென்று விரிப்பிப்பன் என்னை விடுதிகண் டாய்விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் தோலுடைப் பிச்சன்நஞ் சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சன் என்னையும் ஆளுடைப் பிச்சனென் றேசுவனே 49 ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின் தேசுடை யாயென்னை யாளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக் காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே 50 திருச்சிற்றம்பலம் 7. திருவெம்பாவை பதிகச் சிறப்பு: சத்தியை வியந்தது யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: திரு அண்ணாமலை இறைவர்: அண்ணாமலையார் இறைவி: உண்ணாமுலை இருப்பிடம்: சென்னையிலிருந்து செல்லலாம். விழுப்புரம்-காட்பாடி வழயில் உள்ளது. தலக்குறிப்பு: அயனும் மாலும் அடிமுடி தேடிய தலம். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலம். அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த தலம். நினைக்கவே முத்தியருளும் தலம். கார்த்திகை மாதப் பரணி தீபம் நடைபெறும் தலம். திருச்சிற்றம்பலம் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய் 1 பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசீ இவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய் 2 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய் 3 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் 4 மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய் 5 மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய் 6 அன்னே இவையும் சிலவோ பலவமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய் 7 கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய் 8 முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய் 9 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் 10 மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய் 11 ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய் 12 பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 13 காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய் 14 ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தம் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 15 முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் 16 செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 17 அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப்பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் 18 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் 19 போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய் 20 திருச்சிற்றம்பலம் 8. திரு அம்மானை பதிகச் சிறப்பு: ஆனந்தக் களிப்பு யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: திரு அண்ணாமலை இறைவர்: அண்ணாமலையார் இறைவி: உண்ணாமுலை இருப்பிடம்: சென்னையிலிருந்து செல்லலாம். விழுப்புரம்-காட்பாடி வழயில் உள்ளது. தலக்குறிப்பு: அயனும் மாலும் அடிமுடி தேடிய தலம். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலம். அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த தலம். நினைக்கவே முத்தியருளும் தலம். கார்த்திகை மாதப் பரணி தீபம் நடைபெறும் தலம். திருச்சிற்றம்பலம் செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய் 1 பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய் 2 இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச் சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய் 3 வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு ஊன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய் 4 கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத் தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய் 5 கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித் தாள்தா மரைக்காட்டித் தன்கருணைத் தேன்காட்டி நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த ஆட்டான் கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய் 6 ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச் சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின் மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத் தாயான தத்துவனைத் தானே உலகேழும் ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய் 7 பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் 8 துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான் கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான் கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான் அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம் பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும் அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய் 9 விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் 10 செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான் தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான் அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய் 11 மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும் எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய் எப்பொருட்குந் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருளாம் நம்சிவனைப் பாடுதுங்காண் அம்மானாய் 12 கையார் வளைசிலம்பக் காதார் குழையாட மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்பச் செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய் 13 ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்தினிய கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும் வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய் 14 சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில் இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச் சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய் 15 ஊனாய் உயிராய் உணர்வாய்என் னுட்கலந்து தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோர் அறியா வழியெமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர் ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும் கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய் 16 சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள் கூடுவேன் கூடி முயங்கி மயங்கிநின்று ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்ளுருகித் தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன் வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனலேந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய் 17 கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய் 18 முன்னானை முவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய் 19 பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய் 20 திருச்சிற்றம்பலம் 9. திருப் பொற்சுண்ணம் பதிகச் சிறப்பு: ஆனந்த மனோலயம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 1 பூவியல் வார்சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே குனிமின் தொழுமின்எங் கோன்எங்கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே 2 சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் தன்பெருமான் ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்தும்நாமே 3 காசணி மின்கள் உலக்கையெல்லாம் காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 4 அறுகெடுப் பார்அய னும்அரியும் அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம் நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினீர் முக்கண்அப்பற்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 5 உலக்கை பலஓச்சு வார்பெரியர் உலகமெ லாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார் காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்தும்நாமே 6 சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத் தொண்டர் குழாமெழுந் தார்ப்பஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்பப் பாடக மெல்லடி யார்க்குமங்கை பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்னகோவுக்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 7 வாள்தடங் கண்மட மங்கைநல்லீர் வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 8 வையகம் எல்லாம் உரலதாக மாமேரு என்னும் உலக்கைநாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச் செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 9 முத்தணி கொங்கைகள் ஆடஆட மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 10 மாடு நகைவாள் நிலாவெறிப்ப வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடிச் சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 11 மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பி ரானைநம்மை அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப் போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 12 மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் என்னுடை ஆரமுது எங்களப்பன் எம்பெரு மான்இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே 13 சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாய்இத ழுந்துடிப்பச் சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும் கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப் பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே 14 ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்துதித் திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 15 ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவிலுங் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான் சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் செம்பொன்செய் சுண்ணம் இடித்தும்நாமே 16 தேனக மாமலர்க் கொன்றைபாடிச் சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே 17 அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக் காலனைக் காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல்பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே 18 வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக் கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி ஈசற்குச் சுண்ணம் இடித்தும்நாமே 19 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாய்இருள் ஆயினார்க்குத் துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப் பந்தமு மாய்வீடும் ஆயினாருக்கு ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே 20 திருச்சிற்றம்பலம் 10. திருக் கோத்தும்பி பதிகச் சிறப்பு: சிவனோடு ஐக்கியம் யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ 1 நானார்என் உள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ 2 தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 3 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ 4 அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ 5 வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலங் கல்வியென்னும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ 6 சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம் சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ 7 ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான் குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ 8 கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென்று இவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 9 நோயுற்று முத்துநான் நுந்துகன்றாய் இங்கிருந்து நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம் தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத் தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ 10 வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 11 நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ 12 நான்தனக்கு அன்பின்மை நானும்தா னும்அறிவோம் தானென்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவார் ஆன கருணையும் அங்குற்றே தானவனே கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ 13 கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ 14 நானுமென் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான் தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ 15 உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்எம்பி ரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 16 பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன் செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ 17 தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ 18 கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே உள்ளத் துறுதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 19 பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்று ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 20 திருச்சிற்றம்பலம் 11. திருத் தெள்ளேணம் பதிகச் சிறப்பு: சிவனோடு அடைவு யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 1 திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் திருவாருர் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 2 அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டு உலகமெல்லாம் சிரிக்கும் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ 3 அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ 4 அருமந்த தேவர் அயன்திருமாற்கு அரியசிவம் உருவந்து பூதலத்தோர் உகப்பெய்தக் கொண்டருளிக் கருவெந்து வீழக் கடைக்கணித்தென் உளம்புகுந்த திருவந்த வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ 5 அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர்க் கண்களில்நீர்த் திரையாடு மாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ 6 ஆவா அரிஅயன்இந் திரன்வானோர்க் கரியசிவன் வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித் தாண்டுகொண்டான் பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே தேவான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ 7 கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போடு இறப்பென்னும் அறம்பாவம் என்றிரண்டச் சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான் மறந்தேயுந் தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கியஅத் திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 8 கன்னார் உரித்தென்ன என்னையுந்தன் கருணையினால் பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் புகழ்பாடி மின்னேர் நுடங்கிடைச் செந்துவர்வாய் வெண்ணகையீர் தென்னாதென் னாவென்று தெள்ளேணம் கொட்டாமோ 9 கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேய் அனவளைத் தோளியோடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம் சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ 10 கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக் கலந்தாண்டலுமே அயல்மாண்டு அருவினைச் சுற்றமுமாண்டு அவனியின்மேல் மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண்டு என்னுடைய செயல்மாண்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ 11 முத்திக் குழன்று முனிவர்குழாம் நனிவாட அத்திக் கருளி அடியேனை ஆண்டுகொண்டு பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி தித்திக்கு மாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ 12 பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும் ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன் சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 13 மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன் பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால் சேலேர்கண் ணீர்மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ 14 உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு பருகற்கு இனிய பரங்கருணைத் தடங்கடலை மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் திருவைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 15 புத்தன் புரந்தராதி அயன்மால் போற்றிசெயும் பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த அத்தன் அணிதில்லை அம்பலவன் அருட்கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ 16 உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் செயலைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 17 வான்கெட்டு மாருதம் மாய்ந்துஅழல்நீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டுஎன் உள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ 18 விண்ணோர் முழுமுதல் பாதாளத் தார்வித்து மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம் கண்ணார வந்துநின்றான் கருணைக் கழல்பாடித் தென்னாதென் னாவென்று தெள்ளேணம் கொட்டாமோ 19 குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாடோறும் அலம்பார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ 20 திருச்சிற்றம்பலம் 12. திருச் சாழல் பதிகச் சிறப்பு: சிவனுடைய காருணியம் யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ 1 என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ 2 கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ 3 அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கள் மாயாவடுச் செய்தான் காணேடீ நயனங்கள் முன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ 4 தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ 5 அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரங் தவிரார்காண் சாழலோ 6 மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ 7 கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ 8 தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ 9 தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ 10 நங்காய்இ தென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ 11 கானார் புலித்தோல் உடைதலையூண் காடுபதி ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ 12 மலையரையன் பொற்பாவை வாணுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்தும் கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ 13 தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ 14 கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்கள் அவைமுன்றும் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ 15 நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினும் கொன்றான்காண் புரமுன்றுங் கூட்டோடே சாழலோ 16 அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ 17 சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனமிடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ 18 அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ 19 அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ 20 திருச்சிற்றம்பலம் 13. திருப் பூவல்லி பதிகச் சிறப்பு: மாயாவிசயம் நீக்குதல் யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன் அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ 1 எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ 2 நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத் தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் மாயப் பிறப்பறுத் தாண்டானென் வல்வினையின் வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ 3 பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே எண்பட்ட தக்கன் அருக்கன்எச்சன் இந்துஅனல் விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 4 தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ 5 எரிமுன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் சிரமுன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி உருமுன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே புரமுன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ 6 வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான் அணங்கொ டணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ 7 நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக் கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 8 பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் என்னாகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க் கன்னா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ 9 பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடியென் தலைமேல் வைத்தபிரான் காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ 10 பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ 11 வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவ னாய்நின்று கூடலிலாக் குணக்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ 12 அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும் நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப் பொன்றாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ 13 படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்கு இடமாகக் கொண்டிருந்து ஏகம்பம் மேயபிரான் தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ 14 அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ 15 திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ 16 முன்னாய மாலயனும் வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே என்னாகம் உள்புகுந் தாண்டுகொண்டான் இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ 17 சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ 18 அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான் பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல் புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ 19 மாவார ஏறி மதுரைநகர் புகுந்தருளித் தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான் கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும் பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ 20 திருச்சிற்றம்பலம் 14. திரு உந்தியார் பதிகச் சிறப்பு: ஞான வெற்றி யாப்பு: கலித்தாழிசை தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற 1 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற 2 தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழிந்தன முப்புரம் உந்தீபற 3 உய்யவல் லாரொரு முவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற 4 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருத்திர நாதனுக் குந்தீபற 5 ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் றுந்தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற 6 வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற 7 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேஏடி உந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற 8 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற 9 வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சின வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற 10 ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கநின் றுந்தீபற 11 உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெலாம் உந்தீபற 12 நாமகள் நாசி சிரம்பிர மன்படச் சோமன் முகம்நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற 13 நான்மறை யோனும் மகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியில் உந்தீபற 14 சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற 15 தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற 16 பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே உந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற 17 நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற 18 தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இருபதும் இற்றதென் றுந்தீபற 19 ஏகாச மிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங் காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற 20 திருச்சிற்றம்பலம் 15. திருத் தோணோக்கம் பதிகச் சிறப்பு: பிரபஞ்ச சுத்தி யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப் பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய் கூத்தாஉன் சேவடி கூடும்வண்ணம் தோணோக்கம் 1 என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித் துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ 2 பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ 3 கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போலஎன் நெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ 4 நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ 5 புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம் தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச் சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ 6 தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம் 7 மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர் வானம் தொழுந்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் ஆனந்தக் கூத்தன் அருள்பெறில்நாம் அவ்வணமே ஆனந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம் 8 எண்ணுடை முவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின் எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம் 9 பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ 10 காமன் உடலுயிர் காலன்பற் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ 11 பிரமன் அரியென்று இருவருந்தம் பேதைமையால் பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ 12 ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ 13 உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும் கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத் துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ 14 திருச்சிற்றம்பலம் 16. திருப் பொன்னூசல் பதிகச் சிறப்பு: அருள் சுத்தி யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன்அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருள்தா ளிணைபாடிப் போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ 1 முன்றங் கிலங்கு நயனத்தன் முவாத வான்தங்கு தேவர்களும் காணா மலரடிகள் தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங்கு இடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங்கு அனநடையீர் பொன்னூசல் ஆடாமோ 2 முன்னீறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத் தன்னீறு எனக்கருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 3 நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ 4 ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ 5 மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணம் திகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 6 உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல் என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 7 கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழும் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ 8 தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையும் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ 9 திருச்சிற்றம்பலம் 17. அன்னைப் பத்து பதிகச் சிறப்பு: ஆத்தும பூரணம் யாப்பு: கலிவிருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும் 1 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும் உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும் 2 நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும் 3 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவாறு அன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுஎன்னே அன்னே என்னும் 4 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும் 5 உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதிசயம் அன்னே என்னும் 6 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும் 7 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாளம் இருந்தவாறு அன்னே என்னும் 8 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையும்இது என்னே அன்னே என்னும் 9 கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக் கானவாறு அன்னே என்னும் 10 திருச்சிற்றம்பலம் 18. குயில் பத்து பதிகச் சிறப்பு: ஆத்தும இரக்கம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை ஆதி குணமொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய் 1 ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வும்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப் பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய் 2 நீல வுருவிற் குயிலே நீண்மணி மாடம் நிலாவும் கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில் சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய் 3 தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன் மான்பழித் தாண்டமென் னோக்கி மணாளனை நீவரக் கூவாய் 4 சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான் முந்தும் நடுவும் முடிவு மாகிய முவ ரறியாச் சிந்துரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய் 5 இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன் நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய் 6 உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன் பொன்னை அழித்தநன் மேனிப் புகழில் திகழும் அழகன் மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங் கன்வரக் கூவாய் 7 வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி ஓவியவர் உன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி மேவிஅன் றண்டம் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன் தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய் 8 காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழும் குயிலே சீருடைச் செங்கம லத்தில் திகழுரு வாகிய செல்வன் பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய் 9 கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ அந்தண னாகிவந் திங்கே அழகிய சேவடி காட்டி எந்தம ராம்இவன் என்றிங் கென்னையும் ஆட்கொண் டருளும் செந்தழல் போல்திரு மேனித் தேவர் பிரான்வரக் கூவாய் 10 திருச்சிற்றம்பலம் 19. திருத் தசாங்கம் பதிகச் சிறப்பு: அடிமை கொண்ட முறைமை யாப்பு: நேரிசை வெண்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆருரன் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று 1 ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் தென்பாண்டி நாடே தெளி 2 தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர் 3 செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தம் காணுடையான் ஆறு 4 கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து இருளகல வாள்வீசி இன்பமரு முத்தி அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து 5 இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து 6 கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும் கழுக்கடைகாண் கைக்கொள் படை 7 இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை 8 ஆய மொழிக்கிள்ளாய் அள்ளுறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளிஅறு காம்உவந்த தார் 9 சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலா ஏறாங் கொடி 10 திருச்சிற்றம்பலம் 20. திருப் பள்ளியெழுச்சி பதிகச் சிறப்பு: திரோதான சுத்தி யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 1 அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே 2 கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 3 இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 4 பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 5 பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 6 அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவனவன் எனவே எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் முவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின் னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே 9 புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே 10 திருச்சிற்றம்பலம் 21. கோயில் முத்த திருப்பதிகம் பதிகச் சிறப்பு: அநாதியாகிய சற்காரியம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேனுன் அடியார் நடுவுள் இருக்கும்அரு ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே 1 முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப் பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில்அடியார் உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே 2 உகந்தா னேஅன் புடையடிமைக் குருகா உள்ளத் துணர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால் தக்க வாறன் றென்னாரோ மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன் முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே 3 முழுமுத லேஐம் புலனுக்கும் முவர்க் கும்என் தனக்கும் வழிமுத லேநின் பழவடியார் திரள்வான் குழுமிக் கெழுமுத லேஅருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என்று அழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே 4 அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால் பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ 5 ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான் என்று பிறரெல்லாம் பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்கும் திருவோ லக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே 6 இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந் திருப்பேனை அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வார் இலிமா டாவேனோ நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும் மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென் றருளாயே 7 அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர்இங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ 8 சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம் தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே 9 நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே 10 திருச்சிற்றம்பலம் 22. கோயில் திருப்பதிகம் பதிகச் சிறப்பு: அநுபோக இலக்கணம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே 1 அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே சீருடைச் சிவபுரத் தரைசே 2 அரைசனே அன்பர்க்கு அடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப் பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே 3 உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே 4 குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை என்னிரக் கேனே 5 இரந்திரந் துருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே 6 இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும்நீ யல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற் பாரே 7 பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந் துறையுறை சிவனே யாருற வெனக்கிங்கு ஆரயல் உள்ளார் ஆனந்தம் ஆக்குமென் சோதி 8 சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய் வந்துநின் இணையடி தந்தே 9 தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான் திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யானிதற் கிலன்ஓர்கைம் மாறே 10 திருச்சிற்றம்பலம் 23. செத்திலாப் பத்து பதிகச் சிறப்பு: சிவானந்தம் அளவறுக்கொணாமை யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமு தூறும் புதும லர்க்கழல் இணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருட்பெருங் கடலே அத்த னேஅயன் மாற்கறி யொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 1 புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உண்டியாய் அண்ட வாணரும் பிறரும் வற்றி யாரும்நின் மலரடி காணா மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய் பதையேன் மனமிக உருகேன் பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச் செற்றிலேன் இன்னுந் திரிதரு கின்றேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 2 புலைய னேனையும் பொருளென நினைந்துன் அருள்பு ரிந்தனை புரிதலுங் களித்துத் தலையி னால்நடந் தேன்விடைப் பாகா சங்கரா எண்ணில் வானவர்க் கெல்லாம் நிலைய னேஅலை நீர்விட முண்ட நித்த னேஅடை யார்புர மெரித்த சிலைய னேயெனைச் செத்திடப் பணியாய் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 3 அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார் அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம் என்ப ராய்நினை வார்எ னைப்பலர் நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய் வன்ப ராய்முரு டொக்கும்என் சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 4 ஆட்டுத் தேவர்தம் விதியொழித் தன்பால் ஐயனே யென்றுன் அருள்வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே நாத னேஉனைப் பிரிவுறா அருளைக் காட்டித் தேவநின் கழலிணை காட்டிக் காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் சேட்டைத் தேவர்தந் தேவர் பிரானே திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 5 அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்கு ஆர்கி லேன்திரு வருள்வகை யறியேன் பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன் போற்றி போற்றியென் போர்விடைப் பாகா இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க என்செய் கேன்இது செய்கவென் றருளாய் சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 6 மாய னேமறி கடல்விட முண்ட வான வாமணி கண்டத்தெம் அமுதே நாயி னேன்உனை நினையவும் மாட்டேன் நமச்சி வாயஎன் றுன்னடி பணியாப் பேய னாகிலும் பெருநெறி காட்டாய் பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞக னேயோ சேய னாகிநின் றலறுவ தழகோ திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 7 போது சேரயன் பொருகடற் கிடந்தோன் புரந்த ராதிகள் நிற்கமற் றென்னைக் கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக் குறிக்கொள் கென்றுநின் தொண்டரிற் கூட்டாய் யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ சீத வார்புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 8 ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் காலன் ஆருயிர் கொண்டபூங் கழலாய் கங்கை யாய்அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே மரக்க ணேனையும் வந்திடப் பணியாய் சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே 9 அளித்து வந்தெனக் காவஎன் றருளி அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே வளைக்கை யானொடு மலரவன் அறியா வான வாமலை மாதொரு பாகா களிப்பெ லாமிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே 10 திருச்சிற்றம்பலம் 24. அடைக்கலப் பத்து பதிகச் சிறப்பு: பக்குவ நிண்ணயம் யாப்பு: பலவகை தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே 1 வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினால் பொறுப்பவனே அராப்பூண் பவனேபொங்கு கங்கைசடைச் செறுப்பவனே நின்திரு வருளாலென் பிறவியைவேர் அறுப்பவனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 2 பெரும்பெருமான் என்பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் சதுரப் பெருமான்என் மனத்தினுள்ளே வரும்பெருமான் மலரோன் நெடுமால றியாமல்நின்ற அரும்பெருமான் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 3 பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில் நின்கழற்புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர்வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்சுறவெறிய அழிகின்றனன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 4 சுருள்புரி கூழையர் சூழலிற்பட்டுன் திறம்மறந்திங்கு இருள்புரி யாக்கையிலே கிடந்தெய்த்தனன் மைத்தடங்கண் வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்பங்க விண்ணோர்பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 5 மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திடவுடைந்து தாழியைப் பாவுதயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழிஎப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வல்வினையேன் ஆழியப்பா உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 6 மின்கணினார் நுடங்கும் இடையார்வெகுளி வலையில்அகப்பட்டுப் புன்கணனாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி என்கணிலே அமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும் அங்கணனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 7 மாவடு வகிரன்ன கண்ணிபங்கா நின்மலரடிக்கே கூவிடுவாய் கும்பிக்கே யிடுவாய் நின்குறிப்பறியேன் பாவிடையாடு குழல்போல் கரந்து பரந்ததுள்ளம் ஆகெடுவேன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 8 பிறிவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம் வந்துபெற்றார் உன்னைவந்திப்பதோர் நெறியறியேன் நின்னையே அறியேன் நின்னையேயறியும் அறிவறியேன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 9 வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால் தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய் அழுங்குகின்றேன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 10 திருச்சிற்றம்பலம் 25. ஆசைப் பத்து பதிகச் சிறப்பு: ஆத்தும இலக்கணம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் கருடக் கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ இருளைத் துரந்திட் டிங்கே வாவென் றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 1 மொய்ப்பால் நரம்பு கயிறாக முளை என்பு தோல்போர்த்த குப்பா யம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ எப்பா லவர்க்கும் அப்பா லாம்என் ஆரமு தேயோ அப்பா காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 2 சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இதுசிதையக் கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 3 மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம்எம் பெருமானே உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் அடைந்துநின் றிடுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 4 அளிபுண் ணகத்துப் புறந்தோல் முடி அடியே னுடையாக்கை புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும் விடையாய் பொடியாடீ எளிவந் தென்னை ஆண்டு கொண்ட என்னா ரமுதேயோ அளியேன் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 5 எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண அத்தா சால ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 6 பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி வாராய் வாரா உலகம் தந்து வந்தாட் கொள்வானே பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் எனவேத்த ஆரா அமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 7 கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயால் அரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 8 செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுர நகர்புக்குக் கடியார் சோதி கண்டு கொண்டென் கண்ணிணை களிகூரப் படிதா னில்லாப் பரம்பர னேஉன் பழவடி யார்கூட்டம் அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 9 வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 10 திருச்சிற்றம்பலம் 26. அதிசயப் பத்து பதிகச் சிறப்பு: முத்தி இலக்கணம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 1 நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன் ஏத மேபிறந் திறந்துழல் வேன்தனை என்னடி யானென்று பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 2 முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப் பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 3 பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரண மிதுகேளீர் ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 4 பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன் குரவு வார்குழ லார்திறத் தேநின்று குடிகெடு கின்றேனை இரவு நின்றெரி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 5 எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 6 பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 7 நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 8 உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல் பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 9 இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இதுவித்தைப் பொருளெ னக்களித் தருநர கத்திடை விழப்புகு கின்றேனைத் தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே 10 திருச்சிற்றம்பலம் 27. புணர்ச்சிப் பத்து பதிகச் சிறப்பு: அத்துவித இலக்கணம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை வாளா தொழும்புகந்து கடைபட் டேனை ஆண்டுகொண்ட கருணா லயனைக் கருமால்பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னாரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 1 ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து சிவனெம் பெருமான் என்றேத்தி ஊற்று மணல்போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டுப் போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 2 நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை அள்ளூ றுள்ளத்து அடியார்முன் வேண்டுந் தனையும் வாய்விட் டலறி விரையார் மலர்தூவிப் பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 3 அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனும் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்தசுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின்சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 4 திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ்மேல் அயனும்மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்டு ஆவா என்ற நீர்மையெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 5 பரிந்து வந்து பரமா னந்தம் பண்டே அடியேற் கருள்செய்யப் பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப் புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 6 நினையப் பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் தனையொப் பாரை இல்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம் கனையக் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலரால் புனையப் பெறுவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 7 நெக்கு நெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப் புக்கு நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 8 தாதாய் முவே ழுலகுக்குந் தாயே நாயேன் தனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் ஏதா மணியே என்றென் றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப் போதாய்ந் தணைவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 9 காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் முப்பாய் முவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட பார்ப்பா னேஎம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்துபாதப் பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 10 திருச்சிற்றம்பலம் 28. வாளாழாப் பத்து பதிகச் சிறப்பு: முத்தி உபாயம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 1 வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந் துலகமூ டுருவும் செம்பெரு மானே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எம்பெரு மானே என்னையாள் வானே என்னைநீ கூவிக்கொண் டருளே 2 பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக் குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 3 வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர் காணுநாள் ஆதியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 4 பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் முக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 5 பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 6 பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர் கோலச் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 7 பந்தணை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே ஆரமு தேஅடி யேனை வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 8 பாவநா சாஉன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே முவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய்நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 9 பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே 10 திருச்சிற்றம்பலம் 29. அருள் பத்து பதிகச் சிறப்பு: மகாமாயா சுத்தி யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 1 நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே உன்னை ஓலமிட் டலறி உலகெலாம் தேடியும் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 2 எங்கள்நா யகனே என்னுயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர் தங்கள்நா யகனே தக்கநற் காமன் தனதுடல் தழலெழ விழித்த செங்கண்நா யகனே திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 3 கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற் கரிய விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 4 துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு பொங்கொளி தங்குமார் பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 5 துப்பனே தூயாய் தூயவெண் ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத்து ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறுசுவை யளிக்கும் ஆரமுதே செப்பமா மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 6 மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேவலர் புரங்கள்முன் றெரித்த கையனே காலாற் காலனைக் காய்ந்த கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 7 முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யும் சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 8 மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளனே புனிதா பொங்குவா ளரவம் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே 9 திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்றென்று அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அலைகடல் அதனுளே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் போதராய் என்றரு ளாயே 10 திருச்சிற்றம்பலம் 30. திருக்கழுக்குன்றப் பதிகம் பதிகச் சிறப்பு: குரு தரிசனம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு கழுக்குன்றம் இறைவர்: வேதபுரீசுவரர், பக்தவத்சலர் இறைவி: பெண்ணினல்லாள் அம்மை, மலைச்சொக்க நாயகி, திரிபுரசுந்தரி இருப்பிடம்: செங்கல்பட்டு அருகே உள்ளது. தலக்குறிப்பு: மாணிக்கவாசகருக்கு இறைவன் குருமுர்த்தி வடிவமாய்க் காட்சியருளிய தலம். வேதங்கள் மலையுருவாய் இறைவனைத் தாங்குதலின் வேதகிரி எனவும் இத்தலத்திற்குப் பெயருண்டு. 12 ஆண்டுகட்கு ஒருமுறை சங்கு பிறக்கின்ற பெருமையுடைய 'சங்கு பிறந்த குளம்' உடையது. கழுகுகள் வழிபட்டு அருள்பெற்ற தலம். திருச்சிற்றம்பலம் பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு மான்உன் நாமங்கள் பேசுவார்க் கிணக்கி லாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கி லாததோர் வித்து மேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 1 பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்தி லாத சழக்க னேன்உனைச் சார்ந்திலேன் சிட்ட னேசிவ லோக னேசிறு நாயி னுங்கடை யாயவெங் கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 2 மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி மலங்கெ டுத்த பெருந்துறை விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி மேல்வி ளைவத றிந்திலேன் இலங்கு கின்றநின் சேவ டிகளி ரண்டும் வைப்பிட மின்றியே கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 3 பூணொ ணாததொ ரன்பு பூண்டு பொருந்தி நாடொறும் போற்றவும் நாணொ ணாததொர் நாணம் எய்தி நடுக்க டலுள்அ ழுந்திநான் பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந் தோணி பற்றி யுகைத்தலும் காணொ ணாத்திருக் கோலம்நீ வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 4 கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே சீல மேதும் அறிந்தி லாதஎன் சிந்தை வைத்தசி காமணி ஞால மேகரி யாக நானுனை நச்சி நச்சிட வந்திடும் கால மேஉனை ஓத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 5 பேத மில்லதொர் கற்ப ளித்த பெருந்து றைப்பெரு வெள்ளமே ஏத மேபல பேச நீஎனை ஏதி லார்முனம் என்செய்தாய் சாதல் சாதல்பொல் லாமை யற்ற தனிச்ச ரண்சர ணாமெனக் காத லால்உனை ஓத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 6 இயக்கி மாரறு பத்து நால்வரை எண்கு ணம்செய்த ஈசனே மயக்க மாயதொர் மும்ம லப்பழ வல்வி னைக்குள் அழுந்தவும் துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின் தூய்ம லர்க்கழல் தந்தெனைக் கயக்க வைத்தடி யார்மு னேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 7 திருச்சிற்றம்பலம் 31. கண்ட பத்து பதிகச் சிறப்பு: நிருத்த தரிசனம் யாப்பு: கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே 1 வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே 2 உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளமன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே 3 கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோரும் காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே 4 சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே 5 பிறவிதனை அறமாற்றிப் பிணிமுப்பென் றிவையிரண்டும் உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே 6 பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே 7 அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக் களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே 8 பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி வாங்கிவினை மலமறுத்து வான்கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே 9 பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே 10 திருச்சிற்றம்பலம் 32. பிரார்த்தனைப் பத்து பதிகச் சிறப்பு: சதா முத்தி யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற திடர்பின்னாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான் அலந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே 1 அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் முக்கின்றேன் கடியே னுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே 2 அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியார் எல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை இதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே மருளார் மனத்தோர் உன்மத்தன் வருமால் என்றிங் கெனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே 3 வேண்டும் வேண்டும் மெய்யடியார் உள்ளே விரும்பி எனைஅருளால் ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்ட னேற்கும் உண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே 4 மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேருங் கயற்கண்ணாள் பங்கா உன்றன் கருணையினால் பாவி யேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்து ஆவி யாக்கை யானெனதென் றியாதும் இன்றி அறுதலே 5 அறவே பெற்றார் நின்னன்பர் அந்த மின்றி அகநெகவும் புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே 6 கடலே அனைய ஆனந்தம் கண்டா ரெல்லாம் கவர்ந்துண்ண இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்தல் அழகோ அடிநாயேன் உடையாய் நீயே அருளுதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன் சுடரார் அருளால் இருள்நீங்கச் சோதி இனித்தான் துணியாயே 7 துணியா உருகா அருள்பெருகத் தோன்றும் தொண்ட ரிடைப்புகுந்து திணியார் முங்கிற் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன் அணியா ரடியார் உனக்குள்ள அன்புந் தாராய் அருளளியத் தணியா தொல்லை வந்தருளித் தளிர்ப்பொற் பாதந் தாராயே 8 தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம் ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே 9 மானோர் பங்கா வந்திப்பார் மதுரக் கனியே மனநெகா நானோர் தோளாச் சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே ஊனே புகுந்த உனையுணர்ந்தே உருகிப் பெருகும் உள்ளத்தைக் கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடுவதே 10 கூடிக் கூடி உன்னடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா வாடி வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல் நிற்பேனோ ஊடி யூடி உடையாயொடு கலந்துள் ளுருகிப் பெருகிநெக்கு ஆடி யாடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே 11 திருச்சிற்றம்பலம் 33. குழைத்த பத்து பதிகச் சிறப்பு: ஆத்தும நிவேதனம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய் காவாய் உடையாய் கொடுவினையேன் உழைத்தா லுறுதி யுண்டோதான் உமையாள் கணவா எனையாள்வாய் பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ பிறைசேர் சடையாய் முறையோவென்று அழைத்தால் அருளா தொழிவதே அம்மா னேயுன் அடியேற்கே 1 அடியேன் அல்லல் எல்லாம்முன் அகல ஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறாஎங் கோவே ஆஆ என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்கு எங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே 2 ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே யின்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால் என்றான் கெட்ட திரங்கிடாய் எண்டோள் முக்கண் எம்மானே 3 மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ் வூனே புகஎன் தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய் ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென் றுன்னைக் கூறுவதே 4 கூறும் நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ தேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதும்நீ வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ 5 வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின்அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே 6 அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே 7 நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி ஆயக் கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரம் காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே 8 கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர எண்ணா திரவும் பகலும்நான் அவையே எண்ணும் அதுவல்லால் மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே 9 அழகே புரிந்திட் டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம்எனக்குப் புராண நீதந் தருளாதே குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே 10 திருச்சிற்றம்பலம் 34. உயிருண்ணிப் பத்து பதிகச் சிறப்பு: சிவானந்தம் மேலிடுதல் யாப்பு: கலிவிருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாகம தாய்என் மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப் பாகா செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய் எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே 1 நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு ஊனாருடல் புகுந்தான் உயிர்கலந்தான் உளம்பிரியான் தேனார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை உறைவான் வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே 2 எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன் மனவாசகங் கடந்தான்எனை மத்தோன்மத்த னாக்கிச் சினமால்விடை உடையான்மன்னு திருப்பெருந்துறை உறையும் பனவனெனைச் செய்தபடிறு அறியேன்பரஞ் சுடரே 3 வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர்விய னுலகில் எனைத்தான் புகுந்தாண்டான்என தென்பின்புரை யுருக்கிப் பினைத்தான்புகுந் தெல்லேபெருந் துறையில்உறை பெம்மான் மனத்தான்கண்ணின் அகத்தான்மறு மாற்றத்திடை யானே 4 பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின் தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை இறைசீர் கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே 5 கடலின்திரை யதுபோல்வரு கலக்கம்மலம் அறுத்தென் உடலுமென துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான் சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும் படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான்செய்த படிறே 6 வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும்விண்ணும் வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும் தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே 7 கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய்அமு தென்கோ ஆற்றேன்எங்கள் அரனேஅரு மருந்தேஎன தரசே சேற்றார்வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும் நீற்றார்தரு திருமேனிநின் மலனேஉனை யானே 8 எச்சம்அறி வேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன் அச்சோஎங்கள் அரனேஅரு மருந்தேஎன தமுதே செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான் நிச்சமென நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே 9 வான்பாவிய உலகத்தவர் தவமேசெய அவமே ஊன்பாவிய உடலைச்சுமந் தடவிமரம் ஆனேன் தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய் நான்பாவியன் ஆனால்உனை நல்காயென லாமே 10 திருச்சிற்றம்பலம் 35. அச்சப் பத்து பதிகச் சிறப்பு: ஆனந்தம் உறுதல் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 1 வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாம் திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 2 வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 3 கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 4 பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 5 வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதங் கடந்த அப்பன் தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 6 தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்தஅம் பலத்து ளாடும் முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாத மேத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 7 தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 8 மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பி ரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 9 கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியி னானை நினைந்துநைந் துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 10 திருச்சிற்றம்பலம் 36. திருப் பாண்டிப் பதிகம் பதிகச் சிறப்பு: சிவானந்த விளைவு யாப்பு: கட்டளைக் கலித்துறை தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் ஒருவரை ஒன்றுமி லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித் தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி உருவறி யாதென்றன் உள்ளமதே 1 சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம் கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே 2 நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர் பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை உள்ளங்கொண்டார் பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று பேணுமினே 3 செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன்நன்னாட்டு இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம்எக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே 4 காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதரிய ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு முலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே 5 ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும்விளங்கத் தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லன்அல்லன் வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தாள் பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே 6 மாய வனப்பரி மேற்கொண்டு மற்றவர் கைக்கொளலும் போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும் சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே 7 அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே 8 விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்கப் பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேற்கொண்டு தம்மையுந் தாம்அறி யார்மறந்தே 9 கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென் றிருந்தழகால் வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானுமோர் மீனவன்பால் ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே 10 திருச்சிற்றம்பலம் 37. பிடித்த பத்து பதிகச் சிறப்பு: முத்திக் கலப்பு உரைத்தல் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு தோணிபுரம் இறைவர்: பிரமபுரீசுவரர், தோணியப்பர் இறைவி: திருநிலைநாயகி, பெரியநாயகி இருப்பிடம்: மயிலாடுதுறை - சிதம்பரம் வழியில் உள்ளது. சீர்காழியின் மறுபெயர். தலக்குறிப்பு: சம்பந்தர் அவதரித்த தலம். சம்பந்தருக்கு ஞானப்பால் அளித்து ஆட்கொண்ட தலம். குரு, சங்கம, இலிங்க மேனிகள் தனித்தனியே இக்கோயிலில் உள்ளன. சம்பந்தருக்கு ஞானப்பால் அருளியவர் குரு முர்த்தமாக தோணியப்பர், பெரிய நாயகி என்னும் திருவுருங்களில் எழுந்தருளியுள்ளனர். பன்னிரண்டு பெயர்களை உடையது. சம்பந்தரின் "பல்பெயர்பத்து' எனனும் பதிகம் இப்பெயர்களை விளக்குகிறது. சுவாமி-அம்மன் கோயில்களுக்கிடையே ஞானசம்பந்தர் ஆலயம் உள்ளது. திருச்சிற்றம்பலம் உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெரு மானே எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 1 விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே முடைவிடா தடியேன் முத்தற மண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 2 அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஆ ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 3 அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 4 ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே செப்புதற் கரிய செழுஞ்சுடர் முர்த்தீ செல்வமே சிவபெரு மானே எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 5 அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பொருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெரு மானே இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 6 பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப் பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே தேசுடை விளக்கே செழுஞ்சுடர் முர்த்தீ செல்வமே சிவபெரு மானே ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 7 அத்தனே அண்ட ரண்டமாய் நின்ற ஆதியே யாதுமீ றில்லாச் சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெரு மானே பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும் எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 8 பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 9 புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே 10 திருச்சிற்றம்பலம் 38. திரு ஏசறவு பதிகச் சிறப்பு: சுட்டறிவொழித்தல் யாப்பு: கொச்சகக் கலிப்பா தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினையுன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே 1 பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டு ஆள்வாய்நீ வாவென்னக் கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே 2 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று ஓதமலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன் பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே 3 பச்சைத்தால் அரவாட்டீ படர்சடையாய் பாதமலர் உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன் சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம்நினைந்தே 4 கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வந்து உற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே 5 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால் உய்ஞ்சேன் எம்பெருமானே உடையானே அடியேனை அஞ்சேலென்று ஆண்டவா றன்றேஅம் பலத்தமுதே 6 என்பாலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறியவொண்ணாத் தென்பாலைத் திருப்பெருந் துறையுறையுஞ் சிவபெருமான் அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே 7 முத்தானே முவாத முதலானே முடிவில்லா ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப் பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால் பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே 8 மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர்ந் துள்ளுருகத் தெருவுதொறும் மிகஅலறிச் சிவபெருமான் என்றேத்திப் பருகியநின் பரங்கருணைத் தடங்கடலிற் படிவாமாறு அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே 9 நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய்இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே 10 திருச்சிற்றம்பலம் 39. திருப் புலம்பல் பதிகச் சிறப்பு: சிவானந்த முதிர்வு யாப்பு: கொச்சகக் கலிப்பா தலம்: திரு ஆருர் இறைவர்: புற்றிடங்கொண்டார் இறைவி: அல்லியம் பூங்கோதை இருப்பிடம்: மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து செல்லலாம். தலக்குறிப்பு: பல பெருமைகளை உடையது. மிகப்பழமை வாய்ந்த கோயில். முவராலும் சிறப்பிக்கப்பட்டது. சுந்தரருக்காக சிவபெருமான் தூது சென்ற ஊர். இவ்வூரில், 'பூங்கோயில்', 'அரநெறி', 'பரவையுண்மண்டளி' என முன்று பாடல் பெற்ற கோயில்கள் உள்ளன. இவற்றுள் பூங்கோயில் என்பதே திருவாருரரைக் குறிக்கும் முலட்டானக் கோயிலாகும். இதற்கு மட்டும் முப்பத்து நான்கு பதிகங்கள் உள. திருவாருரில் பிறக்க முத்தி என்பர். அடியார்களின் வரலாறான திருத்தொண்டத்தொகை அருளப்பட்ட தலம். தியாகேசர் எழுந்தருளியுள்ள ஏழு விடங்கத் தலங்களுள் முல முர்த்தியை உடையது. திருக்கோயில், திருக்குளம், செங்கழுநீர் ஓடை ஆகிய முன்றுமே தனித்தனியே ஐந்து வேலி நிலப்பரப்புடைய மாபெரும் கோயில். பஞ்ச பூதத் தலங்களில் நிலத் தலம் என்பர். 'திருவாருர் தேர்' என்ற பழமொழி தேர் விழாவின் சிறப்பைத் தெரிவிக்கும். திருவாதிரைத் திருவிழாவின் சிறப்பை அப்பரே பதிகம் பாடி சம்பந்தருக்குத் தெரிவிக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின் நினைவு வரவே, சுந்தரர் தம் சூளுரையையும் மறந்து ஒற்றியூரிலிருந்து திருவாருருக்குப் புறப்பட்டார் என பெரியபுராணம் கூறுகிறது. இங்கே கமலாம்பிகை தனிக் கோயிலில் யோக நிoலியில் எழுந்தருளியுள்ளார். சுந்தரர் விருத்தாசலத்தில் மணிமுத்தாற்றில் போட்ட பொன்னை, இங்குள்ள கமலாலயத் திருக்குளத்தில் எடுத்து பரவை நாச்சியாருக்கு அளித்தார். 'மீளா அடிமை' என்ற பதிகம் பாடிய சுந்தரருக்கு இறைவன் வலக்கண் அருளிய தலம். 'திருவாருர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்' எனச் சுந்தரரே மொழிவதால், இத்தலத்தின் பெருமை அளவிடற்கரியது. திருச்சிற்றம்பலம் பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடீ ஓங்கெயில்சூழ் திருவாருர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே 1 சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான் உடையானே உனையல்லா துறுதுணைமற் றறியேனே 2 உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே 3 திருச்சிற்றம்பலம் 40. குலாப் பத்து பதிகச் சிறப்பு: அநுபவம் இடையீடு படாமை யாப்பு: கொச்சகக் கலிப்பா தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து கூடும் உயிருங் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 1 துடியேர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால் செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும் முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 2 என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 3 குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப் பிறியும் மனத்தார் பிறிவரிய பெற்றியனைச் செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 4 பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத் தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாம் சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 5 கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும் அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 6 மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி என்தலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 7 இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையாற் கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 8 பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத் தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால் ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 9 கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும் அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 10 திருச்சிற்றம்பலம் 41. அற்புதப் பத்து பதிகச் சிறப்பு: அநுபவம் ஆற்றாமை யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியுள் அகப்பட்டுத் தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யிணைகாட்டி மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே 1 ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப் போந்தி யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழ லிணைகாட்டி வேந்த னாய்வெளி யேயென்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே 2 நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப் பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை அடித்த டித்துவக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே 3 பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க் கருங்கு ழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே 4 மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே 5 வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும் பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக் குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே 6 இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித் தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள் மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே 7 ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை ஓசை யாலுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளியாக்கிப் பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே 8 பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே 9 செறியும் இப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழ லார்செய்யும் கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே 10 திருச்சிற்றம்பலம் 42. சென்னிப் பத்து பதிகச் சிறப்பு: சிவ விளைவு யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன் முவ ராலும் அறியொணா முதலாய ஆனந்த முர்த்தியான் யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான் தூய மாமலர்ச் சேவடிக்கண் நம்சென்னி மன்னிச் சுடருமே 1 அட்ட முர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன் மட்டு வார்குழல் மங்கையாளையோர் பாகம் வைத்த அழகன்தன் வட்ட மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 2 நங்கை மீர்எனை நோக்குமின் நங்கள்நாதன் நம்பணி கொண்டவன் தெங்கு சோலைகள் சூழ்பெருந்துறை மேய சேவகன் நாயகன் மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான் பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே 3 பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச் சித்தர் சூழச் சிவபிரான் தில்லை முதூர் நடஞ்செய்வான் எத்த னாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான் வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 4 மாய வாழ்க்கையை மெய்யென்றெண்ணி மதித்தி டாவகை நல்கினான் வேய தோளுமை பங்கன்எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான் காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 5 சித்த மேபுகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுத்துய்யலாம் பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும் முத்தி தந்திந்த முவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும் அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 6 பிறவி யென்னுமிக் கடலைநீந்தத்தன் பேர ருள்தந் தருளினான் அறவை யென்றடி யார்கள்தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல் உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 7 புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய்த னையொழி வித்திடும் எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று தொழுத கையின ராகித்தூய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 8 வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும் உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்த னாய்நின்ற எம்பிரான் அன்ப ரானவர்க் கருளிமெய்யடி யார்கட் கின்பந் தழைத்திடும் செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 9 முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்ப னைமுதல் வித்தினைச் சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம் பாடித் திரிதரும் பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந் தீரப் பணிமினோ சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 10 திருச்சிற்றம்பலம் 43. திரு வார்த்தை பதிகச் சிறப்பு: அறிவித்து அன்புறுதல் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி கோதில் பரங்கரு ணையடியார் குலாவு நீதிகுண மாகநல்கும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார்எம் பிரானாவாரே 1 மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன் ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழும் கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச் சீல மிகக்கரு ணையளிக்கும் திறமறி வார்எம் பிரானாவாரே 2 அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம் பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப் பிணிகெட நல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி வார்எம் பிரானாவாரே 3 வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத் தேட இருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய ஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன் பெருந்துறை ஆதியந்நாள் ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே 4 வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார் பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதியந்நாள் உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங் கைஅதனிற் பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசறி வார்எம் பிரானாவாரே 5 வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கிஈசன் எந்தை பெருந்துறை ஆதியன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே 6 நாத முடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார் ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும் போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப் பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே 7 பூவலர் கொன்றையம் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன் மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன் ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணற்குத் தீயிற்றோன்றும் ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே 8 தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளியன்று காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக் கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே 9 அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச் சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளியன்று மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே 10 திருச்சிற்றம்பலம் 44. எண்ணப் பதிகம் பதிகச் சிறப்பு: ஒழியா இன்பத்து உவகை யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங்கமல மலர்போல் ஆருரு வாயஎன் ஆரமு தேயுன் அடியவர் தொகைநடுவே ஓருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே 1 உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும் தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற் பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப் பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே 2 என்பே உருக நின்னருள் அளித்துன் இணைமலர் அடிகாட்டி முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழுமுதலே இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 3 பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல்காணப் பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய் எம்பெருமானே முத்தனை யானே மணியனை யானே முதல்வனே முறையோஎன்று எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே 4 காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டுகண் களிகூரப் பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால் காணும தொழிந்தேன் நீயினி வரினும் காணவும் நாணுவனே 5 பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடும் எதிர்ந்து தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதியை நீதியிலேன் போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென்னுள்ளே ஆற்றுவ னாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே 6 திருச்சிற்றம்பலம் 45. யாத்திரைப் பத்து பதிகச் சிறப்பு: அநுபவாதீதம் உரைத்தல் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே 1 புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே 2 தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே 3 அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக் கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச் செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே 4 விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப்படுமின் அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே 5 புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம் நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே 6 நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே 7 பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள் அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே திருமா மணிசேர் திருக்கதவந் திறந்த போதே சிவபுரத்துத் திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே 8 சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின் போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே 9 புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தா ளாகாதீர் மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர் தெருள்வீர் ஆகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன் அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே 10 திருச்சிற்றம்பலம் 46. திருப் படையெழுச்சி பதிகச் சிறப்பு: பிரபஞ்சப் போர் யாப்பு: கலிவிருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் ஞானவாள் ஏந்துமையர் நாதப் பறையறைமின் மானமா ஏறுமையர் மதிவெண் குடைகவிமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே 1 தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர் ஒண்டிறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்டிறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர்நா டாள்வோம்நாம் அல்லற்படை வாராமே 2 திருச்சிற்றம்பலம் 47. திரு வெண்பா பதிகச் சிறப்பு: அணைந்தோர் தன்மை யாப்பு: நேரிசை வெண்பா தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன்-செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து 1 ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்-தீர்ப்பரிய ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான் தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து 2 செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே உய்யும் வகையின் உயிர்ப்பறியேன்-வையத் திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான் 3 முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் வருந்துயரந் தீர்க்கும் மருந்து 4 அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற மறையோனும் மாலுமால் கொள்ளும்-இறையோன் பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா திருந்துறையும் என்னெஞ்சத் தின்று 5 பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம் மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை-அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும் மருந்திறவாப் பேரின்பம் வந்து 6 வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே-சீரார் திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி 7 யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழாம் அடியேனை-யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை 8 முவரும் முப்பத்து முவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்-மாவேறி வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க மெய்யகத்தே இன்பம் மிகும் 9 இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித் திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம்-தருங்காண் பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன் மருந்துருவாய் என்மனத்தே வந்து 10 இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து 11 திருச்சிற்றம்பலம் 48. பண்டாய நான்மறை பதிகச் சிறப்பு: அநுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல் யாப்பு: நேரிசை வெண்பா தலம்: திரு பெருந்துறை இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர் இறைவி: யோகாம்பாள் இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது. தலக்குறிப்பு: மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில். திருச்சிற்றம்பலம் பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லைக் கடையேனைத்-தொண்டாகக் கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மா றுரை 1 உள்ள மலமுன்றும் மாய உகுபெருந்தேன் வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த-வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக் கருவுங் கெடும்பிறவிக் காடு 2 காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன் நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை-வீட்டி அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம் மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து 3 வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந் தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும்-சூழ்ந்தமரர் சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை நன்றிறைஞ்சி ஏத்தும் நமர் 4 நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின் மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக் கழியா திருந்தவனைக் காண் 5 காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக்-காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு 6 பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசில் மணியின் மணிவார்த்தை-பேசிப் பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல மருந்தினடி என்மனத்தே வைத்து 7 திருச்சிற்றம்பலம் 49. திருப் படையாட்சி பதிகச் சிறப்பு: சீவ உபாதி ஒழிதல் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் கண்களி ரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே 1 ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறும் ஆகாதே உன்னடி யாரடி யாரடி யோமென உய்ந்தன ஆகாதே கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது ஆகாதே காரண மாகும் அனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணுதும் ஆகாதே என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே 2 பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடும் ஆகாதே சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே 3 என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறும் ஆகாதே எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுதும் ஆகாதே நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே மாமறை யும்மறி யாமலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே என்னையு டைப்பெரு மான்அரு ளீசன் எழுந்தரு ளப்பெறிலே 4 மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறும் ஆகாதே வானவ ரும்மறி யாமலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறும் ஆகாதே காதல்செ யும்மடி யார்மனம் இன்று களித்திடும் ஆகாதே பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறும் ஆகாதே பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே என்னையு டைப்பெரு மான்அரு ளீசன் எழுந்தரு ளப்பெறிலே 5 பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடும் ஆகாதே பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே தானடி யோமுட னேயுய வந்து தலைப்படும் ஆகாதே இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடும் ஆகாதே என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே 6 சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரும் ஆகாதே துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழும் ஆகாதே பல்லியல் பாய பரப்பற வந்த பராபரம் ஆகாதே பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழும் ஆகாதே வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடும் ஆகாதே விண்ணவ ரும்மறி யாத விழுப்பொருள் இப்பொருள் ஆகாதே எல்லையி லாதன எண்குண மானவை எய்திடும் ஆகாதே இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே 7 சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே சாதிவி டாத குணங்கள்நம் மோடு சலித்திடும் ஆகாதே அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் ஆகாதே ஆசையெ லாம்அடி யாரடி யோம்எனும் அத்தனை ஆகாதே செங்கயல் ஒண்கண்ம டந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே சீரடி யார்கள் சிவானுப வங்கள் தெரிந்திடும் ஆகாதே எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே ஈறறி யாமறை யோன்எனை ஆள எழுந்தரு ளப்பெறிலே 8 திருச்சிற்றம்பலம் 50. ஆனந்த மாலை பதிகச் சிறப்பு: சிவாநுபவ விருப்பம் யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கன்னே ரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே 1 என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடிய ரொடுங்கூடா தென்னா யகமே பிற்பட்டிங் கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே 2 சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே 3 கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே 4 தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ 5 கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே 6 நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே தெரிய வரிய பரஞ்சோதீ செய்வ தொன்றும் அறியேனே 7 திருச்சிற்றம்பலம் 51. அச்சோப் பதிகம் பதிகச் சிறப்பு: அநுபவ வழி அறியாமை யாப்பு: கலிவிருத்தம் தலம்: கோயில் (சிதம்பரம்) இறைவர்: முலநாதர் இறைவி: உமையம்மை இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ. தலக்குறிப்பு: கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியாத முர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 1 நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும் வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே 2 பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 3 மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம் அண்ணல்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 4 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே 5 வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 6 தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 7 சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 8 செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 9 திருச்சிற்றம்பலம் திருக்கோவையார் 52. காப்பு திருச்சிற்றம்பலம் எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக் கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே-நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு 1 ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே 2 திருச்சிற்றம்பலம் 53. இயற்கைப் புணர்ச்சி திருச்சிற்றம்பலம் திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே 1 போதோ விசும்போ புனலோ பணிகள் அதுபதியோ யாதோ அறிகுவது ஏதும் அரிதி யமன்விடுத்த தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே 2 பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்கும் தோயு நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி ஆயு மனனே அணங்கல்லள் அம்மா முலைசுமந்து தேயு மருங்குல் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே 3 அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை அவைஅவம்நீ புகல்கின்றது என்னைநெஞ்சு உண்டே இடையடை யார்புரங்கள் இகல்குன்ற வில்லில்செற் றோன்தில்லை ஈசனெம் மானெதிர்ந்த பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ னம்மன்ன பல்வளைக்கே 4 அணியும் அமிழ்துமென் ஆவியும் ஆயவன் தில்லைச்சிந்தா மணிஉம்ப ராரறி யாமறை யோனடி வாழ்த்தலரின் பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குல்பெருந் தோளி படைக்கண்களே 5 வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின் துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே 6 ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்னாள் ஊழுடை யான்புலி யூரன்ன பொன்னிவ் உயர்பொழில்வாய்ச் சூழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே யாழுடை யார்மணம் காணணங் காய்வந்து அகப்பட்டதே 7 சொற்பால் அமுதிவள் யான்சுவை என்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதிப் பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில் கற்பா வியவரை வாய்க்கடிது ஓட்ட களவகத்தே 8 உணர்ந்தார்க்கு உணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள் புணர்ந்தால் புணரும் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய் மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே 9 அளவியை யார்க்கும் அறிவரி யோன்தில்லை அம்பலம்போல் வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின் பிளவியல் மின்னிடை பேரமை தோளிது பெற்றியென்றால் கிளவியை யென்னோ இனிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே 10 கூம்பலங் கைத்தலத்து அன்பரென்பு ஊடுரு கக்குனிக்கும் பாம்பலங் காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின் தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள் தீங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே 11 சிந்தா மணிதெண் கடலமிர் தம்தில்லை யானருளால் வந்தால் இகழப் படுமே மடமான் விழிமயிலே அந்தா மரையன்ன மேநின்னை யான் அகன்று ஆற்றுவனோ சிந்தா குலமுற்றென் னோஎன்னை வாட்டம் திருத்துவதே 12 கோங்கின் பொலியரும்பு ஏய்கொங்கை பங்கன் குறுகலருர் தீங்கில் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள் நீங்கின் புணர்வரிது என்றோ நெடிதிங்ங னேயிருந்தால் ஆங்கிற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே 13 தேவரில் பெற்றநம் செல்வக் கடிவடி வார்திருவே யாவரின் பெற்றினி யார்சிதைப் பாரிமை யாதமுக்கண் முவரிற் பெற்றவர் சிற்றம் பலமணி மொய்பொழில்வாய்ப் பூவரிற் பெற்ற குழலியென் வாடிப் புலம்புவதே 14 வருங்குன்றம் ஒன்றுரித் தோன்தில்லை அம்பல வன்மலயத்து இருங்குன்ற வாணர் இளங்கொடி யேயிடர் எய்தலெம்முர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்முர்க் கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே 15 தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம் திங்களின்வாய்ந்து அளிவளர் வல்லியன் னாய்முன்னி யாடுபின் யானளவா ஒளிவளர் தில்லை ஒருவன் கயிலை யுகுபெருந்தேன் துளிவளர் சாரல் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே 16 புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின் துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய் இணர்ப்போது அணிகுழல் ஏழைதன் நீர்மையிந் நீர்மையென்றால் புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே 17 உயிரொன்று உளமுமொன்று ஒன்றே சிறப்பிவட்கு என்னொடென்னப் பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச் செயிரொன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன் அருளென லாகும் பணிமொழிக்கே 18 திருச்சிற்றம்பலம் 54. பாங்கற் கூட்டம் திருச்சிற்றம்பலம் பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்து அம்பலத்துள் ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிரானடித் தாமரைக்கே பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால் ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை எய்துதற்கே 1 சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி ஏழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்து எய்தியதே 2 கோம்பிக்கு ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித்து ஆங்கப் பணைமுலைக்கே தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்தாள் ஆம்பொன் தடமலர் சூடுமென் ஆற்றல் அகற்றியதே 3 உளமாம் வகைநம்மை உய்யவந்து ஆண்டுசென்று உம்பருய்யக் களமாம் விடமமிர்து ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல் இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே 4 சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும் பூணிற் பொலிகொங்கை யாவியை ஓவியப் பொற்கொழுந்தைக் காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே 5 விலங்கலைக் கால்விண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும்முந்நீர்க் கலங்கலைச் சென்றஅன் றுங்கலங் காய்கமழ் கொன்றைதுன்றும் அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானருள் இல்லவர்போல் துலங்கலைச் சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே 6 தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று மலைத்தறி வாரில்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும் கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே 7 நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல் கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன் சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித் தொல்வினை யால்துய ரும்மெனது ஆருயிர் துப்புறவே 8 ஆலத்தி னாலமிர்து ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல் கோலத்தி னாள்பொருட் டாக அமிர்தம் குணங்கெடினும் காலத்தி னால்மழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற் சீலத்தை நீயும் நினையாது ஒழிவதென் தீவினையே 9 நின்னுடை நீர்மையும் நீயுமிவ் வாறு நினைத்தெருட்டும் என்னுடை நீர்மையிது என்னென்ப தேதில்லை ஏர்கொள்முக்கண் மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே 10 விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழல்தில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே 11 குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண் செவ்வாய் மயிலைச் சிலம்பகண்டு யான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே 12 கொடுங்கால் குலவரை ஏழேழ் பொழிலெழில் குன்றுமன்றும் நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ லாம்தில்லை ஈசன்வெற்பில் தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலம் தண்புனத்தே 13 வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடையிது வாய்பவளம் துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவிடா அடிச்சந்த மாமலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம்போல் படிச்சந் தமுமிது வேயிவ ளேயப் பணிமொழியே 14 குவளைக் களத்து அம்பலவன் குரைகழல் போற்கமலத் தவளைப் பயங்கர மாகநின்று ஆண்ட அவயவத்தின் இவளைக்கண்டு இங்குநின்று அங்குவந்து அத்துணையும்பகர்ந்த கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே 15 பணந்தாழ் அரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப் புணர்ந்தாங்கு அகன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய் நிணந்தாழ் சுடரிலை வேலகண் டேனொன்று நின்றதுவே 16 கயலுள வேகம லத்தலர் மீது கனிபவளத்து அயலுள வேமுத்தம் ஒத்த நிரையரன் அம்பலத்தின் இயலுள வேயிணைச் செப்புவெற் பாநினது ஈர்ங்கொடிமேல் புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே 17 எயிற்குலம் முன்றிரும் தீயெய்த எய்தவன் தில்லையொத்துக் குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தம்நிரைத்து அயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனம்நடக்கும் மயிற்குலம் கண்டதுண் டேலது என்னுடை மன்னுயிரே 18 ஆவியன் னாய்கவ லேல்அக லேமென்று அளித்தொளித்த ஆவியன் னார்மிக்கு அவாவின ராய்க்கெழு மற்கு அழிவுற்று ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம் ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்து அருவரையே 19 காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால் வாம்பிணை யால்வல்லி ஒல்குத லான்மன்னும் அம்பலவன் பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமும் தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே 20 நேயத்த தாய்நென்னல் என்னைப் புணர்ந்து நெஞ்சம்நெகப்போய் ஆயத்த தாயமிழ் தாயணங் காயரன் அம்பலம்போல் தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே 21 தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று சோதி வரிப்பந்து அடியார் சுனைப்புனல் ஆடல்செய்யார் போதிவர் கற்பக நாடுபுல் லென்னத்தம் பொன்னடிப்பாய் யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை எய்துதற்கே 22 காவிநின்று ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமலத் தேவியென் றேயையம் சென்றதன் றேயறி யச்சிறிது மாவியன் றன்னமெல் நோக்கிநின் வாய்திற வாவிடினென் ஆவியன் றேயமிழ் தேயணங் கேயின்று அழிகின்றதே 23 அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்சு அம்பலத்தின் இகலிடம் தாவிடை ஈசன் தொழாரினின் னற்கிடமாய் உகலிடம் தான்சென்று எனதுயிர் நையா வகையொதுங்கப் புகலிடம் தாபொழில் வாயெழில் வாய்தரு பூங்கொடியே 24 தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர் சூழச்செய் தானம் பலங்கை தொழாரினுள் ளந்துளங்கப் போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேயென்னைநீ வாழச்செய் தாய்சுற்று முற்றும் புதைநின்னை வாணுதலே 25 குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல் வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்று ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன்வளர்ந்த அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்து அழிகின்றதே 26 கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக்கு அஃதே குறைப்பவர்தம் சீலத் தனகொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள் நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால் சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே 27 நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும் வாங்கிருந் தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன் தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்பும் கோங்கரும் பும்தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே 28 சூளா மணியும்பர்க்கு ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்கு ஆளாய் ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேயணங்கே தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும் நாளார் மலர்ப்பொழில் வாயெழில் ஆயம் நணுகுகவே 29 பொய்யுடை யார்க்கரன் போலக லும்மகன் றாற்புணரின் மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும் மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான் பையுடை வாளரவத்து அல்குல் காக்கும்பைம் பூம்புனமே 30 திருச்சிற்றம்பலம் 55. இடந்தலைப்பாடு திருச்சிற்றம்பலம் என்னறி வால்வந்தது அன்றிது முன்னும்இன் னும்முயன்றால் மன்னெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர் பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே 1 திருச்சிற்றம்பலம் 56. மதியுடம்படுதல் திருச்சிற்றம்பலம் எளிதன்று இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்று ஒளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானையுன் னாரினென்கண் தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லலெல் லாம்தெளிவித்து அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே 1 குவளைக் கருங்கண் கொடியேர் இடையிக் கொடிகடைக்கண் உவளைத் தனதுயிர் என்றது தன்னோடு உவமையில்லா தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல் துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவனே 2 இருங்களி யாயின்று யானிறு மாப்பஇன் பம்பணிவோர் மருங்களி யாவனல் ஆடவல் லோன்தில்லை யான்மலையீங்கு ஒருங்களி ஆர்ப்ப உமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள் கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே 3 கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லைக் கார்ப்பொழில்வாய் வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர் இருங்கண் அனைய கணைபொரு புண்புணரிப் புனத்தின் மருங்கண் அனையதுண் டோவந்தது ஈங்கொரு வான்கலையே 4 சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன்தன் சீரடியார் குலம்பணி கொள்ள எனைக்கொடுத் தோன்கொண்டு தானணியும் கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலைச் சிலம்பணி கொண்டநும் சீறூர்க்கு உரைமின்கள் செல்நெறியே 5 ஒருங்கட முவெயில் ஒற்றைக் கணைகொள்சிற் றம்பலவன் கருங்கடம் முன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை இருங்கடம் முடும் பொழிலெழில் கொம்பரன் னீர்களின்னே வருங்கள்தம் ஊர்பகர்ந் தால்பழி யோவிங்கு வாழ்பவர்க்கே 6 தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த காரென்ன ஆரும் கறைமிடற்று அம்பல வன்கயிலை ஊரென்ன என்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேல் பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே 7 இரதம் உடைய நடமாட்டு உடையவர் எம்முடையர் வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப்புனத்தார் விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல் சரதம் உடையர் மணிவாய் திறக்கில் சலக்கென்பவே 8 வின்னிற வாணுதல் வேல்நிறக் கண்மெல் லியலைமல்லல் தன்னிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தனது அம்பலம்போல் மின்னிற நுண்ணிடைப் பேரெழில் வெண்ணகைப் பைந்தொடியீர் பொன்னிற அல்குலுக்கு ஆமோ மணிநிறப் பூந்தழையே 9 கலைக்கீழ் அகலல்குல் பாரமது ஆரம்கண் ஆர்ந்திலங்கு முலைக்கீழ்ச் சிறிதின்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்கோன் மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச் சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே 10 திருச்சிற்றம்பலம் 57. இருவருமுள்வழி அவன் வரவுணர்தல் திருச்சிற்றம்பலம் பல்லில னாகப் பகலைவென் றோன்தில்லை பாடலர்போல் எல்லிலன் நாகத்தொடு ஏனம் வினாவிவன் யாவன்கொலாம் வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்டம் மெய்யோர் சொல்லிலன் ஆகற்ற வாகட வானிச் சுனைப்புனமே 1 ஆழமன் னோவுடைத்து இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து வீழமுன் நோக்கிய அம்பலத் தான்வெற்பின் இப்புனத்தே வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய் மாழைமெல் நோக்கி இடையாய்க் கழிந்தது வந்துவந்தே 2 திருச்சிற்றம்பலம் 58. முன்னுறவுணர்தல் திருச்சிற்றம்பலம் நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமித் திருத்தம் பயிலும் சுனைகுடைந்து ஆடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே 1 திருச்சிற்றம்பலம் 59. குறையுறவுணர்தல் திருச்சிற்றம்பலம் மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில் கொடுக்கோ வளைமற்று நும்மையர்க்கு ஆயகுற் றேவல்செய்கோ தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் சுரிகுழற்கே 1 அளியமன் னும்மொன்று உடைத்து அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள் கிளியைமன் னுங்கடி யச்செல்ல நிற்பின் கிளரளகத்து அளியமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கடுத்த ஒளியமர்ந்து ஆங்கொன்று போன்றொன்று தோன்றும் ஒளிமுகத்தே 2 பிழைகொண்டு ஒருவிக் கெடாதன்பு செய்யின் பிறவியென்னும் முழைகொண்டு ஒருவன்செல் லாமைநின்று அம்பலத்து ஆடுமுன்னோன் உழைகொண்டு ஒருங்கிரு நோக்கம் பயின்றஎம் ஒண்ணுதல்மாந் தழைகொண்டு ஒருவனென் னாமுன்னம் உள்ளம் தழைத்திடுமே 3 மெய்யே இவற்கில்லை வேட்டையின் மேல்மனம் மீட்டிவளும் பொய்யே புனத்தினை காப்பது இறைபுலி யூரனையாள் மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்செந் தாமரைவாய் எய்யேம் எனினும் குடைந்தின்பத் தேனுண்டு எழில்தருமே 4 திருச்சிற்றம்பலம் 60. நாணநாட்டம் திருச்சிற்றம்பலம் மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழல் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதொத்துச் செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே 1 அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து இக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள் அக்குன்ற ஆறமர்ந்து ஆடச்சென் றாளங்கம் அவ்வவையே ஒக்கின்ற ஆரணங் கேயிணங் காகும் உனக்கவளே 2 செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல் அந்நிற மேனிநின் கொங்கையில் அங்கழி குங்குமமும் மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர் இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே 3 பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத் தருங்கண் ணுதல்தில்லை அம்பலத் தோன்தட மால்வரைவாய்க் கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பகண் ணாரளிபின் வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்சுனையே 4 காகத்து இருகண் ணிற்கு ஒன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில் தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வருமின்பத் துன்பங்களே 5 திருச்சிற்றம்பலம் 61. நடுங்கநாட்டம் திருச்சிற்றம்பலம் ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து முவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித் தீவாய் உழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித்து ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொர் ஆண்டகையே 1 திருச்சிற்றம்பலம் 62. மடல் திறம் திருச்சிற்றம்பலம் பொருளா எனைப்புகுந்து ஆண்டு புரந்தரன் மாலயன்பால் இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம் சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர் அருளாது ஒழியின் ஒழியாது அழியுமென் ஆருயிரே 1 காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்துப் பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர்ப் பனைமடலே 2 விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும் அண்ணல் மடங்கல் அதளம் பலவன் அருளிலர்போல் பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றொர் பெண்கொடியே 3 கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான் கிழியொன்ற நாடி எழுதிக்கைக் கொண்டென் பிறவிகெட்டின்று அழிகின்றது ஆக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல்நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே 4 நடனாம் வணங்கும்தொல் லோனெல்லை நான்முகன் மாலறியாக் கடனாம் உருவத்து அரன்தில்லை மல்லற்கண் ணார்ந்தபெண்ணை உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையும் கட்டழித்து மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே 5 அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டிவந்து ஆண்டுகொண்டென் முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும் கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னி அனநடைக்குப் படிச்சந்தம் ஆக்கும் படமுள வோநும் பரிசகத்தே 6 யாழுமெழுதி எழில்முத்து எழுதி இருளின்மென்பூச் சூழும் எழுதியொர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம் போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே 7 ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணைத் திண்மடல் நின்குறிப்புச் சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர்தில்லைக் கார்வாய் குழலிக்குன் ஆதரவு ஓதிக்கற் பித்துக்கண்டால் ஆர்வாய் தரினறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே 8 பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம் மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம் மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினும் என்னின்முன்னும் இந்நாள் இதுமது வார்குழ லாட்கென்கண் இன்னருளே 9 திருச்சிற்றம்பலம் 63. குறைநயப்புக் கூறல் திருச்சிற்றம்பலம் தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதண் தேன்பருகித் தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின வேலொருவர் மாதே புனத்திடை வாளா வருவர்வந்து யாதும்சொல்லார் யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்திழையே 1 வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கொலோ எரிசேர் தளிரன்ன மேனியன் ஈர்ந்தழை யன்புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத் தெரியேம் உரையான் பிரியான் ஒருவனித் தேம்புனமே 2 நீகண் டனையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான் சேய்கண் டனையன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின் வாய்வண் டனையதொர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின் றானப்பெருந்தகையே 3 சங்கம் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே 4 புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியாது இரங்கிடெந் தாயென்று இரப்பத்தன் ஈரடிக்கு என்னிரண்டு கரங்கள்தந் தானொன்று காட்டமற்று ஆங்கதும் காட்டிடென்று வரங்கிடந் தான்தில்லை அம்பல முன்றில் அம்மாயவனே 5 உள்ளப் படுவன உள்ளி உரைத்தக் கவர்க்குரைத்து மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான் கள்ளப் படிறர்க்கு அருளா அரன்தில்லை காணலர்போல் கொள்ளப் படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே 6 மேவியம் தோலுடுக்கும் தில்லை யான்பொடி மெய்யிற்கையில் ஓவியம் தோன்றும் கிழிநின் எழிலென்று உரையுளதால் தூவியம் தோகையன் னாயென்ன பாவம்சொல் ஆடல்செய்யான் பாவியம் தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே 7 பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய் என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார் சொன்னார் எனுமித் துரிசுதுன் னாமைத் துணைமனனே என்னாழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே 8 திருச்சிற்றம்பலம் 64. சேட்படை திருச்சிற்றம்பலம் தேமென் கிளவிதன் பங்கத்து இறையுறை தில்லையன்னீர் பூமென் தழையுமம் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப ஆமென்று அருங்கொடும் பாடுகள் செய்துநும் கண்மலராம் காமன் கணைகொண்டு அலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே 1 ஆரத் தழையராப் பூண்டு அம்பலத்து அனலாடி அன்பர்க்கு ஆரத் தழையன்பு அருளிநின் றோன்சென்ற மாமலயத்து ஆரத் தழையண்ணல் தந்தால் இவையவள் அல்குல்கண்டால் ஆரத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே 2 முன்தகர்த்து எல்லா இமையோரை யும்பின்னைத் தக்கன்முத்தீச் சென்றகத்து இல்லா வகைசிதைத் தோன்திருந்து அம்பலவன் குன்றகத்து இல்லாத் தழையண் ணல்தந்தால் கொடிச்சியருக்கு இன்றகத்து இல்லாப் பழிவந்து முடுமென்று எள்குதுமே 3 யாழார் மொழிமங்கை பங்கத்து இறைவன் எறிதிரைநீர் ஏழாய் எழுபொழி லாயிருந் தோன்நின்ற தில்லையன்ன சூழார் குழலெழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால் தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே 4 எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும் அம்சோதியம்தீம் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்லது இல்லையிப் பூந்தழையே 5 உறும்கள்நி வந்த கணையுர வோன்பொடியாய் ஒடுங்கத் தெறுங்கண்நி வந்தசிற்றம்பல வன்மலைச் சிற்றிலின்வாய் நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென் வாணுதல் நாகத்தொண்பூங் குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள் நாணுமிக் குன்றிடத்தே 6 நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி மறமனை வேங்கை எனநனி அஞ்சுமஞ் சார்சிலம்பா குறமனை வேங்கைச் சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ நிறமனை வேங்கை அதளம் பலவன் நெடுவரையே 7 கற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப் பெற்றில மென்பிணை பேச்சுப் பெறாகிள்ளை பிள்ளையின்றொன்று உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளிமிளிரும் புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே 8 முனிதரும் அன்னையும் என்னையர் சாலவும் முர்க்கரின்னே தனிதரும் இந்நிலத் தன்றைய குன்றமும் தாழ்சடைமேல் பனிதரு திங்களணி அம்பலவர் பகைசெகுக்கும் குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே 9 அந்தியின் வாயெழில் அம்பலத்து எம்பரன் அம்பொன்வெற்பில் பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன் மந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம்கனிய முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே 10 தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத்து ஒளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்பச் சிங்கம் திரிதரு சீறூர்ச் சிறுமியெம் தேமொழியே 11 சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை மலையொன்று மாமுகத்து எம்மையர் எய்கணை மண்குளிக்கும் கலையொன்று வெங்கணையோடு கடுகிட்டது என்னில்கெட்டேன் கொலையென்று திண்ணிய வாறையர் கையில் கொடுஞ்சிலையே 12 மைத்தழை யாநின்ற மாமிடற்று அம்பல வன்கழற்கே மெய்த்தழை யாநின்ற அன்பினர்போல விதிர்விதிர்த்துக் கைத்தழை ஏந்திக் கடமா வினாய்க் கையில் வில்லின்றியே பித்தழை யாநிற்ப ராலென்ன பாவம் பெரியவரே 13 அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே ஒக்கும் இவளது ஒளிருரு அஞ்சி மஞ்சார்சிலம்பா கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும் இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே 14 உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பலத் தும்மொளியே பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார் முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா ஒருகு தலைச்சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே 15 பண்டால் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்துத் தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லைத் தில்லையின்வாய் வண்டால் இயலும் வளர்பூந் துறைவ மறைக்கின் என்னைக் கண்டால் இயலும் கடனில்லை கொல்லோ கருதியதே 16 மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்து ஊறமுதே ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின் றோன்தில்லை ஒத்திலங்கு முத்தகம் சேர்மென்னகைப் பெருந்தோளி முகமதியின் வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்றோ என்விழுத்துணையே 17 விண்ணிறந் தார்நிலம் விண்டவர் என்றுமிக் காரிருவர் கண்ணிறந் தார்தில்லை அம்பலத் தார்கழுக் குன்றினின்று தண்நறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார் எண்ணிறந் தாரவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே 18 குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய் கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர் தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்கு உவவின நாள்மதி போன்றொளிர் கின்றது ஒளிமுகமே 19 ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியவென் பாசத்தின் காரென்று அவன்தில்லை யின்னொளி போன்றவன்தோள் பூசத் திருநீறு எனவெளுத்து ஆங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே 20 தோலாக் கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்கு ஏலாப் பரிசுள வேயன்றி ஏலேம் இருஞ்சிலம்ப மாலார்க்கு அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில் கோலாப் பிரசம் அன்னாட்கு ஐய நீதந்த கொய்தழையே 21 கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில் தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பனின்று அம்பலத்தான் உழைகாண் டலும்நினைப் பாகும்மெல் நோக்கிமன் நோக்கங்கண்டால் இழைகாண் பணைமுலை யாயறி யேன்சொல்லும் ஈடவற்கே 22 தவளத்த நீறணி யும்தடந் தோளண்ணல் தன்னொருபால் அவளத்த னாம்மக னாம்தில்லையான் அன்றுரித்ததன்ன கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும் துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே 23 ஏறும் பழிதழை யேற்பின்மற்று ஏலா விடின்மடன்மா ஏறும் அவனிட பங்கொடி ஏற்றிவந்து அம்பலத்துள் ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இரும்புனம்காய்ந்து ஏறும் மலைதொலைத் தாற்கு என்னை யாம்செய்வது ஏந்திழையே 24 தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை அவ்வரை மேலன்றி இல்லைகண்டாய் உள்ளவாறு அருளான் இவ்வரை மேற்சிலம்பன் எளிதில் தந்த ஈர்ந்தழையே 25 பாசத் தளையறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம்சூழ் தேசத் தனசெம்மல் நீதந் தனசென்று யான்கொடுத்தேன் பேசிற் பெருகும் சுருங்கு மருங்குல் பெயர்ந்தரைத்துப் பூசிற் றிலளன்றிச் செய்யாதன இல்லை பூந்தழையே 26 திருச்சிற்றம்பலம் 65. பகற்குறி திருச்சிற்றம்பலம் வானுழை வாளம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன் தானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல் தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன் கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே 1 புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன்னே பின்னைப் போய்ப்பொலியும் அயல்வளர் குன்றில்நின்று ஏற்றும் அருவி திருவுருவில் கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளும் தயல்வளர் மேனியன் அம்பலத் தான்வரைத் தண்புனத்தே 2 தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச் சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார் வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில் புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே 3 நரல்வேய் இனநின தோட்கு உடைந்து உக்கநன் முத்தம்சிந்திப் பரல்வேய் அறையுறைக் கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய் வரல்வேய் தருவனிங் கேநில் உங்கேசென்றுன் வார்குழற்கீர்ங் குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே 4 படமா சுணப்பள்ளி இக்குவ டாக்கியப் பங்கயக்கண் நெடுமால் எனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே இடமா இருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வடமார் முலைமட வாய்வந்து வைகிற்று இவ்வார்பொழிற்கே 5 தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல்லோன் அருளென்னமுன்னி முத்தீன் குவளைமென் காந்தளின் முடித்தன் ஏரளப்பாள் ஒத்தீர்ங் கொடியின் ஒதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப் பித்தீர் பணைமுலை காளென்னுக்கு இன்னும் பெருக்கின்றதே 6 அளிநீடு அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும் ஒளிநீள் சுரிகுழல் சூழ்ந்த ஒண்மாலையும் தண்நறவுண் களிநீ எனச்செய் தவன்கடல் தில்லையன் னாய்கலங்கல் தெளிநீ அனைய பொன்னேபன்னு கோலம் திருநுதலே 7 செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே கெழுநீர் மையில்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள்ளகத்த கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக் கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுலமே 8 கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில் எழுந்தார் மதிக்கம லமெழில் தந்தென இப்பிறப்பில் அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய் செழுந்தாது அவிழ்பொழில் ஆயத்துச் சேர்க திருத்தகவே 9 பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற்கு ஏய்வனவே 10 அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறையணிந்தேன் அணியார் துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயம்மெல் லப்புகுக சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின் உறுகால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒண்ணுதலே 11 தழங்கும் அருவி எம்சீறூர் பெரும இதுமதுவும் கிழங்கும் அருந்தி இருந்து எம்மொடு இன்று கிளர்ந்துகுன்றர் முழங்கும் குரவை இரவிற்கண்டு ஏகுக முத்தன்முத்தி வழங்கும் பிரான் எரியாடி தென்தில்லை மணிநகர்க்கே 12 தள்ளி மணிசந்தம் உந்தித் தறுகண் கரிமருப்புத் தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும் வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே 13 மாடம்செய் பொன்னக ரும்நிக ரில்லை இம்மாதர்க்கென்னப் பீடம்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளலரைக் கீடம்செய்து என்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக் கூடம்செய் சாரல் கொடிச்சியென் றோநின்று கூறுவதே 14 வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச் சேய்தந்த வானக மானும் சிலம்பதன் சேவடிக்கே ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில் தாய்தந்தை கானவர் ஏனல் எங்காவல் இத்தாழ்வரையே 15 மன்னும் திருவருந் தும்வரை யாவிடின் நீர்வரைவென்று உன்னும் அதற்குத் தளர்ந்தொளி வாடுதிர் உம்பரெலாம் பன்னும் புகழ்ப்பரமன் பரஞ்சோதி சிற்றம்பலத்தான் பொன்னங் கழல்வழுத் தார்புலன் என்னப் புலம்புவனே 16 பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பலவன் உலகம் தனித்துண் டவன்தொழும் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற்று இனிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்கு என்றஞ்சும் எம்மனையே 17 ஈவிளை யாட நறவிளைவு ஓர்ந்தெமர் மால்பியற்றும் வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கி எம்மெல்லியலைப் போய்விளை யாடலென்றாள் அன்னை அம்பலத் தான்புரத்தில் தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே 18 சுற்றும் சடைக்கற்றைச் சிற்றம் பலவன் தொழாதுதொல்சீர் கற்றும் அறியலரின் சிலம்பா இடைநைவதுகண்டு எற்றும் திரையின் அமிர்தை இனித்தமர் இற்செறிப்பார் மற்றும் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே 19 வழியும் அது அன்னை என்னின் மகிழும்வந்து எந்தையும்நின் மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னேவயம் அம்பலத்துக் குழியும்பர் ஏத்துமெம் கூத்தன் குற்றாலம் முற்றுமறியக் கெழியும்ம வேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே 20 படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண் இடையார் மெலிவுங்கண்டு அண்டர்கள் ஈர்முல்லை வேலியெம்முர் விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர் உடையார் கடவி வருவது போலும் உருவினதே 21 உருப்பனை அன்னகைக் குன்றொன்று உரித்து உர ஊரெரித்த நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர்சென்று ஏத்திநிற்கும் திருப்பனை யூர் அனையாளைப் பொன்னாளைப் புனைதல்செப்பிப் பொருப்பனை முன்னின்று என்னோவினை யேன்யான் புகல்வதுவே 22 மாதிடம் கொண்டு அம்பலத்துநின் றோன்வட வான்கயிலைப் போதிடம் கொண்டபொன் வேங்கை தினைப்புனம் கொய்கவென்று தாதிடம் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று சோதிடம் கொண்டு இதெம்மைக் கெடுவித்தது தூமொழியே 23 வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன் கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார் நொடிவார் நமக்கினி நோதக யானுமக்கு என்னுரைக்கேன் தடிவார் தினையெமர் காவேம் பெரும இத்தண்புனமே 24 நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்து இருந்து அம்பலத்துநின்று புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில் தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே 25 கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கு அம்பலத்தமிழ்தாய் வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய் நனைகெடச் செய்தனம் ஆயின் நமைக்கெடச் செய்திடுவான் தினைகெடச் செய்திடு மாறுமுண்டோ இத்திருக்கணியே 26 வழுவா இயலெம் மலையர் விதைப்ப மற்றியாம் வளர்த்த கொழுவார் தினையின் குழாங்கள் எல்லாம் எம்குழாம்வணங்கும் செழுவார் கழல்தில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவது இத்தொல்புனத்தே 27 பொருப்பர்க்கு யாமொன்று மாட்டோம் புகலப் புகலெமக்காம் விருப்பர்க்கு யாவர்க்கும் மேலர்க்கு மேல்வரும் ஊரெரித்த நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலநிலத்துக் கருப்பற்று விட்டெனக் கொய்தற்றது இன்று இக்கடிப்புனமே 28 பரிவுசெய்து ஆண்டு அம்பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அருவிசெய் தாழ்புனத்து ஐவனம் கொய்யவும் இவ்வனத்தே பிரிவுசெய் தால் அரிதே கொள்க பேயொடும் என்னும்பெற்றி இருவிசெய் தாளின் இருந்தின்று காட்டும் இளங்கிளியே 29 கணியார் கருத்தின்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே மணியார் பொழில்காண் மறத்திர்கண் டீர்மன்னும் அம்பலத்தோன் அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால் துணியா தனதுணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லுமினே 30 பொதுவினில் தீர்த்தென்னை ஆண்டோன் புலியூர் அரன்பொருப்பே இதுவெனில் என்னின்று இருக்கின்ற வாறெம் இரும்பொழிலே எதுநுமக்கு எய்தியது என்னுற்றனிர் அறையீண்டருவி மதுவினில் கைப்புவைத் தாலொத்த வாமற்று இவ்வான்புனமே 31 ஆனந்த மாக்கடல் ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின் தேனுந்து மாமலைச் சீறூர் இதுசெய்ய லாவதில்லை வானுந்து மாமதி வேண்டி அழும்மழப் போலுமன்னோ நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே 32 திருச்சிற்றம்பலம் 66. இரவுக்குறி திருச்சிற்றம்பலம் மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்கு அம்பலத்தமிர்தாய் இருந்தனர் குன்றின்நின்று ஏங்கும் அருவிசென்று ஏர்திகழப் பொருந்தின மேகம் புதைந்திருள் தூங்கும் புனையிறும்பின் விருந்தினன் யானுங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே 1 விசும்பினுக்கு ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்கு அசும்பினில் துன்னி அளைநுழைந்தால் ஒக்கும் ஐயமெய்யே இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிதெழில் அம்பலத்துப் பசும்பனிக் கோடுமிலைந்தான் மலயத்தெம் வாழ்பதியே 2 மாற்றேன் எனவந்த காலனை ஓலமிடஅடர்த்த கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி மேல்தேன் விரும்பும் முடவனைப் போல மெலியும் நெஞ்சே ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே 3 கூளி நிரைக்கநின்று அம்பலத்து ஆடி குரைகழற்கீழ்த் தூளி நிறைத்த சுடர்முடி யோயிவள் தோள்நசையால் ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து மீளி உரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே 4 வரையன்று ஒருகால் இருகால் வளைய நிமிர்த்துவட்கார் நிரையன்று அழலெழ எய்துநின் றோன்தில்லை அன்னநின்னூர் விரையென்ன மென்னிழல் என்ன வெறியுறு தாதிவர்போது உரையென்ன வோசிலம்பா நலம்பாவி ஒளிர்வனவே 5 செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திருக்கண் அணியும் மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத் தோன்மன்னு தென்மலயத்து எம்மலர் சூடிநின்று எச்சாந்து அணிந்தென்ன நன்னிழல்வாய் அம்மலர் வாட்கண் நல்லாய் எல்லி வாய்நுமர் ஆடுவதே 6 பனைவளர் கைம்மாப் படாத்து அம்பலத்தரன் பாதம்விண்ணோர் புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும் சினைவளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும்பொழிலே 7 மலவன் குரம்பையை மாற்றி அம்மால்முதல் வானர்க்கு அப்பால் செலவன்பர்க்கு ஓக்கும் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோடு அலவன் பயில்வது கண்டு அஞர்கூர்ந்து அயில் வேலுரவோன் செலவந்தி வாய்க்கண் டனனென்னது ஆங்கொல்மன் சேர்துயிலே 8 மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே கோட்டந் தரும்நம் குருமுடி வெற்பன் மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே 9 செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால் கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல் முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய் வழங்கா அதரின் வழங்கென்றுமோ இன்றெம் வள்ளலையே 10 ஓங்கும் ஒருவிடம் உண்டு அம்பலத்து உம்பருய்யவன்று தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங்கும் அருவி வீங்கும் சுனைப்புனல் வீழ்ந்தன்று அழுங்கப் பிடித்தெடுத்து வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே 11 ஏனற் பசுங்கதிர் என்றூழ்க் கழிய எழிலியுன்னிக் கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா யானிற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச் சென்றேன் தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லும் செல்லல்களே 12 முன்னும் ஒருவர் இரும்பொழில் முன்றற்கு முற்றுமிற்றால் பின்னும் ஒருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல் துன்னுமொர் இன்பம் என்தோகைதம் தோகைக்குச் சொல்லுவபோல் மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே 13 கூடார் அரண் எரிகூடக் கொடுஞ்சிலை கொண்ட அண்டன் சேடார் மதின்மல்லல் தில்லை அன்னாய்சிறு கண்பெருவெண் கோடார் கரிகுரு மாமணி ஊசலைக் கோப்பழித்துத் தோடார் மதுமலர் நாகத்தை நூக்கும்நம் சூழ்பொழிற்கே 14 விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீருடுத்த மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன்மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின் றனசின வாண்மிளிர்நின் கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே 15 நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்கு எஃகம் தந்தீ வரன்புலி யூரனை யாய்தடங் கண்கடந்த இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர் சந்தீ வரமுறி யும்வெறி வீயும் தருகுவனே 16 காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதிரோன் அடைத்த தாமரை இல்லின் இதழ்க்கதவம் திறந்தோதமியே பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே நாமரை யாமத்து என்னோவந்து வைகி நயந்ததுவே 17 அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்து அஞ்சனம் எழுதத் தகிலும் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர் இகலும் அவரில் தளரும் இத்தேம்பல் இடைஞெமியப் புகிலும் மிக இங்ஙனே இறுமாக்கும் புணர்முலையே 18 அழுந்தேன் நரகத்து யானென்று இருப்பவந்து ஆண்டுகொண்ட செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுவகத்த கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்யான் குருஉச்சுடர்கொண்டு எழுந்து ஆங்கது மலர்த்தும் உயர்வானத்து இளமதியே 19 சுரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரரொன்னார் இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர் துரும்புறச் செற்றகொற்றத்து எம்பிரான் தில்லைச் சூழ்பொழிற்கே 20 நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன விற்பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யே எளிதே வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற கற்பகச் சோலை கதுவுங்கல் நாட இக்கல்லதரே 21 பைவாய் அரவரை அம்பலத்து எம்பரன் பைங்கயிலைச் செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்சிற் றிடைக்கொடியை மொய்வார் கமலத்து முற்றிழை இன்றென் முன்னைத் தவத்தால் இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன்னுயிரே 22 பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால் செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண் மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே 23 நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம்நவில்வோன் நாகம் இதுமதியே மதியே நவில்வேற்கை எங்கள் நாகம் வரஎதிர் நாங்கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார் நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே 24 மின்னங்கு அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய் என்னங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம்தொத்திப் பொன்னங்கு அலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும் அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே 25 சோத்துன் அடியம் என்றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்து ஏத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னாள் இவள்துவள ஆர்த்துன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்தவம்நீ பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே 26 மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ் போதுற்ற பூம்பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் ஏதுற்று அழிதி என்னீர்மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ தீதுற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்புமினே 27 இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில் பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின் துன்னற வுய்க்கும் இல்லோரும் துயிலில் துறைவர்மிக்க கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே 28 தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை நீருறு கான்யாறு அளவில் நீந்தி வந்தால்நினது போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுகம் அஞ்சிவரும் சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே 29 விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ் கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர் கண்டிலை யேவரக் கங்குல் எல்லாம்மங்குல் வாய்விளக்கும் மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே 30 பற்றொன்றி லார்பற்றும் தில்லைப் பரன்பரம் குன்றில்நின்ற புற்றொன்று அரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால் மல்துன்று மாமலரிட்டு உன்னை வாழ்த்திவந் தித்தலன்றி மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே 31 பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர் ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந்து ஓலமிட்டுத் தீங்கணைந் தோர் அல்லும் தேறாய் கலங்கிச் செறிகடலே ஆங்கணைந் தார்நின்னையும் உளரோ சென்றகன்றவரே 32 அலரா யிரம்தந்து வந்தித்து மாலாயிரங்கரத்தால் அலரார் கழல்வழி பாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள் அலரா விருக்கும் படைகொடுத் தோன்தில்லையான் அருள்போன்று அலராய் விளைகின்றது அம்பல்கைம் மிக்கு ஐய மெய்யருளே 33 திருச்சிற்றம்பலம் 67. ஒருவழித்தணந்தல் திருச்சிற்றம்பலம் புகழும் பழியும் பெருக்கில் பெருகும் பெருகிநின்று நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இதுநீநினைப்பின் அகழும் மதிலும் அணிதில்லையோன் அடிப்போது சென்னித் திகழும் அவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே 1 ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச் சீரம் பரத்தின் திகழ்ந்தொளி தோன்றும் துறைவர்சென்றார் போரும் பரிசு புகன்றனரோ புலியூர்ப் புனிதன் சீரம்பர் சுற்றி எற்றிச் சிறந்தார்க்கும் செறிகடலே 2 பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்தரு வெண்கிழிதம் சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள் வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய் பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே 3 பகன்தா மரைக்கண் கெடக்கடந் தோன்புலி யூர்ப்பழனத்து அகன்தா மரையன்ன மேவண்டு நீல மணியணிந்து முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னையின்னும் உரையாது அகன்றார் அகன்றே ஒழிவர்கொல் லோநம் அகன்துறையே 4 உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவனாட் கொள்ளும் அவரிலொர் கூட்டம்தந் தான்குனிக் கும்புலியூர் விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரல்கண்டாய் புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே 5 ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன்றார் வருகென்று ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல் ஐய வாழி திருத்தித் தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே 6 கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன் எறிவோர் போர்த்தரு அங்கம் துறைமானும் துறைவர்தம் போக்குமிக்க தீர்த்தர் அங்கன் தில்லைப் பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும் ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்கொல் ஆழ்சுடரே 7 பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப் புகலோன் புகுநர்க்குப் போக்கரியோன் எவரும்புகலத் தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால் அகலோங்கு இருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே 8 பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னும் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய் இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே 9 கருங்கழி காதல்பைங் கானலில் தில்லை எம்கண்டர் விண்டார் ஒருங்கழி காதர முவெயில் செற்ற ஒற்றைச் சிலைசூழ்ந்து அருங்கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்துகண்ணீர் வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே 10 முவல் தழீஇய அருள்முதலோன் தில்லைச் செல்வன் முந்நீர் நாவல் தழீஇய இந்நானிலம் துஞ்சும் நயந்த இன்பச் சேவல் தழீஇச் சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிரெம் காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களியன்னமே 11 நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங்கண் துயிலக் கல்லா கதிர்முத்தம் காற்றும் எனக்கட் டுரைக்கதில்லைத் தொல்லோன் அருள்களில் லாரிற்சென்றார் சென்ற செல்லல்கண்டாய் எல்லார் மதியே இதுநின்னையான் இன்று இரக்கின்றதே 12 வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கு இடமாய்த் தளரும் தடவரைத் தண்சிலம்பா தனது அங்கம் எங்கும் விளரும் விழும் எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்று ஒளிரும் சடைமுடி யோன்புலியூர் அன்ன ஒண்ணுதலே 13 திருச்சிற்றம்பலம் 68. உடன்போக்கு திருச்சிற்றம்பலம் ஒராகம் இரண்டெழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒண்ணுதலங் கராகம் பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ஞ்சுணங்கு ஆடகத்தின் பராகம் சிதர்ந்த பயோதரம் இப்பரிசே பணைத்த இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே 1 மணியக்கு அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர் பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத் துணியக் கருதுவது இன்றே துணிதுறைவா நிறைபொன் அணியக் கருதுகின் றார்பலர் மேன்மேல் அயலவரே 2 பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் ஓதியைநற் காப்பணிந் தார்பொன் அணிவார் இனிக்கமழ் பூந்துறைவ கோப்பணிவான் தோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசே 3 எலும்பால் அணியிறை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் நலம்பா வியமுற்றும் நல்கினும் கல்வரை நாடர் அம்ம சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பல் ஒட்டார் கலம்பா வியமுலை யின்விலை என்நீ கருதுவதே 4 விசும்புற்ற திங்கட்கு அழும் மழப்போன்று இனிவிம்மிவிம்மி அசும்புற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லையன்னாள் குயம்புற் றரவு இடைகூர் எயிற்று ஊறல் குழல்மொழியின் நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே 5 மைதயங்கும் திரைவாரியை நோக்கி மடல் அவிழ்பூங் கைதை அங்கானலை நோக்கிக்கண்ணீர் கொண்டு எங்கண்டர்தில்லைப் பொய்தயங்கும் நுண்மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள் பைதயங்கும் அரவம்புரையும் அல்குல் பைந்தொடியே 6 மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற் கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறியேன் பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்தாள் என்னைப் புல்லிக்கொண்டு பாவைதந் தாள்பைங் கிளியளித்தாள் இன்றென் பைந்தொடியே 7 மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூக் கல்லியல் வெம்மைக் கடங்கடும் தீக்கற்று வானம் எல்லாம் சொல்லிய சீர்ச்சுடர்த் திங்கள் அங்கண்ணித்தொல் லோன்புலியூர் அல்லியங் கோதைநல்லாய் எல்லை சேய்த்து எம் அகல்நகரே 8 பிணையும் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே இணையும் அளவும் இல்லா இறையோன் உறைதில்லைத்தண்பூம் பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம்பைந்தொடிக்கே 9 இங்கு அயல் என்நீ பணிக்கின்றது ஏந்தல் இணைப்பதில்லாக் கங்கை அம்செஞ்சடைக் கண்ணுதல் அண்ணல் கடிகொள்தில்லைப் பங்கயப் பாசடைப் பாய்தடம்நீ அப்படர்தடத்துச் செங்கயல் அன்றே கருங்கயல் கண்ணித் திருநுதலே 10 தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கு அந்நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் தோளிதிண் கற்பின் விழுமிதன்றீங் கோயில் சிறந்துசிற் றம்பலத்து ஆடும் எம்கூத்தப்பிரான் வாயில் சிறந்த மதியில் சிறந்த மதிநுதலே 11 குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய் நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர் மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடின் சென்றுசென்று பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன் னத்தகும் பெற்றியரே 12 நிழல்தலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும் அழல்தலை வெம்பரற் றென்பர் என்னோதில்லை அம்பலத்தான் கழல்தலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போல் குழல்தலைச் சொல்லிசெல் லக்குறிப் பாகும் நம்கொற்றவர்க்கே 13 காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பல வன்கயிலைச் சீயமும் மாவும் வெரீஇ வரலென்பல் செறிதிரைநீர்த் தேயமும் யாவும் பெறினும் கொடார்நமர் இன்னசெப்பில் தோயமும் நாடும் இல்லாச்சுரம் போக்குத் துணிவித்தவே 14 மற்பாய் விடையோன் மகிழ்புலியூர் என்னொடும் வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே 15 கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுரம் ஆகும்நம்பா அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்டரி சிந்துகண்ணாள் செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே 16 முன்னோன் மணிகண்டம் ஒத்தவன் அம்பலம் தம்முடிதாழ்த்து உன்னா தவர்வினை போல்பரந்து ஓங்கும் எனதுயிரே அன்னாள் அரும்பெறல் ஆவியன்னாய் அருள் ஆசையினால் பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே 17 பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர் அனிச்சம் திகழும் அம்சீறடி ஆவ அழல்பழுத்த கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால் இனிச்சந்த மேகலையாட்கு என்கொலாம் புகுந்து எய்துவதே 18 வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளல் உள்ளம் தெய்வம் தருமிருள் தூங்கும் முழுதும் செழுமிடற்றின் மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர்போல் மொய்வந்த வாவி தெளியும் துயிலுமிம் முதெயிலே 19 பறந்திருந்து உம்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென் தில்லையன் னாள்திறத் துச்சிலம்பா அறம்திருந்து உன்னருளும் பிறிதாயின் அருமறையின் திறம்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றும் இச்சேணிலத்தே 20 ஈண்டொல்லை ஆயமும் ஔவையும் நீங்க இவ்வூர்க் கவ்வைதீர்த்து ஆண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மை எம்மைப் பிடித்தின்று ஆண்டெல்லை தீர்இன்பம் தந்தவன் சிற்றம் பலம்நிலவு சேண்தில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே 21 பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம் பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும் மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும் காணத் திருத்திய போலும்முன் னாமன்னு கானங்களே 22 கொடித்தேர் மறவர் குழாம்வெங் கரிநிரை கூடின் என்கை வடித்தேர் இலங்கெஃகின் வாய்க்குத வாமன்னும் அம்பலத்தோன் அடித்தேர் அலரென்ன அஞ்சுவன்நின் ஐயர் என்னின்மன்னும் கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ் விண்தோய் கனவரையே 23 முன்னோன் அருள்முன்னும் உன்னா வினையின் முனகர்துன்னும் இன்னாக் கடறிது இப்போழ்தே கடந்தின்று காண்டும்சென்று பொன்னார் அணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார் தென்னா எனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே 24 விடலை உற்றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ மடலையுற் றார்குழல் வாடினள் மன்னுசிற் றம்பலவர்க்கு அடலையுற் றாரின் எறிப்பு ஒழிந்தாங்கு அருக்கன்சுருக்கிக் கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே 25 அன்பணைத்து அம்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்தன் பின்பணைத் தோளிவரும் இப்பெருஞ்சுரம் செல்வதன்று பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல் நன்பணைத் தண்ணறவு உண் அளி போன்றொளிர் நாடகமே 26 கண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின் பண்கட மென்மொழி ஆரப் பருக வருக இன்னே விண்கள்தம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கன் எங்கோன் தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே 27 மின்தங்கு இடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர் குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குருஉக்கமலம் துன்று அம்கிடங்கும் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார் சென்றங்கு அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே 28 மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப் பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர் மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய் நின்போல் நடை அன்னம் துன்னிமுன் தோன்றும்நல் நீள்நகரே 29 செய்குன்று உவை இவை சீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழிலவை ஞாங்கரெங்கும் பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும் எய்குன்ற வார்சிலை அம்பலவற்கு இடம் ஏந்திழையே 30 மயிலெனப் பேர்ந்து இளவல்லியின் ஒல்கிமென் மான்விழித்துக் குயிலெனப் பேசும் எங்குட்டன் எங்குற்றதென் னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய் அயிலெனப் பேருங்கண்ணாய் என்கொலாம் இன்று அயர்கின்றதே 31 ஆளரிக்கும் அரிதாய்த் தில்லை யாவருக்கும் எளிதாம் தாளர் இக்குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேல் கோளரிக் கும்நிகர் அன்னார் ஒருவர் குருஉமலர்த்தார் வாளரிக் கண்ணிகொண் டாள்வண்டல் ஆயத்து எம்வாணுதலே 32 வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக் கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளர மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற்று எடுத்தாற்கு இனியன வேயினி யாவன எம்மனைக்கே 33 முறுவல் அக்கால்தந்து வந்தென் முலைமுழுவித் தழுவிச் சிறுவலக் காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதையத் தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார் உறுவலக் கானகம் தான்படர் வானாம் ஒளியிழையே 34 தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத்தண் அனிச்சப் பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும்நங்காய் எரியும் தீமேல் அயில்போல் செறிபரல் கானிற் சிலம்படிபாய் ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம்மனைக்கே 35 தழுவின கையிறை சோரின் தமியம் என்றேதளர்வுற்று அழுவினை செய்யுநையா அம்சொல் பேதை அறிவுவிண்ணோர் குழுவினை உய்யநஞ்சுண்டு அம்பலத்துக் குனிக்கும்பிரான் செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே 36 யாழியல் மென்மொழி வன்மனப் பேதையொர் ஏதிலன்பின் தோழியை நீத்து என்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே வாழி இம்முதூர் மறுகச்சென்றாள் அன்று மால்வணங்க ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அருஞ்சுரமே 37 கொன்னுனைவேல் அம்பலவன் தொழாரின்குன் றம்கொடியோள் என்னணம் சென்றனள் என்னணம் சேருமென அயரா என்னனை போயினள் யாண்டையள் என்னைப் பருந்தடும் என்று என்னனை போக்கன்றிக் கிள்ளை என்னுள்ளத்தை ஈர்க்கின்றதே 38 பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு நற்றேன் மொழியழல் கான்நடந் தாள்முகம் நானணுகப் பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு மற்றேன் மலரின் மலர்த்து இரந்தேன்சுடர் வானவனே 39 வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யும்குற் றேவல் மற்றென் மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாம்தில்லை யான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென்று எண்ணித்துண் ணென்றொளித்துக் கைம்மல ரால்கண் புதைத்துப் பதைக்கும் எம்கார்மயிலே 40 வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத் தீயினது ஆற்றல் சிரம்கண் இழிந்து திசைதிசைதாம் போயின எல்லை எல்லாம்புக்கு நாடுவன் பொன்னினையே 41 பணங்கள் அஞ்சாலும் பரு அரவார்த்தவன் தில்லையன்ன மணங்கொள் அஞ்சாயலும் மன்னனும் இன்னே வரக்கரைந்தால் உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள்நிணப்பலி ஓக்குவல்மாக் குணங்கள் அஞ்சாற்பொலி யும்நல சேட்டைக் குலக்கொடியே 42 முன்னும் கடுவிடம் உண்டதென் தில்லைமுன்னோன் அருளால் இன்னும் கடியிக் கடிமனைக்கே மற்றுயாம் அயர மன்னும் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறும் உண்டேல் உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே 43 தெள்வன் புனற்சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனஞ்சேர் முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினையேன் எடுத்த ஒள்வன் படைக்கண்ணி சீறடி இங்கிவை உங்குவையக் கள்வன் பகட்டுரவோன் அடியென்று கருதுவனே 44 பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க் கோலத் தவிசின் மிதிக்கின் பதைத்தடி கொப்புள் கொள்ளும் வேலொத்த வெம்பரல் கானத்தின் இன்றொர் விடலைபின்போம் காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே 45 பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றில் எனைப்பிரிந்தால் ஊதைக்கு அலமரும் வல்லியொப் பாள்முத்தன் தில்லை அன்னாள் ஏதிற் சுரத்தய லானொடு இன்று ஏகினள் கண்டனையே போதிற் பொலியும் தொழிற்புலிப் பல்குரல் பொற்றொடியே 46 புயலன்று அலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி பயலன் தனைப்பணி யாதவர் போல்மிகு பாவம் செய்தேற்கு அயலன் தமியன் அம்சொல்துணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன்று எனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே 47 பாயும் விடையோன் புலியூர் அனைய என்பாவை முன்னே காயும் கடத்திடை யாடிக் கடப்பவும் கண்டுநின்று வாயும் திறவாய் குழையெழில் வீசவண்டு ஓலுறுத்த நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே 48 சுத்திய பொக்கணத்து என்பணி கட்டங்கம் சூழ்சடைவெண் பொத்திய கோலத்தி னீர்புலியூர் அம்பலவர்க்குற்ற பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர் பித்திதன் பின்வர முன்வருமோ ஒர்பெருந்தகையே 49 வெதிரேய் கரத்துமென்தோல் ஏய்சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ அதிரேய் மறையின் இவ்வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக் கதிரேய் சடையோன் கரமான் எனவொரு மான்மயில்போல் எதிரே வருமே சுரமே வெறுப்பவொர் ஏந்தலொடே 50 மீண்டார் எனஉவந் தேன்கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர்முன் போயின ரேபுலியூர் எனைநின்று ஆண்டான் அருவரை ஆளியன் னானைக்கண்டேன் அயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே 51 பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத் தீங்கை இலாச்சிறி யாள்நின்றது இவ்விடம் சென்றெதிர்ந்த வேங்கையின் வாயின் வியன்கைம் மடுத்துக் கிடந்தலற ஆங்கயி லாற்பணி கொண்டது திண்திறல் ஆண்தகையே 52 மின்தொத்து இடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன ஒன்று ஒத்திடவுடை யாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே நன்று ஒத்தெழிலைத் தொழவுற்றனம் என்னதோர் நன்மைதான் குன்றத் திடைக்கண்டனம் அன்னை நீசொன்ன கொள்கையரே 53 மீள்வது செல்வதன்று அன்னை இவ்வெங்கடத்து அக்கடமாக் கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன நீள்வது செய்தகண்ணாள் இந்நெடுஞ்சுரம் நீந்தியெம்மை ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே 54 சுரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும் எங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கு அணியாம் வியன்கங்கை என்னும் பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம்பலம் அனைய கரும்பன மென்மொழி யாரும் அந்நீர்மையர் காணுநர்க்கே 55 ஆண்டில் எடுத்தவராம் இவர்தாம் அவர் அல்குவர்போய்த் தீண்டில் எடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த் தூண்டில் எடுத்தவ ரால்தெங்கொடு எற்றப் பழம்விழுந்து பாண்டில் எடுத்த பஃறாமரை கீழும் பழனங்களே 56 திருச்சிற்றம்பலம் 69. வரைவுமுடுக்கம் திருச்சிற்றம்பலம் எழுங்குலை வாழையின் இன்கனி தின்று இளமந்தி அந்தண் செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம்பா முனைமேல் உழுங்கொலை வேல்திருச் சிற்றம்பலவரை உன்னலர்போல் அழுங்குலை வேலன்ன கண்ணிக்கு என்னோநின் அருள்வகையே 1 பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர் அரம்பையர் தம்மிடமோ அன்றி வேழத்தின் என்புநட்ட குரம்பையர் தம்மிடமோ இடம்தோன்றும் இக்குன்றிடத்தே 2 சிறார்கவண் வாய்த்த மணியிற்சிதை பெருந்தேனிழும் என்று இறால்கழி வுற்று எம்சிறுகுடில் உந்தும் இடமிது எந்தை உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளும் கொடிச்சி உம்பர் பெறா அருள் அம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே 3 கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயம்கங்குல் இடம்தொறும் பார்க்கும் இயவொருநீ எழில் வேலின்வந்தால் படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரின் எம்மைத் தொடர்ந்தொறும் துன்பு என்பதே அன்ப நின்னருள் தோன்றுவதே 4 களிறுற்ற செல்லல் களைவயின் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப் பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோடு ஒளிறுற்ற மேனியன் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல் வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் மெய்யருளே 5 கழிகண் தலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல் குழிகண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇவழங்காக் கழிகட் டிரவின் வரல்கழல் கைதொழு தேயிரந்தேன் பொழிகட் புயலின் மயிலில் துவளும் இவள்பொருட்டே 6 விண்ணும் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ வண்ணன் சிவன்தில்லை மல்லெழில் கானல் அரையிரவில் அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டாம் எனச்சிறிது கண்ணும் சிவந்தன்னை என்னையும் நோக்கினள் கார்மயிலே 7 வான்தோய் பொழிலெழில் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன் தேன்தோய்த்து அருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல் மீன்தோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையும் மேனி வைத்தான் வான்தோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே 8 நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லைச் சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும் செவ்வேல் இளைஞர் பறைக்கண் படும்படும் தோறும் படாமுலைப் பைந்தொடியாள் கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே 9 கலரா யினர்நினை யாத்தில்லை அம்பலத் தான்கழற்கு அன்பு இலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னிப் புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல் மலரா வரும்மருந் தும் இல்லை யோநும் வரையிடத்தே 10 இறவரை உம்பர்க் கடவுட் பராய்நின்று எழிலியுன்னிக் குறவரை ஆர்க்கும் குளிர்வரை நாட கொழும்பவள நிறவரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சுறாதவர்போல் உறவரை மேகலை யாட்கு அலராம்பகல் உன்னருளே 11 சுழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பில் கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான் விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்து ஐயமெய்யே பழியாம் பகல்வரில் நீயிர வேதும் பயனில்லையே 12 மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன் எய்யாது அயின்றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா மெய்யா அரியதென் அம்பலத்தான் மதியூர் கொள்வெற்பின் மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே 13 தேமாம் பொழில்தில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க நாமா தரிக்க நடம்பயில் வோனை நண்ணாதவரின் வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல் கண்டால் தாமா அறிகில ராயின் என்னாம் சொல்லும் தன்மைகளே 14 வல்சியின் எண்கு வளர்புற்று அகழமல்கும் இருள்வாய்ச் செல்வரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போல் கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல் கல்லதர் என்வந்த வாறென் பவர்ப்பெறின் கார்மயிலே 15 வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர் வேரிக்கு அளிக்கும் விழுமலை நாட விரிதிரையின் நாரிக்கு அளிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை ஏரிக் களிக்கரு மஞ்ஞை இந்நீர்மை என்னெய்துவதே 16 திருச்சிற்றம்பலம் 70. வரைபொருட்பிறிதல் திருச்சிற்றம்பலம் குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின்குலத் திற்கும் வந்தோர் நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின் இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும் உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே 1 வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் நித்தில வாள்நகைக்குத் தொடுத்தன நீவிடுத் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற் படுத்தநன் நீள்கழல் ஈசர்சிற் றம்பலம் தாம்பணியார்க்கு அடுத்தன தாம்வரின் பொல்லாது இரவின்நின் ஆரருளே 2 குன்றங் கிடையும் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து மின்தங் கிடைநும் மையும்வந்து மேவுவன் அம்பலம்சேர் மன்தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னைச் சென்றங்கு இடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே 3 கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர்ப்பயில் கிள்ளையன்ன யாழேர் மொழியாள் இரவரி னும்பகற் சேறியென்று வாழேன் என இருக்கும்வரிக் கண்ணியை நீவருட்டித் தாழேன் என இடைக் கண்சொல்லி ஏகு தனிவள்ளலே 4 வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன் குருட்டின் புகச்செற்ற கோன்புலியூர் குறுகார்மனம் போன்று இருட்டிற் புரிகுழ லாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே 5 நல்லாய் நமக்குற்றது என்னென்று உரைக்கேன் நமர்தொடுத்த எல்லா நிதியும் உடன்விடுப்பான் இமையோர் இறைஞ்சும் மல்லார் கழல் அழல்வண்ணர் வண்தில்லை தொழார்கள் அல்லால் செல்லா அழற்கடம் இன்று சென்றார் நம்சிறந்தவரே 6 அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கெல்லாம் மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும்வள்ளல் திருந்தும் கடன்நெறி செல்லும் இவ்வாறு சிதைக்குமென்றால் வருந்தும் மடநெஞ்ச மேயென்னயாம் இனிவாழ்வகையே 7 ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழும் சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார் தேர்ப்பின்னைச் சென்ற என்நெஞ்சு என்கொலாம் இன்று செய்கின்றதே 8 கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும் வானமர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர்போல் தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே 9 மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெங்கான் கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால் நொதுமலர் நோக்கமொர் முன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல் இதுமலர்ப் பாவைக்கு என்னோ வந்த வாறென்பர் ஏந்திழையே 10 வந்தாய் பவரை இல்லாமயில் முட்டை இளையமந்தி பந்தாடு இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன் தென்தில்லை தொழார்குழுப்போல் சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையும் திருவினர்க்கே 11 மொய்யென்பதே இழைகொண்டவன் என்னைத்தன் மொய்கழற்காட் செய்யென்பதே செய்தவன் தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும் பொய்யென்பதே கருத்து ஆயின் புரிகுழற் பொற்றொடியாய் மெய்யென்பதேது மற்று இல்லைகொலாம் இவ்வியலிடத்தே 12 மன்செய்த முன்னாள் மொழிவழியே அன்ன வாய்மைகண்டும் என்செய்த நெஞ்சும் நிறையும்நில்லா எனது இன்னுயிரும் பொன்செய்த மேனியன் தில்லையுறாரின் பொறை அரிதாம் முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே 13 கருந்தினை ஓம்பக் கடவுள் பராவி நமர்கலிப்பச் சொரிந்தன கொண்முச் சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற் பரிந்தெனை யாண்டசிற் றம்பலத் தான்பரங் குன்றில்துன்றி விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே 14 வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்துள்நின் றாடும்வெள்ளிக் குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று சென்றவர் தூதுகொல்லோ இருந்தேமையும் செல்லல்செப்பா நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே 15 வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர் ஒருவனது அன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத் தருவன செய்தெனது ஆவிகொண்டு ஏகி என்நெஞ்சில் தம்மை இருவின காதலர் ஏதுசெய்வான் இன்று இருக்கின்றதே 16 வேயின மென்தோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப் பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி ஆயின ஈசன் அமரர்க்கு அமரன்சிற் றம்பலத்தான் சேயினது ஆட்சியில் பட்டன ளாம்இத் திருந்திழையே 17 கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றம் கொள்ளும் பருவமு றாள்குறுகா அசுரர் நிணங்குற்ற வேல்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல் அணங்குற்ற நோய் அறிவுற்றுரை யாடுமின் அன்னையரே 18 மாட்டியன்றே எம் வயின்பெரு நாணினி மாக்குடிமா சூட்டியன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளமெல்லாம் காட்டியன்றே நின்ற தில்லைத்தொல் லோனைக்கல் லாதவர்போல் வாட்டியன்று ஏர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே 19 குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான் இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும் மயிலிதன் றேகொடி வாரணம் காண்கவன் சூர்தடிந்த அயிலிதன் றேயிதன் றேநெல்லில் தோன்றும் அவன்வடிவே 20 வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க காலன் புகுந்து அவியக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற மேலன் புகுந்தென்கண் நின்றான் இருந்தவெண் காடனைய பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே 21 அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்பயலார் பெயர்ந்தும் ஒழியா விடினென்னை பேசுவ பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின் துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் ஆதும் துறைவனுக்கே 22 சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால் நன்றா அழகிதன்றே இறைதில்லை தொழாரின் நைந்தும் ஒன்றாம் இவட்கும் மொழிதல் கில்லேன் மொழியாதுமுய்யேன் குன்றார் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இக்கூர்மறையே 23 யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல் தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே 24 வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர் உண்டலுற் றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க் கொண்டலுற்று ஏறும் கடல்வர எம்முயிர் கொண்டுதந்து கண்டலுற்று ஏர்நின்ற சேரிச்சென்றான் ஓர்கழலவனே 25 குடிக்கலர் கூறினும் கூறா வியன்தில்லைக் கூத்தனதாள் முடிக்கு அலராக்குமொய் பூந்துறை வற்கு முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும் படிக்கலராம் இவை என்நாம் மறைக்கும் பரிசுகளே 26 விதியுடை யாருண்க வேரி விலக்கலம் அம்பலத்துப் பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாமொழுகக் கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின் மதியுடை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே 27 மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள் எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச் சினக்களி யானை கடிந்தார் ஒருவர்செவ் வாய்ப்பசிய புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே 28 இளையாள் இவளை என்சொல்லிப் பரவுதும் ஈரெயிறு முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர் வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன் திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே 29 கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப் புள்ளினம் ஆர்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கள்தம் வள்ளினம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின் வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும் தேரின்று மெல்லியலே 30 பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மாலயற்கும் காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் தில்லையன்ன வாரண வும்முலை மன்றலென்று ஏங்கும் மணமுரசே 31 அடற்களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்பவின்பம் படக்களி யாவண் டறைபொழில் தில்லைப் பரமன்வெற்பில் கடக்களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே 32 என்கடைக் கண்ணினும் யான்பிற ஏத்தா வகையிரங்கித் தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே 33 திருச்சிற்றம்பலம் 71. மணம் சிறப்புரைத்தல் திருச்சிற்றம்பலம் பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசம் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரின் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே 1 இருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும் மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல் இருந்து திவண்டன வாலெரி முன்வலம் செய்து இடப்பால் அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அருந்தழையே 2 சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால் காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த வேரியும் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பர் அன்னே காரியல் கண்டர்வண் தில்லை வணங்கும் எம்காவலரே 3 தொண்டின மேவும் சுடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரில் கண்டின மேவும் இல்நீயவள் நின்கொழு நன்செழுமெல் தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள் வண்டின மேவும் குழலாள் அயல்மன்னும் இவ்வயலே 4 பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண் இட்டணி யான்தவி சின்மலர் அன்றி மிதிப்பக் கொடான் மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக் கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே 5 தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம்பலம் அனையாள் தெய்வம் பணிந்தறியாள் என்று நின்று திறைவழங்காத் தெவ்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பௌவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே 6 சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப் பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின் கற்பந்தி வாய்வட மீனும் கடக்கும் படிகடந்தும் இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவன் ஈர்ங்களிறே 7 மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியேறு அன்னவன் தேர்புறத்து அல்கல்செல்லாது வரகுணனாம் தென்னவன் ஏத்துசிற்றம்பலம் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னவன் முவல் அன்னாளும் மற்றோர் தெய்வம் முன்னலளே 8 ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈருருக்கொண்டு ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத்து அறைகழலோன் அருள்பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்றாது இவ்வணிநலமே 9 திருச்சிற்றம்பலம் 72. ஓதற் பிரிவு திருச்சிற்றம்பலம் சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின் ஆரள வில்லா அளவுசென்றார் அம்பலத்துள்நின்ற ஓரள வில்லா ஒருவன் இருங்கழல் உன்னினர்போல் ஏரள வில்லா அளவினர் ஆகுவர் ஏந்திழையே 1 வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரும் என்பதுகொண்டு ஓதலுற்றார் உற்றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான் போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே 2 கற்பா மதில்தில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த விற்பா விலங்கல் எங்கோனை விரும்பலர்போல அன்பர் சொற்பா விரும்பினர் என்னமெல் லோதி செவிப்புறத்துக் கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே 3 பிரியாமையும் உயிரொன்றா வதும்பிரி யிற்பெரிதும் தரியாமையும் ஒருங்கேநின்று சாற்றினர் தையல் மெய்யிற் பிரியாமை செய்து நின்றோன் தில்லைப் பேரியல் ஊரரன்ன புரியாமையும் இதுவேயினி என்னாம் புகல்வதுவே 4 திருச்சிற்றம்பலம் 73. காவற் பிரிவு திருச்சிற்றம்பலம் முப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான் வியன்தில்லையான் அருளால் விரிநீர் உலகம் காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கண் பூப்பால் நலம் ஒளிரும் புரிதாழ்குழல் பூங்கொடியே 1 சிறுகண் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத் தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன் உறுகண் தழலுடையோன் உறையம்பலம் உன்னலரின் துறுகள் புரிகுழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே 2 திருச்சிற்றம்பலம் 74. பகைதணிவினைப் பிரிவு திருச்சிற்றம்பலம் மிகைதணித் தற்கு அரிதாம் இருவேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித் தொகைதணித் தற்கு என்னை ஆண்டு கொண்டோன் தில்லைச் சூழ்பொழில்வாய் முகைதணித் தற்கு அரிதாம் புரிதாழ்தரு மொய்குழலே 1 நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்புமென இங்ஙனே பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத் திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலும் திருநுதலே 2 திருச்சிற்றம்பலம் 75. வேந்தற்குற்றுழிப் பிரிவு திருச்சிற்றம்பலம் போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல் மாது குலாயமென் னோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க் காது குலாயகுழை எழிலோனைக் கருதலர்போல் ஏதுகொ லாய்விளை கின்றது இன்றொன்னார் இடுமதிலே 1 பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர் வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல் துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே 2 கோலித் திகழ்சிறகு ஒன்றின் ஒடுக்கிப் பெடைக்குருகு பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயிலிரவின் மாலித் தனையறி யாமறை யோனுறை அம்பலமே போலித் திருநுத லாட்கு என்ன தாங்கொல் என்போதரவே 3 கருப்பினம் மேவும் பொழில்தில்லை மன்னன்கண்ணார் அருளால் விருப்பினம் மேவச்சென்றார்க்கும் சென்று அல்குங்கொல் வீழ்பனிவாய் நெருப்பினம் மேய்நெடு மாலெழில் தோன்றச்சென் றாங்குநின்ற பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே 4 சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று பெற்றவ ளேயெனைப் பெற்றாள் பெடைசிறகான் ஒடுக்கிப் புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும் இம்மயங்கிருளே 5 புரமன்று அயரப் பொருப்புவில் ஏந்திப் புத்தேளிர்நாப்பண் சிரமன்று அயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம்பலம் அனையாள் பரமன்று இரும்பனி பாரித்த வாபரந்து எங்கும்வையம் சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே 6 வாழும் படியொன்றும் கண்டிலம் வாழி இம்மாம்பொழில்தேன் சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய் யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக் கூழின் மலிமனம் போன்று இருளா நின்ற கோகிலமே 7 பூண்பதென் றேகொண்ட பாம்பன் புலியூர் அரன்மிடற்றின் மாண்பதென் றே எனவானின் மலரும் மணந்தவர்தேர் காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன் பாண்பதன் தேர்குழலாய் எழில் வாய்த்த பனிமுகிலே 8 தெளிதரல் காரெனச் சீரனம் சிற்றம் பலத்தடியேன் களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம் துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்கு உன்குழல்போன்று அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்து அலர்ந்தனவே 9 தேன்திக்கு இலங்கு கழலழல் வண்ணன்சிற் றம்பலத்தெங் கோன்திக்கு இலங்குதிண்தோள் கொண்டல் கண்டன்குழை எழில்நாண் போன்றிக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல்போல் தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யில் தோன்றுவதே 10 திருமால் அறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்தெம் கருமால் விடையுடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்திசையும் வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர் பொருமால் அயிற்கண்நல்லாய் இன்று தோன்றும்நம் பொன்னகர்க்கே 11 புயலோங்கு அலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும் மயலோங்கு இருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த கயலோங்கு இருஞ்சிலை கொண்டுமன் கோபமும் காட்டிவரும் செயலோங்கு எயிலெரி செய்தபின் இன்றோர் திருமுகமே 12 சிறப்பின் திகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம் பிறப்பின் துனைந்து பெருகுக தேர்பிறங்கும் ஒளியார் நிறப்பொன் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள் இறப்பின் துயின்று முற்றத்து இரைதேரும் எழில்நகர்க்கே 13 அருந்தேர் அழிந்தனம் ஆலமென்று ஓலமிடும் இமையோர் மருந்தேர் அணி அம்பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல் திருந்தேர் அழிந்து பழங்கண் தரும்செல்வி சீர்நகர்க்கென் வருந்தேர் இதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே 14 பணிவார் குழை எழிலோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய மணிவார் குழல்மடமாதே பொலிகநம் மன்னர்முன்னாப் பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டுவண்தேர் அணிவார் முரசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே 15 கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள்நின்று நான்முகனோடு ஒருங்கு வளைக்கரத்தான் உணராதவன் தில்லையொப்பாய் மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே 16 திருச்சிற்றம்பலம் 76. பொருள்வயிற் பிரிவு திருச்சிற்றம்பலம் முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப் பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய் துனிவரு நீர்மையிது என்னென்று தூநீர் தெளித்தளிப்ப நனிவரு நாளிது வோவென்று வந்திக்கும் நன்னுதலே 1 வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு நெறியார் அருஞ்சுரம் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர் அறியா அளவுநின் றோன்தில்லைச் சிற்றம்பலம் அனைய செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே 2 சிறுவாள் உகிருற்று உறாமுன்னம் சின்னப் படுங்குவளைக்கு எறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே அறிவாள் ஒழிகுவது அஞ்சனம் அம்பல வர்ப்பணியார் குறிவாழ் நெறிசெல்வர் அன்பரென்று அம்ம கொடியவளே 3 வானக் கடிமதில் தில்லை எம்கூத்தனை ஏத்தலர்போல் கானக் கடஞ்செல்வர் காதலர் என்னக் கதிர்முலைகள் மானக் கனகம் தருமலர்க் கண்கள்முத் தம்வளர்க்கும் தேனக்க தார்மன்னன் என்னோ இனிச்சென்று தேர்பொருளே 4 சுருள்தரு செஞ்சடை வெண்சுடர் அம்பல வன்மலயத்து இருள்தரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த அருள்தரும் இன்சொற்கள் அத்தனை யும்மறந்து அத்தம்சென்றோ பொருள்தரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே 5 முவர்நின்று ஏத்த முதலவன் ஆடமுப் பத்துமும்மைத் தேவர்சென்று ஏத்தும் சிவன்தில்லை அம்பலம் சீர்வழுத்தாப் பாவர்சென்று அல்கும் நரகம் அனைய புனையழற்கான் போவர்நம் காதலர் என்நாம் உரைப்பது பூங்கொடியே 6 தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும் பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே 7 ஆழியொன்று ஈரடியும் இலன் பாகன்முக் கண்தில்லையோன் ஊழியொன் றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறொடுங்கும் ஏழியன் றாழ்கடலும் எண்திசையும் திரிந்திளைத்து வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே 8 பிரியாரென இகழ்ந்தேன் முன்னம் யான்பின்னை எற்பிரியின் தரியாளென இகழ்ந்தார் மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க எரியார் எழிலழிக்கும் எழிலம்பலத்தோன் எவர்க்கும் அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே 9 சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர்க்கடல்நஞ்சு ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகினெல்லாம் காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியொடுபைம் பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே 10 பொன்னணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இப்பொங்குவெங்கா னின்னணி நிற்குமிது என்னென்பதே இமையோர் இறைஞ்சும் மன்னணி தில்லை வளநகர் அன்ன அன்னந்நடையாள் மின்னணி நுண்ணிடைக்கோ பொருட்கோ நீவிரைகின்றதே 11 நாய்வயின் உள்ள குணமும் இல்லேனைநற் றொண்டுகொண்ட தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப் பேய்வயினும் அரிதாகும் பிரிவு எளிதாக்குவித்துச் சேய்வயின் போந்தநெஞ்சே அஞ்சத் தக்கது உன்சிக்கனவே 12 தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான் நாமே நடக்க ஒழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன வாமே கலையை விட்டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே 13 தெண்ணீர் அணிசிவன் சிற்றம் பலம்சிந்தி யாதவரின் பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்கண் உண்ணீர் உகவொளி வாடிட நீடுசென் றார்சென்றநாள் எண்ணீர் மையின் நிலனுங் குழியும் விரல் இட்டறவே 14 சுற்றம் பலம் இன்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன் சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப் புற்றங்கு உதர்ந்துநல் நாகொடும் பொன்னார் மணிபுலம்பக் கொற்றம் மருவுகொல் ஏறுசெல்லா நின்ற கூர்ஞ்செக்கரே 15 கண்ணுழை யாதுவிண் மேகம் கலந்து கணமயில்தொக்கு எண்ணுழை யாத்தழை கோலிநின்று ஆலும் இனமலர்வாய் மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னனது இன்னருள்போல் பண்ணுழை யாமொழியாள் என்னளாங்கொல் மன்பாவியற்கே 16 அற்படு காட்டில்நின்று ஆடி சிற்றம்பலத் தான்மிடற்றின் முற்படு நீள்முகில் என்னின்முன் னேல்முது வோர்குழுமி விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய் நெற்படு வான்பலி செய்து அயராநிற்கும் நீள்நகர்க்கே 17 பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோன் அருளிற் கதுமெனப்போய் மேவிய மாநிதியோடு அன்பர் தேர்வந்து மேவினதே 18 யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத்தான் அமைத்த ஊழின் வலியதொன்று என்னை ஒளிமே கலையுகளும் வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்னே சூழும் தொகுநிதியோடு அன்பர் தேர்வந்து தோன்றியதே 19 மயில்மன்னு சாயல் இம்மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான் வெயில்மன்னு வெஞ்சுரம் சென்றதெல் லாம்விடை யோன்புலியூர்க் குயில்மன்னு சொல்லிமென் கொங்கை என் அங்கத்திடைக் குளிப்பத் துயில்மன்னு பூவணை மேலணை யாமுன் துவளுற்றதே 20 திருச்சிற்றம்பலம் 77. பரத்தையிற் பிரிவு திருச்சிற்றம்பலம் உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வர ஒருங்கே எடுத்தணி கையே றினவளை ஆர்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம்பு அடுத்தணி வாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே 1 சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்சுருங் கும்மருங்குல் பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க் கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும் அரும்பொறை யாகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே 2 அப்புற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறுநோய் ஒப்புற்று எழில்நலம் ஊரன் கவர உள்ளும்புறம்பும் வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம் மெல்லணை யேதுணையாச் செப்புற்ற கொங்கையர் யாவர்கொல் ஆருயிர் தேய்பவரே 3 தேவா சுரர் இறைஞ்சும் கழலோன்தில்லை சேரலர்போல் ஆவா கனவும் இழந்தேன் நனவென்று அமளியின்மேல் பூவார் அகலம்வந்து ஊரன் தரப்புலம் பாய்நலம்பாய் பாவாய் தழுவிற் றிலேன் விழித்தேன் அரும் பாவியனே 4 செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக் கைம்முகங் கூம்பக் கழல்பணியாரிற் கலந்தவர்க்குப் பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன்று என்றில்லையே நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே 5 பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும் ஆங்கு வளைத்துவைத் தாரேனும் கொள்கநள் ளார் அரணம் தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய் ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோமன் உறாவரையே 6 தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கு எள்ளாது எவம்செய்து நின்று இனி இன்றுனை நோவதென் அத்தன்முத்தன் சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார் நவம்செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல்விடு நற்கலையே 7 தணியுறப் பொங்கும் இக்கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல் பிணியுறப் பேதைசென்று இன்றெய்துமால் அரவும்பிறையும் அணியுறக் கொண்டவன் தில்லைத் தொல்லாயநல் லார்கண்முன்னே பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே 8 இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து குரவணை யுங்குழல் இங்கிவளால் இக்குறியறிவித்து அரவணை யும்சடை யோன்தில்லை யூரனை ஆங்கொருத்தி தரவணை யும்பரி சாயின வாறுநம் தன்மைகளே 9 சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான் சிவந்தஅம் தாளணி ஊரற்கு உலகிய லாறுரைப்பான் சிவந்தபைம் போதும் அம்செம்மலர்ப் பட்டும் கட்டார் முலைமேல் சிவந்தஅம் சாந்தமும் தோன்றின வந்து திருமனைக்கே 10 குராப்பயில் கூழை இவளின்மிக்கு அம்பலத் தான்குழையாம் அராப்பயில் நுண்ணிடையார் அடங்கார் எவரேயினிப்பண்டு இராப்பகல் நின்றுணங்கு ஈர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று கராப்பயில் பூம்புன லூரன் புகும் இக்கடிமனைக்கே 11 வந்தான் வயலணி ஊரன் எனச்சின வாள்மலர்க்கண் செந்தா மரைச்செல்வி சென்றசிற் றம்பலவன் அருளான் முந்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவின் பைந்தாள் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே 12 வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் அன்பில் செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலம்சூழ் மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்டு ஊதவிண் தோய்பிறையோடு எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்கு எதிர்கொண்டதே 13 புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்பக் கலவிக் கடலுள் கலிங்கஞ்சென்று எய்திக் கதிர்கொள்முத்தம் நிலவி நிறைமது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள்போன்று உலவிய லாத்தனம் சென்றெய்தல் ஆயின ஊரனுக்கே 14 செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம் மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் வெவ்வாய் உயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள் இவ்வாறு அருள்பிறர்க்கு ஆகுமென நினைந்து இன்னகையே 15 மலரைப் பொறா அடிமானும் தமியள் மன்னன்ஒருவன் பலரைப் பொறாதென்று இழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த அலரைப் பொறாதன்று அழல்விழித்தோன் அம்பலம் வணங்காக் கலரைப் பொறாச்சிறியாள் என்னை கொல்லோ கருதியதே 16 வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து வல்லைப் பொலிவொடு வந்தமை யான்நின்று வான்வழுத்தும் தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலம்சிந்தை செய்பவரின் மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே 17 சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்கு இல்துணைச் சேவல்செய்வான் தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர்செம்ம லூரன் திண்தோள் மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத் தில்லை யானருளே போன்முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே 18 சேயே எனமன்னு தீம்புன லூரன்திண் தோளிணைகள் தோயீர் புணர்தவம் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகொலம் தீயே எனமன்னு சிற்றம் பலவர்தில் லைந்நகர்வாய் வீயே என அடியீர் நெடுந்தேர்வந்து மேவினதே 19 அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான் அரமங் கையரென வந்தணுகும் அவள் அன்றுகிரால் சிரம் அங்கயனைச் செற்றோன் தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப் புரமங் கையரின் நையாது ஐய காத்துநம் பொற்பரையே 20 கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம் அனலூர் சடையோன் அருள்பெற்றவரின் அமரப்புல்லும் மினலூர் நகையவர் தம்பால் அருள்விலக்கா விடின்யான் புனலூ ரனைப் பிரியும்புன லூர்கணப் பூங்கொடியே 21 இறுமாப்பு ஒழியுமன்றே தங்கை தோன்றினென் எங்கையங்கைச் சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்தோள் பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியினோடு இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணைமுலையே 22 வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்று ஏயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள் யாயாம் இயல்பிவள் கற்புநற் பால இயல்புகளே 23 விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை இறையமைத்த திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம் பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ அறலியல் கூழைநல் லாய்தமி யோமை யறிந்திலரே 24 திக்கின் இலங்குதிண்தோள் இறை தில்லைச்சிற் றம்பலத்துக் கொக்கின் இறகது அணிந்துநின் றாடிதென் கூடலன்ன அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால் தக்கின் றிருந்திலன் நின்றசெவ்வேல் எம்தனிவள்ளலே 25 அன்புடை நெஞ்சத்து இவள்பேதுற அம்பலத்தடியார் என்பிடை வந்து அமிழ்தூற நின்றாடி இருஞ்சுழியல் தன்பெடை நையத் தகவழிந்து அன்னம் சலஞ்சலத்தின் வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே 26 அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர் அந்தண்கயிலை மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந்தார் அவரென் நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல் பஞ்சார் அமளிப் பிரிதலுண்டோ எம்பயோதரமே 27 தெள்ளம் புனற்கங்கை தங்கும் சடையன்சிற் றம்பலத்தான் கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள் உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி உள்ளுதொறும் பள்ளம் புகும்புனல் போன்று அகத்தேவரும் பான்மையளே 28 தேன்வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும் வான்வள் துறைதரு வாய்மையன் மன்னு குதலையின்வா யான்வள் துறைதருமால் அமுதன்னவன் வந்தணையான் நான்வண்டு உறைதரு கொங்கை எவ்வாறுகொல் நண்ணுவதே 29 கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால் மயல்வந்த வாட்டம் அகற்றா விரதம் என்மாமதியின் அயல்வந்த ஆடரவு ஆடவைத்தோன் அம்பலம்நிலவு புயல்வந்த மாமதில் தில்லைநன் னாட்டுப் பொலிபவரே 30 கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோள் இழித்தால் போற்றான் செறியிருள் பொக்கமெண்ணீர் கன்றகன்றபுனிற்று ஈற்றா வெனநீர் வருவது பண்டின்று எம்மீசர்தில்லைத் தேற்றார் கொடிநெடு வீதியில் போதிர் அத்தேர்மிசையே 31 வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ் வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன் புயந்தலை தீரப் புலியூர் அரனிருக் கும்பொருப்பிற் கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே 32 தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும் ஓவியம் கண்டன்ன ஒண்ணுத லாள்தனக்கு ஓகையுய்ப்பான் மேவியம் கண்டனை யோவந்தனன் எனவெய்துயிர்த்துக் காவியம் கண்கழு நீர்ச்செவ்வி வௌவுதல் கற்றனவே 33 உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தருமிந் நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மாலறியா விடைமணி கண்டர்வண்தில்லை மென்தோகையன்னார் கண்முன்னங் கடைமணி வாள்நகையாய் இன்று கண்டனர் காதலரே 34 மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்கு ஊரர்நின்வாய் மெய்கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள்பெரியர் வைகொண்ட ஊசிகொல் சேரியில் விற்றெம் இல்வண்ணவண்ணப் பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே 35 கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய் வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக் கல்லாண்டு எடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று பல்லாண்டு அடியேன் அடிவலம் கொள்வன் பணிமொழியே 36 மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலும் தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னம் கித்தக் கருங்குவளைச் செவ்வி யோடிக் கெழுமினவே 37 கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுவந்த தவலங் கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச் சுவலங் கிருந்தநம் தோன்றல் துணையெனத் தோன்றுதலால் அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே 38 சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர்தில்லை நகர்வாய் வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த பால்தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம் கால்தான் தொடல்தொட ரேல்விடு தீண்டல் எம்கைத்தலமே 39 செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர் பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவியெற்கு வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறென் வளமனையில் கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே 40 மின்துன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர் சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்தென் னம்பொதியில் நன்றும் சிறியவர் இல் எமதில்லம் நல்லூரமன்னோ இன்றுன் திருவருள் இத்துணை சாலுமன் எங்களுக்கே 41 செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென்று அன்பர்சிந்தைக் கழுமிய கூத்தர் கடிபொழில் ஏழினும் வாழியரோ விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர் விழுமிய அல்லகொல்லோ இன்னவாறு விரும்புவதே 42 திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில் இருந்தேன் உயவந்து இணைமலர்க் கண்ணின் இன்நோக்கருளிப் பெருந்தேன் எனநெஞ் சுகப்பிடித்து ஆண்டநம் பெண்ணமிழ்தம் வருந்தேல் அதுவன்று இதுவோ வருவதொர் வஞ்சனையே 43 இயல்மன்னும் அன்புதந்தார்க்கு என்நிலை இமையோர் இறைஞ்சும் செயல்மன்னும் சீர்க்கழல் சிற்றம் பலவர்தென் னம்பொதியில் புயல்மன்னு குன்றில் பொருவேல் துணையாப்பொம்மென் இருள்வாய் அயல்மன்னும் யானை துரந்து அரிதேரும் அதரகத்தே 44 கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்து எதிர்த்தெங்கு நின்று எப்பரிசளித்தான் இமையோர் இறைஞ்சும் மதுத்தங் கியகொன்றை வார்சடை ஈசர்வண் தில்லைநல்லார் பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா எம்மைப் பூசிப்பதே 45 சிலைமலி வாணுதல் எங்கையது ஆகமெனச் செழும்பூண் மலைமலி மார்பின் உதைப்பத்தந் தான்தலை மன்னர்தில்லை உலைமலி வேற்படை ஊரனின் கள்வரில் என்னவுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே 46 ஆறூர் சடைமுடி அம்பலத்து அண்டர் அண்டம்பெறினும் மாறூர் மழவிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு நீறூர் கொடுநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச் சீறூர் மரையத ளின்தங்கு கங்குற் சிறுதுயிலே 47 ஐயுற வாய்நம் அகன்கடைக் கண்டுவண் தேருருட்டும் மையுறு வாட்கண் மழவைத் தழுவமற்று உன்மகனே மெய்யுற வாம்இதுன் இல்லே வருகென வெள்கிச்சென்றாள் கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே 48 காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்றியாவர்க்கும் ஊதியமே 49 திருச்சிற்றம்பலம்