ஐப்பசி மாத சிவகாமி அம்பிகா மகோற்சவ விஞ்ஞாபனம் (05-11-25 — 14-11-25)
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டின் நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில், பண்டத்தரிப்பான்புலப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்பாள் உடனுறையும் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் அம்பாளின் வருடாந்த மகோற்சவம் நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம் ஐப்பசி மாதம் 19ம் நாள் (05-11.2025) புதன்கிழமை அச்சுவனி நட்சத்திரமும் பூரணை திதியும், சித்தமிர்த யோகமும் கூடிய முற்பகல் 10.00 மணிக்கு எம்பெருமாட்டிக்கு துவஜாரோஹணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகி ஐப்பசி பூரம் தினத்தை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து தினங்கள் மஹோற்சவம் நிகழத் திருவருள் கைகூடியுள்ளது. அத்தருணம் அடியார்கள் அனைவரும் இத் தெய்வீக வழிபாட்டில் ஆசாரசீலர்களாக வருகைதந்து எம்பெருமாட்டியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கிரியா கால நிகழ்ச்சிகள்.
| நாள் | திகதி | திருவிழா | வாகனம் |
|---|---|---|---|
| ஐப்பசி 18, செவ் | 04-11-25 | மாலை 6.00 அனுஞ்ஞை விநாயகர் வழிபாடு கிராம சாந்தி பிரவேச பலி வாஸ்துசாந்தி மிருத்சங்கிரகணம் | |
| ஐப்பசி 19, புதன் | 05-11-25 | காலை 7.00 மணி- கும்பபூசை அபிசேகம், விசேட புசை காலை: 9.00 வசந்தமண்டபூசை காலை 10.00- கொடியேற்றம், நவசந்தி ஆவாகன உற்சவம், அருட்பிரசாதம் வழங்கல், மாலை 5.00 – சாயரட்சைப் பூசை. | இடபவாகனம் |
| ஐப்பசி 20, வியா | 06-11-25 | இரண்டாம் திருவிழா | சற்ப வாகனம் |
| ஐப்பசி 21, வெள் | 07-11-25 | மூன்றாம் திருவிழா | அன்னப்பட்சி வாகனம் |
| ஐப்பசி 22, சனி | 08-11-25 | நான்காம் திருவிழா | மஞ்சம் |
| ஐப்பசி 23, ஞாயிறு | 09-11-25 | ஐந்தாம் திருவிழா | கைலாய வாகனம் |
| ஐப்பசி 24, திங்க | 10-11-25 | ஆறாம் திருவிழா | சிங்க வாகனம் |
| ஐப்பசி 25, செவ் | 11-11-25 | ஏழாம் திருவிழா | குதிரை வாகனம் |
| ஐப்பசி 26, புதன் | 12-11-25 | எட்டாம் திருவிழா | சப்பைரத உற்சவம் |
| ஐப்பசி 27 வியா | 13-11-25 | ஒன்பதாம் திருவிழா அதிகாலை 5.00 மணி அபிஷேகம், காலை 6.30-விசேட பூசை, காலை 8.00- வசந்தமண்டபப் பூசை, காலை 10.00 -சிவகாமி அம்மை இரதோற்சவத்தில் ஆரோகணம், தேர் வலம் வந்தபின் பச்சை சாத்தி இரத அவரோகணம் நடைபெற்று பின் பிராயச்சித்த அபிஷேகம், திருவருட் பிரசாதம் வழங்கல். | இரதோற்சவம் |
| ஐப்பசி 28 வெள்ளி | தீர்தோற்சவமும் அபிஷேகம், விஷேட புசை காலை:7.30- வசந்தமண்டப பூசை அம்பாள் சிவகங்கை தீர்த்தத் திருக்குளத்துக்கு எழுந்தருளி தீர்த்த உற்சவம் நடைபெறும். ஆலயத்தை வந்தடைந்து மஹாயாக பூரனாதி, விஷேச பூசை, மாலை 5.00 -வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து துவஜா அவரோகணம், நவசந்தி விஜர்சனம், மெளன உற்சவம், ஆச்சார்ய உற்சவம், குரு ஆசியுரை, திருவருட் பிரசாதம் வழங்கல் | திர்த்தோற்சவம் | |
| ஐப்பசி 29, சனி | 15-11-25 | காலை: 8.0 மணி பிராயச்சித்த அபிஷேகம், மாலை 5.00 மணி விசேட பூசை, வைரவர் பொங்கல், விசேட பூசையைத் தொடர்து சுவாமி திருவீதியுலா | வைரவர் பொங்கல் |
இரதோற்சவம், தீர்த்தோற்சவம் தவிர்ந்த உற்சவ நாட்களில் தினமும் காலை:8.0 மணிக்கு அபிஷேகத்தைத் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டபப் பூஜை நடைபெற்று அம்பாள் உள், வெளி வீதியுலா வரும் அருட்பெருங்காட்சி நடைபெறும், இரவு திருவிழா வசந்த மண்டப் பூஜை:7.00 மணிக்கு ஆரம்பமாகும்.
| ஆலய குருக்கள் சிவபூஜா துறந்தரர் சிவஸ்ரீ தி. நடராசா குருக்கள் (பொற்பதி விநாயகர் ஆலய பிரதம குரு) உதிவி ஐயா ஆ. அபிசாண் சர்மா | மகோற்சவ குருக்கள் மகேஸ்வர குரு கிரியா திலகம் சி.கஜரூப குருக்கள் (தாவடிப்பிள்ளையார்) | ஆலய பிரதமகுருக்கள் சபரிமலை குருசுவாமி ஸ்வர்க்கியஸ்ரீ பிரம்மஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் ஆசியுடன் பிரம்மஸ்ரீ வாசு ஜெயவஸ்தாங்க குருக்கள் (ஐயப்பன் கோவில் ஆதினம், உரும்பிராய்) |
“அனைவரும் வருக சிவன் சக்தி அருள் பெறுக”
“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
ஆதீன கர்த்தா
சிவஞானம் சிவபாலன்.